நடப்பு நிகழ்வுகள் – மே 31, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மே 31, 2019

முக்கியமான நாட்கள்

மே 31 – உலக புகையிலை தினம்

  • உலக சுகாதார அமைப்பு (WHO) ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 31ம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஒரு சிகரெட்டில் 4000 வகையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் பாதிக்கு மேல் மோசமான வேதிப்பொருட்கள் ஆகும்.
  • உலக புகையிலை தினம் 2019 “புகையிலை மற்றும் நுரையீரல் சுகாதாரத்தில் இந்த ஆண்டு கவனம் செலுத்தவுள்ளது.

தேசிய செய்திகள்

தெலுங்கானா

ஜூன் மாதம் முதல் மேம்படுத்தப்பட்ட சமூக நல பாதுகாப்பு ஓய்வூதியம்     

  • ஜூன் மாதம் முதல் ஆஸரா மற்றும் சமூக நல பாதுகாப்பு ஓய்வூதியம் போன்ற பல்வேறு வகையான ஓய்வூதியங்களை நிறைவேற்றுவதற்கான உறுதிமொழியை தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஜூலை மாதத்திலிருந்து ஓய்வூதிய பயனாளிகள் பயனடைவர். தற்போதுவரை 39 லட்ச ஓய்வூதிய பயனாளிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு & காஷ்மீர்

ஜம்மு & காஷ்மீரில் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான நடவடிக்கை திட்டம்

  • 2020 ஆம் ஆண்டில் இறப்பு விகிதத்தை (IMR) குறைக்கும் முயற்சிக்காண திட்டத்தை ஜம்மு & காஷ்மீர் அரசு தீட்டியுள்ளது, இதனால் ஒரு நிலையான வளர்ச்சி இலக்கை அடையும் என்று அம்மாநில அரசு பிரதிநிதி கூறியுள்ளார்.

சர்வதேச செய்திகள்

US National Spelling Bee போட்டியில் ஆறு இந்திய மாணவர்கள் வெற்றி

  • அமெரிக்காவில் நடைபெற்ற US National Spelling Bee போட்டியில் 550 க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை தோற்கடித்து 50,000 அமெரிக்க டாலர்கள் மதிக்கதக்க வீடுகளையும் US National Spelling Bee பட்டத்தையும் வென்ற 8 வெற்றியாளர்களில் ஆறு மாணவர்கள் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷிக் காந்தாஸ்ரி, ஷாகத் சுந்தர், ஷிருதிகா பாடி, சோஹம் சுகதங்கர், அபிஜாய் கொடலி, ரோஹன் ராஜா ஆகியோர் ஆவர்.

தெற்கு சூடான் மீதான தடையை ஐ.நா. நீட்டித்தது

  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், தெற்குசூடான் மீதான பொருளாதார மற்றும் ஆயுதத் தடையை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது. 2020 மே 31 வரை சூடானில் இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. தெற்கு சூடானில் ஆயுதத்தடை மற்றும் போரை தூண்டியதற்காக எட்டு தெற்கு சூடானிய நாட்டினர் மீது சொத்து முடக்கம் மற்றும் உலகளாவிய பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.

அறிவியல்

நெப்டியூன் பாலைவனத்தில் ‘புதிய கிரகம்’ கண்டுபிடிக்கப்பட்டது

  • வானியலாளர்கள் நெப்டியூன் பாலைவனத்தில் சொந்த வளிமணடலத்தைக் கொண்ட ஒரு முரட்டு கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்தனர். NGTS-4b, அல்லது ‘தடை செய்யப்பட்ட கிரகம்’ என்றழைக்கப்படும் இந்த கிரகம் நெப்டியூனை விட சிறியது ஆனால் பூமியை விட மூன்று மடங்கு பெரியது என பிரிட்டனின் வார்விக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறினார்.

வணிக  மற்றும் பொருளாதார செய்திகள்

2020 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1% வளர்ச்சி அடையும் என FICCI சர்வே கணித்துள்ளது

  • நாட்டின் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020 நிதியாண்டில் 7.1 சதவிகிதம் மற்றும் 2021 நிதியாண்டில் 7.2 சதவிகிதம் வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. FICCI இன் பொருளாதார ஆய்வின் படி, 2019-20 நிதியாண்டில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வளர்ச்சி – 6.8 சதவிகிதம் மற்றும் 7.3 சதவிகிதமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

மாநாடுகள்

BIMSTEC தலைவர்கள் இந்திய பிரதமருடன் இருதரப்பு சந்திப்பு

  • பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா விளிம்பு நாடுகளின் சந்திப்பில் தலைவர்கள் பங்கேற்றனர்.
  • இலங்கை அதிபர் திரு மைத்ரி பால சிறிசேனா, வங்கதேச அதிபர் அப்துல் ஹமீத், நேபாள பிரதமர் கே பி ஷர்மா ஒலி, பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந் குமார் ஜகநாத் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

நியமனம்

ஐ.நா. துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவழியை சேர்ந்த அனிதா பாட்டியா நியமனம்

  • இந்திய வம்சாவழியை சேர்ந்த அனிதா பாட்டியா, பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான [வளங்களை நிர்வகித்தல், நிலைத்தன்மை மற்றும் கூட்டணி] ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
  • பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிர்வாக இயக்குநராக அனிதா பாட்டியா ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்ரெஸால் நியமிக்கப்பட்டார்.

புதிய கடற்படை தளபதியாக அட்மிரல் கரம்பீர் சிங் பொறுப்பேற்றார்

  • இந்திய கடற்படைக்கு புதிய தளபதியாக கரம்பீர் சிங் தேர்வு செய்யப்பட்டார். டெல்லியில் நடைபெற்ற விழாவில் புதிய கடற்படை தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • கடந்த ஆண்டு, கிழக்கு கடற்படைத் தளபதியாக விசாககபட்டினம் செல்லுமுன், புது தில்லி தலைமையகத்தில் கடற்படைத் துணைத் தளபதியாக கரம்பீர் சிங் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை-அட்மிரல் அதுல் குமார் ஜெயின் ENC இன் தலைவராக பதவி ஏற்றார்

  • துணை அட்மிரல் அதுல் குமார் ஜெயின், கிழக்கு கடற்படை கட்டளையின் (ENC) [Flag Officer Commanding-in-Chief (FOC-in-C)] துணை-அட்மிரலாக பதவி ஏற்றார்.

விருதுகள்

ராஜஸ்தான் சுகாதார துறைக்கு WHO விருது

  • இந்த ஆண்டுக்கான உலக சுகாதார அமைப்பு [WHO] விருதுக்கு ராஜஸ்தான் அரசு மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை புகையிலை கட்டுப்பாட்டில் செய்த சாதனைகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • புகையிலை இல்லா முயற்சிகளுக்காக WHO விருதை பெறும் நாட்டின் ஒரே அரசாங்க அமைப்பு இராஜஸ்தான் மாநில சுகாதாரத் துறை ஆகும்.

விளையாட்டு செய்திகள்

துப்பாக்கிச்சுடும் போட்டி

  • ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 5 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
  • சீனா 2 தங்கப்பதக்கத்துடன் மொத்தம் 9 பதக்கங்களை வென்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – மே 31, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!