நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 8 2018

0

நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 8 2018

முக்கியமான நாட்கள்

“Kristallnacht”ன் 80 வது நினைவு தினம்

  • மே 15, 1939ல், கடல் வழிகாட்டி எம்.எஸ். செயின்ட் லூயிஸ் கப்பலில் 907 ஜெர்மன் யூதர்கள் ஜெர்மனியில் இருந்து புறப்பட்டு அட்லாண்டிக் கடலைக்கடந்து, துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க தஞ்சம் அடைந்தனர்.
  • இரண்டாம் உலகப் போர் வெடித்ததற்கு சில மாதங்களுக்கு முன்னர் நாஜி ஜெர்மனியில் இருந்து தப்பி வந்த யூத மக்களுக்கு தஞ்சம் அளிக்க கனடா தவறியதற்கு கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார்.

தேசிய செய்திகள்

சட்டீஸ்கர்

சங்வாரிவாக்குச்சாவடிகள்

  • சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்கள் வாக்காளர்கள் தங்கள் உரிமையைக் கடைப்பிடிக்க ஊக்குவிக்க சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளில் ‘சங்வாரி’ வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • ‘சங்வாரி’ என்றால் நண்பன். இந்த பெண்கள் நட்பு சாவடிகளை பெண் அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட அனைவரும் பெண் ஊழியர்களால் நிர்வகிக்கப்படுவார்கள்.

ஜம்மு மற்றும் காஷ்மீர்

ஸ்ரீநகர் இந்த பருவகாலத்தின் மிகக் குளிரான இரவை பதிவு செய்தது

  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், இந்த பருவ காலத்தின் மிகக் குளிர்ந்த இரவாக, குறைந்தபட்சமாக மைனஸ்2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்தது.
  • ஜம்மு மற்றும் காஷ்மீரின் கார்கிலில் குறைந்தபட்சமாக மைனஸ்0 டிகிரி செல்சியஸ்  வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

மேற்கு வங்காளம்

ரசகுலா தினம்நவம்பர் 14 அன்று கொண்டாடப்படவுள்ளது

  • மாநிலத்தின் புகழ்பெற்ற இனிப்புப் பண்டமான வங்காளத்தின் ரசகுலா புவியியல் குறியீடு (ஜி.ஐ) பெற்றதன் முதல் ஆண்டின் நினைவாக, நவம்பர் 14 அன்று ‘ரசகுலா தினத்தை’ கொண்டாட மேற்கு வங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சர்வதேச செய்திகள்

ஈரானிடம் மின்சாரம் வாங்க ஈராக்கிற்கு பொருளாதாரத் தடை விலக்கை அமெரிக்கா வழங்கியது

  • தெஹ்ரானின் மீது அமெரிக்க பொருளாதாரத் தடை இருந்தபோதிலும் அண்டை நாடான ஈரான் நாட்டிலிருந்து மின்சாரம் இறக்குமதி செய்ய ஈராக்கிற்கு பொருளாதாரத் தடை விலக்கை அமெரிக்கா வழங்கியது.

சீன அச்சுறுத்தல் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தைவான் போர்க்கப்பலை அறிமுகப்படுத்தியது

  • பெய்ஜிங்கிலிருந்து வரும் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சீன நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்த்து தீவின் திறனை அதிகரிக்க ஒரு வழிகாட்டி ஏவுகணை போர்க்கப்பலை தைவான் அறிமுகப்படுத்தியது.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்

  • அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் பிரதிநிதிகள் சபையை கைப்பற்றினர், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி செனட்டில் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டது.

தீபாவளி கொண்டாட்டத்தை குறிப்பதற்காகதியாதபால் தலையை நா வெளியிட்டது

  • இந்தியாவில் கொண்டாடப் படும் தீபாவளி பண்டிகைக்கு பெருமை சேர்க்கும் விதமாக ‘தியா’ தபால் தலையை ஐ நா வெளியிட்டது.

பசிபிக் நாடுகளில் உள்கட்டமைப்பை கட்டியெழுப்ப ஆஸ்திரேலியா மலிவு கடன்களை அறிவித்தது

  • பசிபிக் நாடுகளில் உள்கட்டமைப்பை கட்டியெழுப்ப ஆஸ்திரேலியா18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை மானியங்கள் மற்றும் மலிவு கடன்களை அறிவித்தது
  • போர்ட் மோர்ஸ்பியில் திட்டமிடப்பட்ட ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின் பின்னணியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அறிவியல் செய்திகள்

எபோலாவுக்கு எதிராக நாட்டின் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது

  • உலக சுகாதார அமைப்பு மற்றும் உகாண்டா சுகாதார அமைச்சகம், எபோலாவிற்கு எதிராக நாட்டின் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

வணிகம் & பொருளாதாரம்

ஆர்.பி.. உள்கட்டமைப்பு உருவாக்கத்திற்கான வெளிநாட்டு கடன்களை நிர்வகிக்கும் விதிமுறைகளை தாராளமயமாக்கியது

  • இந்திய ரிசர்வ் வங்கி உள்கட்டமைப்பு உருவாக்கத்திற்கான வெளிநாட்டு கடன்களை நிர்வகிக்கும் விதிமுறைகளை தாராளமயமாக்கியது. வெளிநாட்டு வணிக கடன் பெறும் குறைந்தபட்ச முதிர்வுத் தேவைகள், தகுதிவாய்ந்த கடனாளிகளால் எழுப்பப்பட்ட உள்கட்டமைப்பில் உள்ள ECB க்கள் முந்தைய ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு குறைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு செய்திகள்

முப்படை துணைத் தளபதிகளின் நிதி அதிகாரத்தை உயர்த்தியது

  • ராணுவப் படைகளின் வருவாய் தொடர்பான கொள்முதல் சார்ந்த முடிவுகளை விரைவாக மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில் முப்படை துணைத் தளபதிகளின் நிதி அதிகாரத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஐந்து மடங்காக உயர்த்தியது.
  • இந்த புதிய அதிகாரம் வழங்கப்பட்டதின் மூலம், ரூ.500 கோடி வரை செலவு செய்வதற்கான அதிகாரம் துணைத் தளபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!