நடப்பு நிகழ்வுகள்  – அக்டோபர் 03, 2018

0

நடப்பு நிகழ்வுகள்  – அக்டோபர் 03, 2018

தேசிய செய்திகள்

ஆந்திரப் பிரதேசம்

திருப்பதியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது

  • காந்தி ஜெயந்தி முதல் திருப்பதியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

அசாம்

இந்தியாவிலேயே மிக உயரமான தேசியக்கொடி

  • அசாம் அரசு மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை இந்தியாவின் மிக உயர்ந்த தேசியக்கொடியை [சராசரி நகர உயரத்தில் இருந்து] பறக்கவிட்டு கொண்டாடியது. கவுஹாத்தியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவுச் சின்னமான காந்தி மண்டபத்தில் உள்ள5 சதுர அடி கொடி கம்பத்தில், 9600 சதுர அடி கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

புது தில்லி

46 வது தலைமை நீதிபதி

  • நீதிபதி ரஞ்சன் கோகோய் இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு முன் இந்தியாவின் தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்றார் நீதிபதி தீபக் மிஸ்ரா. நீதிபதி கோகோய் 46 வது தலைமை நீதிபதி ஆவார்.

மல்டிமீடியா கண்காட்சி துவக்கம்

  • மகாத்மா காந்தி பிறந்த 150 ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் மல்டிமீடியா கண்காட்சியை தகவல், ஒளிபரப்பு, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ராத்தோர் (ஓய்வு) துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு

முதலில் அச்சிடப்பட்ட திருக்குறள் மீண்டும் வெளியிடப்பட உள்ளது

  • 1853ம் ஆண்டில் முதலில் அச்சிடப்பட்ட திருக்குறள் 168 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிவாலயம் ஜே. மோகனால் ராமலிங்க வள்ளலார் பிறந்த தினமான அக்டோபர் 5 அன்று வெளியிடப்பட உள்ளது.

சர்வதேச செய்திகள்

ஆஸ்திரேலியா  ‘டேம்பன் வரியைரத்து செய்தது

  • ஆஸ்திரேலியா “உரிபஞ்சு வரி” என்று அழைக்கப்படும் டேம்பன் வரியை ரத்து செய்ய ஒப்புக்கொண்டது.

அமெரிக்க ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக $ 15 ஆக உயர்த்த அமேசான் ஒப்புதல்

  • அமேசோன் நிறுவனம் அதன் அமெரிக்க ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக அடுத்த மாதம் முதல் $ 15 ஆக உயர்த்தா முடிவு. இதனால் சட்டமியற்றுபவர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் சம்பள ஏற்றத்தாழ்வு பிரச்சனைகளுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும்.

ஈரானில் இறக்குமதி செய்யும் மனிதாபிமான பொருட்களின் மீதான தடைகளை அகற்ற அமெரிக்காவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

  • ஐக்கிய நாடுகளின் உயர் நீதிமன்றம் ஈரானின் மனிதவள பொருட்கள், பொருட்கள் மற்றும் சேவைகள், உள்நாட்டு விமான போக்குவரத்து பாதுகாப்புடன் தொடர்புடைய இறக்குமதி மீது பொருளாதாரத் தடையை அகற்ற அமெரிக்காவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாநாடுகள்

தேசிய அளவிலான தொழில் முனைவோர் விழிப்புணர்வு பிரச்சாரம் – உதயம் அபிலாஷா

  • இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) உதயம் அபிலாஷா எனும் தேசிய அளவிலான தொழில் முனைவோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை 115 மாநிலங்களில் நிதி ஆயோக்கின் மூலம் அடையாளம் காணப்பட்ட 115 தேர்ச்சி மாவட்டங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சுத்திகரிப்பு மற்றும் செப்ட்டிக் டாங்கிகளின் அபாயகரமான துப்பரவு தடுப்பு மீதான பான் இந்தியா ஒர்க்ஷாப்

  • சமூக நீதி அமைச்சகத்தின் கீழ் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பிற்கான மத்திய அமைச்சர் ஸ்ரீ தாவார்சந்த் கெலோத்தால் தேசிய சபாய் கர்ம்சாரிஸ் நிதி மற்றும் மேம்பாட்டு கார்ப்பரேஷன் (NSKLFDC) ஏற்பாடு செய்யப்பட்ட “சாக்கடைகள் மற்றும் செப்டிக் டாங்கிகளின் அபாயகரமான துப்புரவு தடுப்பு மீதான பான் இந்தியா ஓர்க்ஷாப்  திறந்துவைக்கப்பட்டது”

நியமனங்கள்

  • பார்ஹம் சாலி – ஈராக் ஜனாதிபதி
  • ஷிதே அடெல் அப்துல் மஹ்தி – ஈராக் பிரதமர்
  • கெவின் ராபர்ட்ஸ் – கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி

திட்டங்கள்

உணவு பாதுகாப்பு திட்டம்

  • ஒடிசா அரசாங்கம் ஏழை மக்களைக் கவர்வதற்காக மாநிலத்தின் சொந்த உணவு பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

விருதுகள்

  • UNEP (சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்) சுற்று சூழல் விருது – நரேந்திர மோடி [ஐ.நா. செயலாளர் அன்டோனியோ கட்டரஸ் வழங்கினார்]
  • உடலியல் அல்லது மருத்துவத்தில் நோபல் பரிசு – ஜேம்ஸ் பி. அலிசன் [அமெரிக்கா] மற்றும் தசுக்கு ஹோன்ஜோ [ஜப்பான்]
  • இயற்பியல் நோபல் பரிசு – ஆர்தர் அஷ்கின் [அமெரிக்கா]; ஜெரார்டு மௌரொ (பிரான்ஸ்) மற்றும் டோனா ஸ்ட்ரிக்லேண்ட் [கனடா]
  • வேதியியல் நோபல் பரிசு – ஃபிரான்சஸ் எச் அர்னால்ட் [அமெரிக்கா]; ஜார்ஜ் பி. ஸ்மித் [அமெரிக்கா] மற்றும் சர் கிரெகோரி பி.வின்டர் [பிரிட்டன்]
  • ஸ்வச்ச பாரத்[தூய்மை இந்தியா] கோஷுக்கு மிகப்பெரிய பங்களிப்புக்கான விருது – மாதா அமிர்தானந்தமயி தேவி.

விளையாட்டு செய்திகள்

U-19 ஆசிய கோப்பை

  • U-19 ஆசியா கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி.

31வது இந்திய ரயில்வே சதுரங்க போட்டி

  • திருச்சி, தமிழ்நாட்டில் 31வது இந்திய ரயில்வே சதுரங்க போட்டி தொடங்கியது.

SAFF U-18 மகளிர் சாம்பியன்ஷிப்

  • திம்பு, பூடானில் SAFF U-18 மகளிர் சாம்பியன்ஷிப் அரை இறுதியில் நேபாளத்தை எதிர்கொள்கிறது இந்தியா.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!