நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 04, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 04, 2019

முக்கியமான நாட்கள்

ஜூன் 4 – ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம்
  • 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி, ஐ.நா. பொதுச் சபை, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4 ஆம் தேதியை ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினமாக அனுசரிக்க முடிவு செய்தது.
  • இந்த நாளின் நோக்கம் உலகெங்கிலும் உடல் ரீதியான, மன, ரீதியான துஷ்பிரயோகத்தின் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலிகளை உணர்த்துவதாக உள்ளது மேலும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஐ.நாவின் உடன்படிக்கையை இந்த நாள்  உறுதிப்படுத்துகிறது. வரலாற்றில் மிக விரைவாக  ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் ஒப்பந்தமான குழந்தைகளின் உரிமைகள் பற்றிய ஒரு உடன்படிக்கை மூலமாக ஐ.நாவின் இந்த பாதுகாப்பு வேலை செயல்படுத்தப்படுகிறது.

தேசிய செய்திகள்

டெல்லி
பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை டெல்லி அரசு அறிவித்துள்ளது
  • பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார் இந்த திட்டத்தின் கீழ் அனைத்து டி.டி.சி. பஸ், க்ளஸ்டர் பஸ் மற்றும் மெட்ரோ ரயில்களில் இலவசமாக பெண்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.மேலும் ஜூன் 8 ஆம் தேதி முதல் நகரின் அணைத்து பேருந்துகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொறுத்தப்படவுள்ளதாகவும் டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.
மேகாலயா
ஷில்லாங்கில் IBSD ஆர்க்டிடேரியத்தை திறந்துவைத்து  
  • மேகாலயாவில் பயோடெக்னாலஜி துறையின் ஒரு தேசிய நிறுவனமான உயிரி-வள மற்றும் நிலையான வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (IBSD) ஷில்லாங்கில்  தனது ஆராய்ச்சி மையத்திலிருந்து  ஆர்க்டிடேரியத்தை திறந்து வைத்தது.
  • இது மூன்று மாதங்களிலே உருவாக்கப்பட்ட நாட்டின் மிகப்பெரிய ஆர்க்டிடேரியம் ஆகும், இவ்வாராய்ச்சி நிறுவனம் கடந்த ஆண்டில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் மேகாலயா மற்றும் அண்டை மாநிலத்தில் இருந்து சேர்த்த 20 வகையான ஆர்க்கிட் மலர்கள் இதில் வைக்கப்பட்டுள்ளது.
கேரளா
கேரளா மாணவருக்கு  நிப்பா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
  • கேரளாவில், 23 வயதான கல்லூரி மாணவருக்கு நிப்பா வைரஸ் தொற்று ஏற்பட்டது  NIPAH வைரஸ் தாக்குதலில் இருந்து சமாளிக்க மத்திய அரசு ஆறு உறுப்பினர்களை கேரளாவுக்கு அனுப்பியுள்ளதகவும் மேலும் அணைத்து விதமான உதவிகளையும் கேரளாவிற்கு அளிப்பதாக மத்திய சுகாதாரதுறை அமைச்சர்  டாக்டர் ஹர்ஷ் வர்தன் உறுதியளித்தார்.
அசாம்
அசாம் அரசு வட கிழக்கு திறன் மையத்தில் சேர்வதற்கு மானியம் வழங்கவுள்ளது
  • வடகிழக்கு திறமை மையத்தில் சேர்வதற்கு 1.7 லட்சம் ரூபாய் மானியம் வழங்க அசாம் அரசு முடிவெடுத்துள்ளது. அசாம் திறன் மேம்பாட்டு திட்டத்தின் மிஷன் இயக்குநர் ஏபி திவாரி, முதல் தொகுதி மாணவர்களின் மொத்த திறன் பயிற்சிக் கட்டணம்2 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று கூறினார். முதல் தொகுப்பில் 400 மாணவர்கள் சேர்க்கைக்கு வருவார்கள் என்று தெரிவித்தார்.

சர்வதேச செய்திகள்

.சி.., யூஏஇயின் முதல் நிரந்தர குடியிருப்புகோல்டன் கார்ட்‘- அபுதாபியில் வெளியிட்டது
  • முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் தகுதி வாய்ந்த தனிநபர்களை ஈர்க்கும் பொருட்டு முதலீட்டாளர்கள் நிரந்தர குடியிருப்பு அமைப்பின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (ஐ.சி.ஏ) யூஏஇ-யின் முதல் நிரந்தர குடியிருப்பு ‘கோல்டன் கார்ட்’-ஐ அபுதாபியில் வெளியிட்டது.
அல்ஜீரியாவின் அரசியலமைப்பு கவுன்சில் ஜனாதிபதித் தேர்தல்களை ரத்துசெய்கிறது
  • அல்ஜீரியாவின் அரசியலமைப்பு மன்றம் இடைக்கால ஜனாதிபதி அப்தல்காடர் பென்சிலாவின் அதிகாரங்களை நீட்டித்தது. அடுத்த மாதம் திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தல்கள் அரசியலமைப்பு குழுவால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரண்டு வேட்பாளர்களின் வேட்பு மனுவை நிராகர்த்ததால்  அரசியலமைப்பு கவுன்சில்  ஜனாதிபதி தேர்தல் நடக்காது என்று கூறினார்.

மாநாடுகள்

உலகளாவிய தொழில் முனைப்பு உச்சி மாநாடு
  • உலக தொழில் முனைவோர் உச்சி மாநாடு (GES) 2019 ஜூன் 4 அன்று அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து அரசாங்கங்களால் நடத்தப்படுகிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வின் முதல் பதிப்பாகும்.
  • உலகளாவிய தொழில் முனைவோர் உச்சி மாநாட்டின் ஒன்பதாவது பதிப்பானது உலகெங்கிலும் இருந்து பல தொழில் முனைவோர் உடன் ஹேக் நகரில் நடைபெறுகிறது,இதில் இந்தியாவில் இருந்து 27 பேர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் மேலும் உலக மாநாட்டில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தியாசீனா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை
  • இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே, ஆயுதப் பரவல் மற்றும் ஆயுதப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த 6வது சுற்று பேச்சுவார்த்தை புதுதில்லியில் நடைபெற்றது .
  • இரு தரப்பினரும் ஆயுதப் பரவல் மற்றும் ஆயுதக் பெருக்கத்தினால் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளை பகிர்ந்துக் கொண்டனர். இதை பற்றிய உரையாடலை இடைவெளி விட்டு தொடர முடிவு செய்துள்ளனர்

வணிக  மற்றும் பொருளாதார செய்திகள்

விவசாய ஆண்டுக்கான உணவு தானிய உற்பத்தி 2018-19 ஆம் ஆண்டில் 283 மில்லியன் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது
  • உணவு தானியங்களின் உற்பத்தி 2018-19 ஆம் ஆண்டில் 283 மில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஐந்து வருட சராசரி உற்பத்தியை விட 17 மில்லியன்  டன்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
  • கோதுமை உற்பத்தி 101 மில்லியன் டன் அதிகரித்துள்ளது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது33 மில்லியன் டன் அதிகரித்துள்ளது. மொத்த பருப்பு உற்பத்தி 23 மில்லியன் டன் ஆக அதிகரித்துள்ளது.
பொது  மருந்தக கடைகளில், மருந்தக பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்க அரசு அதிகாரம் அளிக்கிறது.
  • நாடு முழுவதும் 5000 பொது மருத்துவ கடைகள் உள்ளன இது மேலும் அதிகரிக்கப்படும் என்றும்  அவைகளுக்கு மருந்துகள் வழங்கப்படும் முறையின்  தரமும் உயர்த்தப்படும் என்றும் ஜன் அவுஷதி மையங்களில் மருந்துகள் தயாரிப்பதும் அதிகரிக்கப்படும் என்றும் கெமிக்கல்ஸ் மற்றும் உரத்துகளுக்கான மத்திய அமைச்சர் டி.டி சதானந்த கவுடா உறுதி அளித்துள்ளார்.

நியமனம்

அஜித் டவல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு NSA ஆக தொடரவுள்ளார்
  • தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் டோவல் இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டு தற்போதைய அரசாங்கத்தில் மத்திய அமைச்சரவையின் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இது தேசிய பாதுகாப்பு களத்தில் அவரது பங்களிப்பை அங்கீகரிப்பதாகும். அவரது நியமனம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 04 & 05, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!