நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 12, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 12, 2019

தேசிய நிகழ்வுகள்:

அமிர்தசரஸ்சில் ஜாலியன்வாலா பாக் சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு புகைப்பட கண்காட்சி

  • ஜாலியன்வாலா பாக் படுகொலை நூற்றாண்டின் நினைவுதினத்தின் ஒரு பகுதியாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பிராந்திய அவுட்ரீச் பணியகம், சண்டிகரில், ஏப்ரல் 11-13, 2019 வரை மூன்று நாள் புகைப்பட கண்காட்சியை அமைத்துள்ளது. ஜாலியன்வாலா பாக் கண்காட்சிக்கு சுதந்திர போராட்டத்தின் புகைப்பட கண்காட்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா

உச்ச நீதிமன்றம் நீண்ட கால தாமதம் காரணமாக என்ரான்-டாபோல் வழக்கை தள்ளுபடி செய்தது

  • அமெரிக்காவின் என்ரான் மற்றும் அதன் கூட்டு நிறுவனமான டாபோல் பவர் கார்ப்பரேஷன் மூலமாக மகாராஷ்டிராவில் டபோல் மின் திட்டம், 1996-ல் நிறுவப்பட்டது.
  • என்ரான் நிறுவனம் ஊக்குவித்த டபோல் மின் ஆலை அமைப்பதில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்குக்கான நீதித்துறை விசாரணை வழக்கு 17 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்ததால் உச்ச நீதிமன்றம்வழக்கை தள்ளுபடி செய்தது.

உத்தரபிரதேசம்

ஜூவர் விமான நிலையத் திட்டம்

  • முன்மொழியப்பட்ட ஜூவர் விமான நிலையத்திட்டம் 2001 ஆம் ஆண்டில் திட்டமிட்டபடி முக்கிய கட்டமான நிலம் கையகப்படுத்தலை எட்டியுள்ளது.

 வணிகம் & பொருளாதார நிகழ்வுகள்:

ரிசர்வ் வங்கி விகிதம் குறைப்பு அடமான விகித உயர்வை தடுக்கிறது

  • இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வட்டி விகிதம் குறைப்பு நிதியளிப்பு செலவினங்களை ஈடுகட்ட உதவுகிறது மற்றும் மேலும் இந்த ஆண்டு அடமான வீகிதத்தை உயர்த்துவதற்கும், குடியிருப்பு அடமானப் பாதுகாப்புப் பத்திரங்கள் (ஆர்.எம்.பீ.எஸ்) ஆகியவற்றுக்கு நேர்மறையான கடனாகவும் உள்ளது என்று மதிப்பீட்டு நிறுவனம் மூடிஸ் கூறியது.

ஆசிய பசிபிக் நாடுகளில் பெங்களூரு மிகப் பெரிய அலுவலக சந்தையாக உள்ளது

  • இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு சந்தையாகவும் மற்றும் ஆசியா-பசிபிக் பகுதியில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு சந்தையாகவும் பெங்களூரு விளங்குகிறது.
  • இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு எனப்படும் பெங்களூரு 11.6 மில்லியன் சதுர அடியில் வலை அடிப்படையிலான வேலைவாய்ப்புப் சந்தையை கொண்டுள்ளது.

விண்வெளி அறிவியல்:

இஸ்ரேலின் சந்திரன் மிஷன் தோல்வி

  • சந்திரனுக்கு செலுத்தப்பட்ட முதல் தனியார் நிதியளிக்கப்பட்ட இஸ்ரேலின் பேரேஷீட் விண்கலம், தனது பயணத்தின் கடைசிக் கட்டத்தில் விபத்துக்குள்ளானது. இதற்கு முன் அமெரிக்கா, முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா ஆகியன மட்டும் இதை சோதனை செய்துள்ளது கூறிப்பிடத்தக்கது

விருதுகள்:

சரஸ்வதி சம்மன் 2018

  • தெலுங்கு கவிஞர் கே. சிவா ரெட்டி, 2018 ஆம் ஆண்டு புகழ்பெற்ற சரஸ்வதி சம்மன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு நிகழ்வுகள்:

இந்தோ-சிங்கப்பூர் கூட்டு பயிற்சி போல்டு குருசேத்ரா

  • 12 வது இந்தியா – சிங்கப்பூர் கூட்டு இராணுவ பயிற்சி ஏப்ரல் 11, 2019 அன்று பாபினா இராணுவ நிலையத்தில் நிறைவுற்றது.

புத்தகம் & கையேடு:

டாக்டர் பீமாராவ் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் புத்தக தொகுப்பு

  • பிரசார் பாரதி தலைவர், சூர்யா பிரகாஷ் புது தில்லியில், ‘டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உரைகள்’ என்ற கையேட்டை வெளியிட்டார்.

ஒப்பந்தங்கள்:

இந்தியா, நெதர்லாந்து இருதரப்பு அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த உறுதியெடுத்துள்ளது.

  • இந்தியாவும் நெதர்லாந்தும் ஐக்கிய நாடுகள் சபையிலும் மற்றும் ஏனைய சர்வதேச அரங்கிலும் ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும், மேலும் இருதரப்பு அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் வழிகளைப் பற்றியும் விவாதித்தின.
  • இந்த ஆண்டு அக்டோபரில் புது தில்லியில் நடைபெறவுள்ள CII-DST Tech Summit இன் 25 வது பதிப்பில் நெதர்லாந்து பங்குதாரராக பங்கேற்பதை இந்தியா வரவேற்றுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்:

சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டார்

  • 30 ஆண்டுகளாக சூடானைக் ஆட்சி செய்த ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் இராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பில் கைது செய்யப்பட்டார், மற்றும் இரண்டு ஆண்டு கால இராணுவ ஆட்சிக்குப் பின் தேர்தல் நடைபெறும் என சூடான் ராணுவம் அறிவித்துள்ளது
  • 2003 ஆம் ஆண்டில் தொடங்கிய கிளர்ச்சியின் போது, ​​இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி), விதித்த தீர்ப்பால் பஷீர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

BRI மூலம் தனது சொந்த உலகளாவிய தீர்மானகரமான கடற்படை சக்தியை சீனா உருவாக்க முயற்சி

  • பெருகிவரும் பல பில்லியன் டாலர் பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சியால் சீனா தனது சொந்த உலகளாவிய தீர்மானகரமான கடற்படை சக்தியை உருவாக்க முயல்கிறது, என பென்டகன் அமெரிக்க காங்கிரசுக்குத் தெரிவித்துள்ளது.
  • ஆசிய நாடுகள், ஆபிரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பாவிற்கான இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த BRI கவனம் செலுத்துகிறது.

ஈகுவேடார் அசாங்கேயின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது.  

  • ஜூலியன் அசாங்கேவுக்கு புகலிடம் அளித்து பல ஆண்டுகளுக்கு பின்னர், தற்போது ஈகுவேடார் அசாங்கேயின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது.
  • அசாங்கே 2012-ல் ஈக்வடார் ஜனாதிபதியாக இருந்த ரபேல் கோரியாவால் தஞ்சம் அடைந்தார், ஆனால் தற்போது அசாங்கே தனது புகலிடம் விதிகளை மீறியதாக கூறி இந்த முடிவை எடுத்துள்ளது.

அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சி, ADIBF 2019,

  • இந்த மாதம் 24 முதல் 30 வரை நடைபெறும் அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சியில், ADIBF 2019 இல், இந்தியாவை கெளரவ விருந்தினராக யுஏஇ அறிவித்துள்ளது. இந்த கண்காட்சி ஐக்கிய அரபு நாடுகளின் வளமான பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தி அதன் நம்பகத்தன்மை நவீனத்துவம் ,கலாச்சார மற்றும் இலக்கிய வெளியீட்டை வெளிப்படுத்துகிறது.

விளையாட்டு நிகழ்வுகள்

இந்திய பெண்கள் ஹாக்கி அணி மலேசியா தொடரை  4-0 என்ற கணக்கில் வென்றது

  • கோலாலம்பூரில் நடந்த இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி மலேசியாவை 4-0 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது

தீபா மாலிக், நியூசிலாந்தின் பிரதமர் சர் எட்மண்ட் ஹில்லாரி பெல்லோஷிப் விருதை வென்றார்

  • ரியோ பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் தீபா மாலிக் “ஊக்கப்படுத்தும் சாதனைகள்” என்னும் அங்கீகாரம் பெற்ற நியூசிலாந்து பிரதம மந்திரி சர் எட்மண்ட் ஹில்லாரி பெல்லோஷிப் விருதை வென்றார்.
  • 48 வயதான தீபா, 2016 ரியோ பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் குண்டு எரித்தலில் வெள்ளி பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

PDF Download

ஏப்ரல் 12 நடப்பு நிகழ்வுகள்  வீடியோ – கிளிக் செய்யவும்

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!