நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –29 & 30, 2019

0

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –29 & 30, 2019

முக்கியமான நாட்கள்

செப்டம்பர் 30 – உலக காது கேளாதோர் தினம்
  • உலக காது கேளாதோர் தினம் 2019 செப்டம்பர் மாதத்தில் கடைசி திங்கட்கிழமை கொண்டாடப்படும். 2019 இல் இது செப்டம்பர் 30 அன்று கொண்டாடப்படுகிறது.
  • உலக காது கேளாதோர் தினம் “காது கேளாதோர் சமுதாயத்திற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் எவ்வளவு பங்களிக்க முடியும் என்பதைக் காண்பிப்பதற்கும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அனுசரிக்கப்படுகிறது.
செப்டம்பர் 30 – சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்
  • 24 மே 2017 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நாடுகளை இணைப்பதிலும், அமைதி, புரிதல் மற்றும் வளர்ச்சியை வளர்ப்பதிலும் மொழி நிபுணர்களின் பங்கு குறித்து 71/288 தீர்மானத்தை நிறைவேற்றி, செப்டம்பர் 30 ஐ சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாக அறிவித்தது.
  • சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் என்பது மொழி வல்லுநர்களின் செயல்களான நாடுகளை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு , உரையாடல், புரிதல் மற்றும் ஒத்துழைப்பை எளிதாக்குதல், வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தல் மற்றும் உலக அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துதல் போன்ற பணிகளை நினைவுகூருவதற்கான  ஒரு வாய்ப்பாகும்.

தேசிய செய்திகள்

மன்னார் வளைகுடாவில் 62 புதிய கடல் இனங்கள் காணப்பட்டன
  • மன்னார் வளைகுடாவில் உயிரியல் வளங்கள் குறித்த சமீபத்திய அடிப்படை ஆய்வின் போது சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்.டி.எம்.ஆர்.ஐ) 62 புதிய கடல் உயிர் இனங்கள் மற்றும் 77 புதியபவளப்பாறை பகுதிகளை பதிவு செய்துள்ளது.
  • ஆய்வில் புதிதாக 14 வகையான கடினமான பவளப்பாறைகள் , 17 வகையான மென்மையான பவளப்பாறைகள், 11 வகையான கடற்பாசிகள், 16 வகையான மொல்லஸ்க்குகள் மற்றும் இரண்டு வகையான கடற்பாசிகள் மற்றும் இரண்டு மீன்கள் என மொத்தம் 62 புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன மேலும் . கூடுதலாக, அடையாளம் காணப்படாத 50 க்கும் மேற்பட்ட இனங்கள் காணப்பட்டன, அவை மன்னார் வளைகுடாவுக்கு புதியவை என்று நம்பப்படுகிறது.

சர்வதேச செய்திகள்

ரஷ்யாவில் மகாத்மா காந்தி மற்றும் லியோ டால்ஸ்டாய் பற்றிய கண்காட்சி
  • ரஷ்யாவில் டால்ஸ்டாயின் பிறந்த இடமான யஸ்னயா பொலியானாவில் மகாத்மா காந்தி மற்றும் லியோ டால்ஸ்டாய் குறித்த தனித்துவமான கண்காட்சியை மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் (MoEF & CC) ஸ்ரீபிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார். கண்காட்சி அவர்களின் கடித மற்றும் அவர்களின் சிந்தனை செயல்முறையை மிகவும் கலை முறையில் வழங்கி சிறப்பித்தது.
நேபாளத்தின் மிகப்பெரிய திருவிழா ‘படா தஷைன் தொடங்கியது
  • நேபாளத்தின் படா தஷைன் என்ற மிகப்பெரிய திருவிழா தொடங்கியது. திருவிழா நவராத்திரியின் முதல் நாளில் காட்ஸ்தபனாவுடன் தொடங்கியது . 15 நாள் திருவிழா அஸ்வின் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அவர்கள்  சொந்த இடங்களுக்கு சென்று படா தஷைன் திருவிழாவை தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடுவார்கள்.
குரு நானக் தேவின் 550 வது பிறந்த நாளைக் கொண்டாடும்  விதமாக நேபாளம் நாணயங்களை வெளியிட்டது
  • குரு நானக் தேவின் 550 வது பிறந்த நாளைக் கொண்டாட, நேபாள ராஸ்ட்ரா வங்கி அவரது நினைவு நாணயங்களை வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு விழாவில் காத்மாண்டுவில் 2,500, 1,000 மற்றும் 100 நேபாளி ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன.

பாதுகாப்பு செய்திகள்

கடற்படையின் முதல் புதிய போர் கப்பல், ஐ.என்.எஸ் ‘நீலகிரி
  • கடற்படையின் ஏழு புதிய போர் கப்பல்களில் முதலாவது போர் கப்பலான ஐ.என்.எஸ் ‘நீலகிரி’ மும்பையில் உள்ள மசகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்டில் திறந்து வைக்கப்பட்டது.
  • ஐ.என்.எஸ் நீலகிரி என்பது திட்டம் 17 ஏவின் முதல் போர் கப்பல் ஆகும் . திட்டம் 17A ஃபிரிகேட்ஸ் என்பது சிவாலிக் வகுப்பு  போர் கப்பல்களின் வடிவமைப்பு போன்றதாகும். இது மிகவும் மேம்பட்ட  அம்சங்கள் மற்றும் உள்நாட்டு ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் கொண்டது,  ஒருங்கிணைந்த கட்டுமான முறையைப் பயன்படுத்தி இந்த போர் கப்பல்கள் கட்டப்படுகின்றன.

புத்தகங்கள் & ஆசிரியர்கள்

“நேபாளத்தின் சீக்கிய பாரம்பரியம்”
  • காத்மாண்டுவில் “நேபாளத்தின் சீக்கிய பாரம்பரியம்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள இந்த புத்தகம் நேபாளத்தின் சீக்கிய தொடர்பை எடுத்துக்காட்டுகிறது மேலும் குரு நானக் தேவ், தனது மூன்றாவது உதாசியின் போது நேபாளம் வழியாக பயணம் செய்தது மற்றும் நேபாளத்தின் வளர்ச்சிக்கு சீக்கிய சமூகத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

விருதுகள்

இந்தியாவின் ஜனாதிபதி விமானப் படைக்கு ஜனாதிபதியின் வர்ண விருதை வழங்கினார்
  • இந்தியாவின் மாண்புமிகு ஜனாதிபதி ஸ்ரீ ராம் நாத் கோவிந்த் கோபால்பூர் ராணுவ நிலையத்தில் இராணுவ வான் பாதுகாப்புப் படையினருக்கு ஜனாதிபதியின் வர்ண விருதை செப்டம்பர் 28 அன்று வழங்கினார்.
  • அமைதி மற்றும் விரோதங்களின் போது தேசத்தின் பாதுகாப்பிற்கு அவர்கள் அளித்த மதிப்புமிக்க பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக ஆயுதப்படைகளின் படைப்பிரிவுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த மரியாதை இதுவாகும் .
  • ஆர்டில்லரி கார்ப்ஸின் ஒரு பகுதியாக 1940 முதல் ராணுவ வான் பாதுகாப்புப்படை செயலட்டு வருகிறது , இருப்பினும், சுயாதீனமான செயல்பட 1994 இல் இது அங்கீகாரம் பெற்றது.
டெல்லி புத்தக கண்காட்சி 2019 இல் வெளியீடுகள் பிரிவு ஒன்பது விருதுகளைப் பெற்றுள்ளது
  • டெல்லி புத்தக கண்காட்சி 2019 இல் பங்கேற்றதற்காக வெளியீடுகள் பிரிவு பல்வேறு பிரிவுகளில் ஒன்பது விருதுகளை வென்றுள்ளது. இந்த விருதுகளை டெல்லி புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்யும் இந்திய வெளியீட்டாளர்களின் உச்ச அமைப்பான இந்திய வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பு வழங்கியுள்ளது.

விளையாட்டு செய்திகள்

செர்பியா ஜூனியர் & கேடட் ஓபனில் இந்திய ஜூனியர் சிறுவர்கள் வெண்கலப் பதக்கம் வென்றனர்
  • டேபிள் டென்னிஸில், இந்திய ஜூனியர் சிறுவர்களான ரீகன் அல்புகெர்கி மற்றும் யஷான்ஷ் மாலிக் ஆகியோர் நெதர்லாந்தின் லோட் ஹல்ஷோஃப்புடன் ஜோடியாக போட்டியிட்டு மும்பையில் நடந்த செர்பியா ஜூனியர் மற்றும் கேடட் ஓபனில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
மாலத்தீவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி
  • பேட்மிண்டனில், மாலத்தீவு சர்வதேச போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பட்டத்தை இந்திய ஷட்லர் கௌஷல் தர்மர் வென்றார், ஆண்களில் சிறில் வர்மாவை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியா முதல் முறையாக SAFF U-18 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது
  • கால்பந்தில், காத்மாண்டுவில் நடந்த SAFF 18 வயதுக்குட்பட்ட சாம்பியன்ஷிப் 2019 இறுதிப் போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பங்களாதேஷை தோற்கடித்தது.
  • இது இந்தியாவின் முதல் SAFF U-18 கோப்பை. இந்தியா 2015 இல் இரண்டாம் இடத்தைப் பிடித்தது மற்றும் 2017 இல் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!