நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 23 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 23 2019

முக்கியமான நாட்கள்

ஏப்ரல் 23 – உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்

  • உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தால்(யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று கொண்டாடும் ஒரு நிகழ்வு ஆகும்.
  • உலக புத்தக தலைநகரம் 2019: ஷார்ஜா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஏப்ரல் 23 – ஆங்கில மொழி தினம்

  • ஐ.நா.வால் ஆங்கில மொழி தினம் ஏப்ரல் 23 அன்று பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது, இது வில்லியம் ஷேக்ஸ்பியரின் இறந்த மற்றும் பிறந்த தேதி என்பது குறிப்பிடத்தக்கது. பொது தகவல் துறையால் 2010 ஆம் ஆண்டில், ஐ.நா.சபையில் உள்ள 6 அலுவலக மொழிகளுக்கும் மொழி தினம் கொண்டாட வேண்டும் என்பதன் விளைவாக இந்த ஆங்கில மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது..

தேசிய செய்திகள்

ஆந்திரப் பிரதேசம்

வணிக ரீதியாக விற்பனை செய்ய புதிய மீன் இனத்தை வளர்க்கும் முயற்சி

  • சதுப்புநில சிவப்பு ஸ்னாப்பர் (Lutjanus argentimaculatus) மீன் வகையை வணிக ரீதியாக உற்பத்தி செய்யும் முயற்சியை கிருஷ்ணா கரையோரத்தில் தொடங்கியுள்ளனர். ஆந்திரப் பிரதேசம் உப்பு நீர்த்தேக்கங்களில் இவ்வகை மீன்களை அதிகளவில் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்கிறது.
  • வெண் புள்ளி வைரஸ் தொற்று காரணமாக சமீபத்தில் கடலோர ஆந்திரப் பிரதேச நீர்த்தேக்கங்களில் வளர்க்கப்பட்ட வண்ணமெய் மீனுக்கு மாற்றாக இந்த சதுப்புநில சிவப்பு ஸ்னாப்பர் மீன் அமையும் எனத் தகவல். 

திரிபுரா

திரிபுராவிற்கு சிறப்பு கண்காணிப்பாளராக வினோத் சுத்ஷி நியமிக்கப்பட்டார்

  • திரிபுராவின் முன்னாள் துணைத் தேர்தல் ஆணையர் வினோத் சுத்ஷி, திரிபுராவிற்கு சிறப்பு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு ஒரு தொகுதியில் மக்களவை தேர்தல், சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச செய்திகள்

அனைத்து உள்ளூர் அரசுத் தேர்தல்களும் EVMs மூலம் நடத்த வங்கதேசம் திட்டம்

  • வங்கதேசத்தில், அனைத்து உள்ளூர் அரசுத் தேர்தல்களும் இப்போது மின்னணு வாக்களிப்பு இயந்திரம் (EVM) மூலம் நடைபெறும் எனத் தகவல். EVM உயர் தொழில்நுட்பத்துடன் செழுமையாக இருப்பதாகவும், உள்ளூர் தேர்தலில் அதைப் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், வங்கதேச தேர்தல் ஆணைய செயலாளர் ஹெலாலுதின் அஹமத் தெரிவித்தார். வங்கதேச தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் மூன்றாவது பாலின மக்களைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. 

அறிவியல் செய்திகள்

டீசல் புகையை கருப்பு மையாக மாற்றும் இயந்திரத்தை ஐஐடி பட்டதாரிகள் கண்டுபிடித்துள்ளனர்

  • ஐஐடி பட்டதாரிகள் டீசல் ஜெனரேட்டர்களிலிருந்து வெளியேறும் சிறு தூசுகளை பிடிக்கக்கூடிய ஒரு இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர், இதன் மூலம் சுத்தமான காற்று வெளியேறுவதை உறுதி செய்யும். இந்த கார்பனேற்றப்பட்ட உமிழ்வை, பிரித்தெடுக்கப்பட்டு, கருப்பு மையாக மாற்றி அதனை பிரிண்டர்களுக்கான வண்ணப்பூச்சு அல்லது மையாக பயன்படுத்தப்படலாம்.
  • டீசல் ஜெனரேட்டர்களுக்கான ரெட்ரோஃபிட் எமிஷன் கட்டுப்பாட்டு கருவி, சக்ர ஷீல்ட், சிறு தூசுகளைப் பிடிக்கிறது, இது POink தயாரிக்கப் பயன்படுகிறது –  POllution INK. 

வணிகம் & பொருளாதாரம்

TCS தபால் துறையுடன் இணைந்து 1.5 லட்சம் தபால் அலுவலகங்களை நவீனமயமாக்க திட்டம்

  • தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்), தபால் துறையுடன் இணைந்து அஞ்சல் மற்றும் தொகுப்புகளை நவீனமயமாக விநியோகித்தல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், புதுமையான சேவைகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

நியமனங்கள்

  • இந்தியா ட்விட்டரின் புதிய MD – திரு மனிஷ் மகேஸ்வரி

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆயுஷ் அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகம் இடையே ஒப்பந்தம்

  • நவீன அறிவியலுடன், பாரம்பரிய மருத்துவ முறையின் ஆராய்ச்சி மற்றும் கல்வி ஒருங்கிணைப்பு ஒத்துழைப்புக்காக ஆயுஷ் அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகம்(CSIR) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

விளையாட்டு செய்திகள்

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்

  • சீனாவின் வூஹனில் ஆசியா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடங்கவுள்ளது. இந்தியா சார்பாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சமீர் வர்மா, பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் பங்குபெறவுள்ளனர்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இரண்டு தங்கம் உள்ளிட்ட ஐந்து பதக்கங்களை வென்றது இந்தியா

  • 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். குண்டு எறிதலில் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கம் வென்றார். ஈட்டி எறிதலில் இந்தியாவின் ஷிவ்பால் சிங் 86.23 மீட்டர் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜபிர் மடரி பல்லியாலில் மற்றும் சரிதா கயக்வத் ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் 400 மீட்டர் ஹர்டில்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.

PDF Download

ஏப்ரல் 23 நடப்பு நிகழ்வுகள்  வீடியோ – கிளிக் செய்யவும்

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!