நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 27, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 27, 2019

முக்கியமான நாட்கள்

மார்ச் 27 – உலக தியேட்டர் தினம் 2019
  • சர்வதேச தியேட்டர் இன்ஸ்டிடியூட் (ITI )மூலம் 1961 ஆம் ஆண்டில் உலக தியேட்டர் தினம் தொடங்கப்பட்டது. ஐ.டி.ஐ மையங்கள் மற்றும் சர்வதேச நாடக சமுதாயத்தால் மார்ச் 27 அன்று இது ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

தேசிய செய்திகள்

புது தில்லி
லோக்பாலின்   அனைத்து எட்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றனர்
  • லோக்பாலில் உள்ள அனைத்து எட்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றனர். ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை நீதிபதி பினாகி சந்திர கோஸ் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவர் , ராம்நாத் கோவிந்த் தலைமையில் 4 நீதித்துறைஉறுப்பினர்களும் 4 நீதித்துறை அல்லாத உறுப்பினர்களும் லோக்பால் என நியமிக்கப்பட்டனர்.
  • நீதித்துறை உறுப்பினர்கள் – முன்னாள் தலைமை நீதிபதிகள் – திலீப் பி. போசலே, பிரதீப் குமார் மொஹந்தி மற்றும் அபிலாஸ் குமாரி மற்றும் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அஜய் குமார் திரிபாதி
  • நீதித்துறை அல்லாத உறுப்பினர்கள் – முன்னாள் முதல் பெண் சஷஸ்தரா சீமா பால் தலைவர் அர்ச்சனா ராமசுந்தரம், முன்னாள் மகாராஷ்டிரா தலைமை  செயலாளர் தினேஷ் குமார் ஜெயின், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி மகேந்தர் சிங் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி இந்திரஜித் பிரசாத் கௌதம் ஆகியோர்.
UGC விவசாயத்தில் உள்ள தொலைதூர பட்டப்படிப்பு திட்டங்களை தடை செய்தது
  • பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (யூ.ஜி.சி) விவசாயத்தில் தொலைதூர பட்டப்படிப்பு திட்டங்களை தடை செய்தது . விவசாய பட்டப்படிப்பிறகு செயல்முறைப்படிப்பு  அல்லது ஆய்வக படிப்புகள்  தேவைப்படும் என்பதால் இந்த முடிவு  உயர் கல்வி ஒழுங்குமுறையின்  கடைசி கூட்டத்தில் எடுக்கப்பட்டது. .

 சர்வதேச செய்திகள்

5.4 அளவு நிலநடுக்கம் ஜப்பானில் ஏற்பட்டது 
  • ஜப்பானில், க்யூஷு தீவின் தென்கிழக்கு கடற்கரையில் மியாசாகி என்ற இடத்தில் 5.4 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் கோலான் ஹைட்ஸ் குறித்து கூட்டம் நடத்த சிரியா கேட்டுக்கொண்டது
  • இஸ்ரேலிய எல்லைப் பகுதியில் கோலான் ஹைட்ஸை அங்கீகரிக்க அமெரிக்காவின் முடிவைக்குறித்து உடனடியாக அவசரக்  கூட்டம்  நடத்த ஐ.நா. பாதுகாப்பு குழுவிற்கு சிரியா அழைப்பு விடுத்துள்ளது.
கோமரோஸ் நாட்டின் ஜனாதிபதியாக அஜாலி அசோமணி மீண்டும் தேர்வு
  • இந்திய பெருங்கடலில், ஆப்பிரிக்காவின் கிழக்கு கரையில் வடக்கு மடகாஸ்கருக்கும், வடகிழக்கு மொசாம்பிக்கிற்கும் இடையில் உள்ள தீவு நாடு கோமரோஸ். கோமரோஸ் நாட்டில் நடைபெற்ற தேர்தலில், ஜனாதிபதி அஜாலி அசோமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய பாராளுமன்றம் சர்ச்சைக்குரிய பதிப்புரிமை சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டது
  • ஐரோப்பிய பாராளுமன்றம் செய்தி வெளியீட்டாளர்கள் மற்றும் ஊடக வணிகத்தால் ஏற்றுக்கொள்ளக் கூறப்பட்ட சர்ச்சைக்குரிய பதிப்புரிமை சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டது. எனினும், கூகுள் உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் அதை எதிர்த்துள்ளன. சீர்திருத்தத்தின் கீழ், ஐரோப்பிய சட்டமுறை முதல் முறையாக காப்புரிமைக்கு சட்டபூர்வமாக பொறுப்பேற்றுக்கொள்வதோடு, அவர்களது பயனர்கள் மீறல் போன்றவற்றை சரிபார்க்கவுள்ளது.
இந்தியா – பங்களாதேஷ் கப்பல் சேவையை தொடங்கவுள்ளது
  • இந்தியா மற்றும் பங்களாதேஷ், பயணிகள் சுந்தர்பன்ஸிலிருந்து டாக்கா செல்வதற்கு கப்பல் சேவையை தொடங்கவுள்ளது.

மாநாடுகள்

நேபாள முதலீட்டு உச்சிமாநாடு
  • நேபாள அரசு, நேபாள முதலீட்டு உச்சி மாநாட்டை 2019 மார்ச் 29- 30 காத்மாண்டுவில் ஏற்பாடு செய்கிறது. இந்த உச்சி மாநாடு ஹைட்ரொபவர் , சுற்றுலா, உள்கட்டமைப்பு, தொழில், போக்குவரத்து, வேளாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பம் உட்பட நேபாளத்தில் உள்ள பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்பளிக்கும்.
இந்தியா-குரோஷிய பொருளாதார மன்றம்
  • குரோஷியாவின் தலைநகரான ஜக்ரெப்பில், இந்தியா-குரோஷிய பொருளாதார மன்றக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவுள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவிற்கும் குரோஷியாவிற்கும் இடையே ஒப்பந்தம்
  • இந்தியா மற்றும் குரோஷியா விளையாட்டு, சுற்றுலாத்துறை மற்றும் ஜாக்ரெப் பல்கலைக்கழகத்தில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத சபை நிறுவல் ஆகிய முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

பாதுகாப்பு செய்திகள்

‘மிஷன் சக்தி’- செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனை(ASAT)
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, DRDO ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் தீவில் இருந்து மிஷன் சக்தி என்ற செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை (A-SAT)வெற்றிகரமாக நடத்தியது.
  • மிஷன் சக்தி இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தை கொண்டது.

விளையாட்டு செய்திகள்

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி
  • ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் மானுபாகெர்-சவுரப் சவுத்ரி ஜோடி உலக சாதனையுடன் தங்கம் வென்றது.

மலேசியாவில் நடைபெறவுள்ள  இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு  சவிதா புனியா தலைமைதாங்குகிறார் 

  • மலேசியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகளுக்கு 18 பேர் கொண்ட இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு கோல்கீப்பர் சவீதா புனியா தலைமைதாங்குகிறார்.

பிப்ரவரி 27 நடப்பு நிகழ்வுகள் video – கிளிக் செய்யவும்

PDF Download

பிப்ரவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!