ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 27 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 27 2018

  • அருணாச்சலப் பிரதேசத்தில், பல கலாச்சார சமூக நிகழ்வான மைத்ரீ திவாஸ் தவாங்கில் நவம்பர் 28 மற்றும் 29ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • அருணாச்சலப் பிரதேசத்தில், நவம்பர் 28 முதல் 30 வரை இட்டாநகரில் அருணாச்சல் இலக்கிய விழா நடைபெறுகிறது.
  • பீகார் முதலமைச்சர் நாட்டின் இரண்டாவது உயரமான 70 அடி உயரமான புத்தர் சிலையை ராஜ்கிர், நளந்தா மாவட்டத்தில் திறந்துவைத்தார்.
  • CSIR-IMTECH, சண்டிகரில் ஒரு ‘உயர்-நிலை திறன் மேம்பாட்டு மையம்‘ அமைப்பதற்காக ஜெர்மனியின் மெர்க் உடன் ஒரு புதிய கூட்டணியுடன் அறிமுகப்படுத்தியது.
  • நாகாலாந்து முதலமைச்சர் மாநில சுற்றுலா போலீசை அறிமுகப்படுத்தினார்.
  • வடகிழக்குப் பகுதியில் சுற்றுலா போலீசை அறிமுகம் செய்த இரண்டாவது மாநிலமாக நாகலாந்து திகழ்கிறது.
  • லாஜிக்ஸ் இந்தியா 2019 மாநாட்டின் இலட்சினை மற்றும் தகவல் கையேட்டை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு வெளியிட்டார்.
  • நேபாள அரசு நாட்டின் உத்தியோகபூர்வ துறை ஊழியர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே, டிசம்பர் 11 அன்று ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்சிட் உடன்படிக்கை இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார்.
  • ருமேனியா “சர்வதேச பயங்கரவாதத்தின் மீதான விரிவான உடன்படிக்கைக்காக (CCIT) ஐ.நா.வில் இந்தியாவின் முன்மொழிவை வலுவாக ஆதரித்தது”.
  • தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட்(NPCC) இந்திய அரசின் மினிரத்னா: வகை-I அந்தஸ்து பெற்றுள்ளது.
  • ஐ.சி.சி டி20 பந்து வீச்சாளர்களின் டாப் 5 தரவரிசைப் பட்டியலில் முதல்முறையாக நுழைந்து மூன்றாம் இடம்பிடித்தார் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்.
  • ஐ.நா. அதன் உலகளாவிய நிலையான நகரங்கள் 2025 துவக்கத்தில் பங்கு பெற உத்தரப்பிரதேசத்தின் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • ஹைதராபாத்தில் “நமது வாக்கு – நமது எதிர்காலம்” எனும் தலைப்பில் ஐந்து நாள் கண்காட்சி தெலங்கானாவில் திறந்து வைக்கப்பட்டது.
  • ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசி மகளிர் உலக ட்வென்டி 20 அணி XI கேப்டனாக தேர்வு.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!