நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 08, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 08, 2019

 முக்கியமான நாட்கள்

ஜூன் 8 – உலக  பெருங்கடல்   தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ம் தேதி உலக கடல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வை குறித்து 1992ம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா. மாநாட்டில் கனடா முதன்முறையாக கோரிக்கையை முன்வைத்தது. ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அன்று முதல் உலக அளவில் பெருங்கடல் திடடம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கடல் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இந்த தினத்தின் நோக்கம் கடல் மீது மனித நடவடிக்கைகளின் தாக்கத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதோடு, உலகம் முழுவதும் உள்ள குடிமக்களின் ஒத்துழைப்போடு சமுத்திரங்களின் நிலையான மேலாண்மைக்கு ஒரு திட்டத்தை செயல்படுத்துவதே ஆகும்.
  • 2019 தீம் : பாலினம் மற்றும் பெருங்கடல்
ஜூன் 8 – உலக மூளைக்கட்டி தினம்
  • உலக மூளைக்கட்டி தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 8ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. முதன் முதலில் இந்த நாள் ஜெர்மன் மூளைக்கட்டி சங்கத்தால் அனுசரிக்கப்பட்டது. இது ஓர் இலாபநோக்கற்ற அமைப்பு. மூளையில் செல்களின் அசாதாரணமான வளர்ச்சி மூளைக்கட்டி என்று வழங்கப்படுகிறது. இந்த தினம் அனைத்து மூளைக்கட்டி நோயாளிகளுக்கும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, 2000ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது.

தேசிய செய்திகள்

இந்திய உணவுக் கூட்டுத்தாபனம் சேமிப்பிற்க்கான இடத்தை  அதிகரிக்க திட்டமிட்டுள்ளது
  • 2022 ஆம் ஆண்டளவில் 100 லட்சம் டன் சேமிப்பிடத்தை இலக்காகக் கொள்ளும் வகையில், இந்திய உணவு கழகம் (எஃப்.சி.ஐ.) சேமிப்பகத்தின் கட்டுமானத் திட்டத்தை துரிதப்படுத்த புதிய திட்டங்களை வகுத்துள்ளது.
  • கடந்த சில ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட அறுவடை மற்றும் அதிக கொள்முதல் மூலம் FCI சேமிப்பகத்தின் உணவுப்பொருட்களின் அளவு தேவைக்கு அதிகமானதை விட  இரண்டு மடங்கு ஆகும் .
ஆந்திரப் பிரதேசம்
ஆந்திர அரசாங்கத்தின் கோதாவரி-பெனா நதி இணைத் திட்டங்களை NGT நிறுத்தி வைத்தது
  • தேசிய பசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட அனுமதி இல்லாததால் ஆந்திராவின் அரசாங்கத்தின் கோதாவரி-பெனா இணைப்புத் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளது. ஆந்திரா மாசு கட்டுப்பாட்டு வாரியம் சட்டத்தின் படி தகுந்த நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என்று NGTயின்  நீதிபதி  ஆதர்ஷ் குமார் கோயல் கொண்ட ஒரு அமர்வு கூறியுள்ளது.
நீர் ஏடிஎம்களை ஸ்மார்ட் கார்டு பயன்முறையில் கர்நாடக அரசு மாற்ற உள்ளது
  • அனைத்து குடிநீர் ஏடிஎம்களும் விரைவில் நாணய அடிப்படையிலான சேவையிலிருந்து ஸ்மார்ட் கார்ட் அடிப்படையிலான அமைப்புக்கு மாற்றப்பட உள்ளது. மக்களுக்கு எல்லா நேரங்களிலும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஏ.டி.எம். களை தனியார்மயமாக்குவதற்கு மாநில அமைச்சரவை முடிவு செய்தது.
  • மாநிலத்தில் 18,000 ஏ.டி.எம். கள் உள்ளன அவற்றுள் 16,000 ஏ.டி.எம். கள் பயன் பாட்டில் உள்ளன.

சர்வதேச செய்திகள்

அமைதிக்கான காந்தி சைக்கிள் பேரணிசவுதி அரேபியாவில் ஏற்பாடு செய்யப்பட்டது
  • மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் சவூதி இந்திய தூதரகம் தூதரக காலாண்டு ஆணையம் மற்றும் சவுதி சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்புடன் இணைந்து ‘அமைதிக்கான காந்தி சைக்கிள் பேரணியை ‘ ஏற்பாடு செய்துள்ளது

அறிவியல்

சர்வதேச விண்வெளி நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட உள்ளது.
  • அமெரிக்க விண்வெளி மையமான NASA, சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் விண்வெளி துறையை   வணிக முயற்சிகளுக்காக திறந்து வைக்க உள்ளனர். ஆண்டுக்கு இரண்டு குறுகிய தனியார் விண்வெளி பயணங்கள் வரை இருக்கும். பயணங்கள் 30 நாட்கள் வரை இருக்கும். ஒரு டஜன் தனியார் விண்வெளி வீரர்கள் நாசாவின் படி வருடத்திற்கு ISS ஐப் பார்வையிட முடியும் என தெரிவித்துள்ளது.
ஆர்.பி. மோசமான கடன்களுக்கு புதிய வழிகாட்டுதலை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ரிசர்வ் வங்கி மோசமான கடன்களுக்கான தீர்வை கொண்டு வர ஒரு புதிய கட்டமைப்பை வெளியிட்டுள்ளது, இது மன அழுத்தத்தின் காரணமாக ஒரு நாள் கால இடைவெளியிலிருந்து 30 நாள் என நீட்டியுள்ளது.  கடன் வாங்கியவர் கடன் கட்ட முடியாத நிலையில் இருப்பதாக  தெரிவிக்கப்பட்டால்,இயல்புநிலை நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கடனளிப்போர் கணக்கை முதல் பார்வை ஆய்வு செய்ய வேண்டும்.

வணிக மற்றும் பொருளாதார செய்திகள்

பெருநிறுவன விவகார அமைச்சகம் மற்றும் செபி ஒழுங்குமுறை இடையே கட்டுப்பாட்டு மேற்பார்வையை இறுக்கம்  செய்ய ஒப்பந்தம் கையெழுத்து
  • பெருநிறுவன விவகார அமைச்சகம் (MCA) மற்றும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஆகிய இரண்டு ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு இடையே தரவு பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையெழுத்தானது.
  • பொருளாதாரத்தின் முக்கிய துறைகளை பாதிக்கும் பெருநிறுவன மோசடி அதிகரிப்பால் கண்காணிப்புக்கான தேவை அதிகரித்து வந்த நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தனியார் துறை பொருளாதார வளர்ச்சியில் அதிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் அதற்கு ஒரு வலுவான கார்ப்பரேட் நிர்வாக ஆணையம் அமைக்கப்படுவதே இந்த நேரத்தின் தேவையாக உள்ளது.

நியமனங்கள்

பிரயுத் சான்ஓச்சாவை தாய்லாந்து பாராளுமன்றம் பிரதமராக தேர்ந்தெடுத்தது
  • தாய்லாந்தில், 2014-ல் ஆட்சி கவிழ்ப்புக்கு காரணமான பிரயுத் சான்-ஓச்சா பிரதமராக பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் பிரயுத் பிரதிநிதிகள் சபையில் மிக அதிக இடங்களைப் பெற்றார். பிரயுத், இராணுவ ஆதரவு பெற்ற பாலாங் பிரச்சாரத் கட்சியின் வேட்பாளர் ஆவார், இவரது கட்சி 116 இடங்களைப் பெற்றுள்ளது, சிறிய கட்சிகளிலிருந்து சட்டமியற்றும் உறுப்பினர்களும் இதில் உள்ளனர்.

விருதுகள்

தேசிய வகுப்புவாத ஒற்றுமை விருதுகள்
  • வகுப்புவாத ஒற்றுமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக தகுதி வாய்ந்த தனிநபர்களிடமிருந்தும், அமைப்புகளிடங்களிலிருந்தும் தேசிய வகுப்புவாத ஒற்றுமை விருது 2019-க்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் ஒரு தன்னாட்சி சபை, வகுப்புவாத ஒற்றுமைக்கான தேசிய அறக்கட்டளை மூலம் இந்த தேசிய வகுப்புவாத ஒற்றுமை விருதுகள் நிறுவப்பட்டுள்ளது.
  • தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் வகுப்புவாத ஒற்றுமையை ஊக்குவிப்பதில் நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு காலமும் தனிநபருக்கு குறைந்தபட்சம் பத்து ஆண்டு காலமும் பணியாற்றியவர்கள் இந்த தேசிய வகுப்புவாத ஒற்றுமை விருதுக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.

விளையாட்டு செய்திகள்

பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு, இந்திய வீரர்கள்  நான்கு ஒதுக்கீடு இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்
  • நெதர்லாந்தில் நடந்த உலக பாரா சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக விளையாடியதன் மூலம் அடுத்து வரும் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு, இந்திய வீரர்கள் ரீகர்வ் மற்றும் காம்பௌன்ட் பிரிவுகளில்  நான்கு  இட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர்.
  • ஆண்களுக்கான காம்பௌண்ட் பிரிவில், ஜம்முவின் ராகேஷ் குமார் முதலில் தகுதிபெற்றார், பின்னர் ராஜஸ்தானின்  ஷியாம் சுந்தர் ஸ்வாமி அடுத்ததாக தகுதி பெற்றார்.
பி.சி.சி. யின்    தேர்தல் ஆணையராக முன்னாள் தேர்தல் ஆணையர் என்.கோபாலாஸ்வாமி நியமிக்கப்பட்டுள்ளார் 
  • பி.சி.சி.ஐ யின் வருடாந்தர பொதுக்கூட்டத்திற்கு தேர்தல் ஆணையராக முன்னாள் தேர்தல் ஆணையர் என்.கோபாலாஸ்வாமி நியமிக்கப்பட்டுள்ளார். பி.சி.சி.ஐ.யின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் தேர்தல் அக்டோபர் 22 ஆம் தேதி நடைபெறும் என்று நிர்வாகிகள் குழு கடந்த மாதம் அறிவித்தது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 08, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!