நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 18 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 18 2019

தேசிய செய்திகள்

குஜராத்

துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாடு 2019

 • காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் கண்காட்சி மற்றும் கருத்தரங்க மையத்தில் 9-வது துடிப்பு மிக்க குஜராத் (Vibrant Gujarat) மாநாட்டை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
 • 9-வது துடிப்பு மிக்க குஜராத் (Vibrant Gujarat) 2019 மாநாட்டின் தீம் – “Shaping a new India.”

மகாராஷ்டிரா

இந்திய சினிமாவின் தேசிய அருங்காட்சியகம்

 • இந்திய திரைப்பட தேசிய அருங்காட்சியகத்தின் புதிய கட்டடத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி, மும்பையில் திறந்து வைக்கிறார். தேசிய அருங்காட்சியத்தை பார்வையிடும் பிரதமர், அங்கு உரையாற்றுகிறார்.
 • இந்திய திரைப்படத் துறையின் செழுமைமிக்க வரலாற்றை பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்திய திரைப்பட தேசிய அருங்காட்சியகம், திரைப்பட பரிணாம வளர்ச்சி மூலம் எடுத்துரைக்கப்பட்ட இந்தியாவின் சமூக – கலாச்சார வரலாற்றையும் சித்தரிப்பதாக உள்ளது. 

புது தில்லி

புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு

 • நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். இதன்மூலம் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 28 ஆகும்.

தெலுங்கானா

சட்ட மன்றத்தின் புதிய சபாநாயகர்

 • தெலுங்கானாவில் முன்னாள் வேளாண் அமைச்சர் பூச்சாரம் ஸ்ரீனிவாச ரெட்டி புதிதாக நியமிக்கப்பட்ட மாநில சட்ட மன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சர்வதேச செய்திகள்

இந்தியாவுடன் ஏவுகணை பாதுகாப்பு ஒத்துழைப்பை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது

 • அமெரிக்கா இருதரப்பு மூலோபாய கூட்டணியை ஆழப்படுத்தும் முயற்சியில் ஒரு பகுதியாக இந்தியாவுடனான சாத்தியமான ஏவுகணை பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது.

இலங்கையின் புதிய எதிர்க்கட்சித் தலைவர்

 • இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதங்களின் அரசியல் முன்னேற்றங்களைத் தொடர்ந்து புதிய எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார்.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக குறைத்துக்கொண்டது

 • சீனாவின் 2017 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி9 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக குறைத்துக்கொண்டது. 2018ல் ஏற்பட்ட பொருளாதார சரிவை ஈடுகட்ட இவ்வாறு செய்துள்ளது.

அறிவியல் செய்திகள்

இஸ்ரோ இரண்டு ஆளில்லா விண்வெளி பயண திட்டத்தை அனுப்பத்திட்டம்

 • அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் என இரண்டு ஆளில்லா விண்வெளி பயண திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.

மாநாடுகள்

உலக ஆரஞ்சு திருவிழா

 • இரண்டாம் உலக ஆரஞ்சு விழா இந்த மாதம் 21 வரை நாக்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா, அதன் புகழ்பெற்ற ஆரஞ்சுகளை உலகிற்கு வழங்கும் அதே வேளையில், அதன் ஏற்றுமதியை அதிகரிக்கும் பொருட்டு கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து விவசாய நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஒர்க்ஷாப் மற்றும் வழிகாட்டிகளிலும் பங்கேற்கின்றனர்.

தீன்தயால் மாற்றுத்திறனாளி மறுவாழ்வு திட்டம் பிராந்திய மாநாடு

 • தீன்தயால் மாற்றுத்திறனாளி மறுவாழ்வு திட்ட பிராந்திய மாநாடு மும்பையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் கோவா மாநிலங்களில் உள்ள அரசு சாரா அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

BES EXPO 2019

 • தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளர் அமித் கரே மற்றும் TRAI தலைவர் ஆர்.எஸ்.சர்மா ஆகியோர் 25 வது சர்வதேச புவி மற்றும் செயற்கைக்கோள் ஒளிபரப்பு, BES EXPO 2019 மாநாடு மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்தனர். 

நியமனங்கள்

 • ஸ்வீடன் பிரதமர் – ஸ்டீபன் லோஃப்வென் [இரண்டாவது முறையாக] 

திட்டங்கள்

ஷெர்ரி சம்ரிதி உத்சவ்

 • வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நகர்ப்புற வாழ்வாதாரங்களை மையமாகக் கொண்ட ‘ஷெர்ரி சம்ரிதி உத்சவ்’ என்ற பதினைந்து நாள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

பிரதான் மந்திரி ரோஜ்கர் புரோத்சஹன் யோஜனா

 • பிரதான் மந்திரி ரோஜ்கர் புரோத்சஹன் யோஜனா, PMRPY இந்த மாதம் 14 ஆம் தேதி ஒரு கோடி பயனாளிகள் எனும் மைல்கல்லை கடந்துவிட்டது.

உன்னதி[UNNATI] திட்டம்

 • பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (இஸ்ரோ) உன்னதி[UNNATI] திட்டத்தை விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
 • உன்னதி[UNNATI] – யூனிஸ்பேஸ் நானோ செயற்கைக்கோள் இணைப்பு மற்றும் பயிற்சித் திட்டம், ஐக்கிய நாடுகளின் விண்வெளி விவகாரங்களுக்கான ஐ.நா. அலுவலகம் முன்முயற்சியின் ஒரு பகுதியாக இஸ்ரோவால் தொடங்கப்பட்டது. ஐ.நா. மாநாட்டின் 50வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

விருதுகள்

 • லாரஸ் உலக கம்பேக் ஆப் தி இயர் விருது – வினேஷ் போகட் [கௌரவமான லாரஸ் உலக கம்பேக் ஆப் தி இயர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய விளையாட்டு வீரர்] 

விளையாட்டு செய்திகள்

டெல்லி சர்வதேச சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஓபன்

 • டெல்லி சர்வதேச சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஓபன் பட்டத்தை வென்றார் டி குகேஷ். இதன்மூலம் இந்தியாவின் இளைய கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

இந்தியா Vs ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடர்

 • மெல்போர்னில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. ஆட்ட நாயகனாக சஹால் மற்றும் தொடர் நாயகனாக தோனி அறிவிக்கப்பட்டார்.

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்

 • மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மின்டனின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் அரை இறுதிக்குள் நுழைந்தார்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!