நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 12 2019

0

நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 12 2019

தேசிய செய்திகள்

அரியானா

அரியானாவில் தேசிய புற்றுநோய் நிறுவனம்

  • பிரதமர் நரேந்திர மோடி அரியானாவில் உள்ள குருக்ஷேத்ராவில் ஸ்ரீ கிருஷ்ணா ஆயுஷ் பல்கலைக்கழகம், ஜாஜார் மாவட்டம் பாத்ஸாவில் தேசிய புற்றுநோய் நிறுவனம் (என்ஐசி), உட்பட அரியானாவில் ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மகாராஷ்டிரா

மறுசுழற்சி செய்யும் ஒருங்கிணைந்த நீர் திட்டம்

  • வறட்சியற்ற பகுதிகளில் இருந்து நீரை வறட்சி-பாதித்த பகுதிகளுக்கு சமமாக விநியோகிப்பதை உறுதிப்படுத்திய ஒருங்கிணைந்த மாநில நீர் திட்டத்தை (ISWP) கொண்டு வந்த முதல் மாநிலம் மகாராஷ்டிராவாகும். தண்ணீரை சமமாக விநியோகிக்க உறுதி செய்த முதல் மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்

சர்வதேச செய்திகள்

செயற்கை நுண்ணறிவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி முன்னுரிமை செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு

  • செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதற்கு கூட்டாட்சி நிறுவனங்களை இயக்குவதற்கு ஒரு நிர்வாகக் கட்டளையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க ஏஐ துவக்கம் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம், சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து பெரிய முதலீட்டு உறுதிமொழிகளைப் பின்பற்றுகிறது.

அறிவியல் செய்திகள்

எல்லை மேலாண்மைக்கு விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்

  • எல்லை பாதுகாப்பு படை(எல்லை பாதுகாப்பு) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு (ISRO) ஆகியோருடன் இணைந்து, கூட்டு செயலாளர்[எல்லை பாதுகாப்பு] தலைமையில் எல்லை நிர்வகிப்பை மேம்படுத்துவதில், விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக மத்தியஅரசு ஒரு டாஸ்க் ஃபோர்ஸ் ஒன்றை அமைத்துள்ளது.
  • இந்த அறிக்கையை இறுதி செய்வதற்கு முன்னதாக, டாஸ்க் ஃபோர்ஸ் BGF, இஸ்ரோ, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (NSCS) மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் (MoD) உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் ஆலோசனை நடத்தியது.

காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் காலநிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளுதல் பற்றிய பல்வேறு துவக்கத்தின் வெளியீடு

  • சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம், இந்தியாவில் “இந்தியா – வழிநடத்தும் காலநிலை தீர்வுகள்” என்ற தலைப்பில் இந்தியாவின் காலநிலை நடவடிக்கைகள் பற்றிய பதிப்பு புது தில்லியில் வெளியிடபட்டது. இந்த வெளியீடு “இந்தியா – வழிநடத்தும் காலநிலை தீர்வுகள்” காலநிலை மாற்றங்களுக்கு எதிரான போராட்டம் மற்றும் காலநிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளுதல் சம்பந்தமாக பல்வேறு துறைகளின் கீழ் இந்தியா எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடுகின்றன.

தரவரிசை & குறியீடு

ஐசிசி டி20 தரவரிசை

  • நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வியுற்ற போதிலும் ஐ.சி.சி டி20 தரவரிசையில் 2வது மற்றும் 6வது இடத்திற்கு இந்திய நட்சத்திர வீரர்கள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனா முன்னேறினர்.

மாநாடுகள்

மீடியா அலகின் முதல் ஆண்டு மாநாடு

  • 2019ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி விஞ்ஞான் பவன், புது தில்லியில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் முதல் ஆண்டு மாநாட்டிற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டின் ஆரம்பக் கூட்டம், தகவல், ஒளிபரப்பு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறைக்கான மாநில மத்திய மந்திரி கே.சி. ராஜ்யவர்த்தன் ராத்தோர் தலைமையில் நடைபெறும் .

உணவு பாதுகாப்பு பற்றிய தேசிய கூட்டமைப்பு

  • உணவு பாதுகாப்பு மற்றும் திறனை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன், புது தில்லியில் உணவு பாதுகாப்பு குறித்த ஒரு தேசிய கூட்டமைப்பை ஸ்பைசஸ் போர்டு ஏற்பாடு செய்துள்ளது.

தேசிய தரநிலைகள் கூட்டமைப்பு

  • இந்தியாவின் வர்த்தக, கைத்தொழில் மற்றும் தொழில்துறை அமைச்சக சிறப்பு தேசிய தரநிலைக் கூட்டமைப்பு மும்பையில், பிப்ரவரி 8-9 தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திட்டங்கள்

பங்குதாரர்களுக்கான அவுட்ரீச் திட்டம்

  • 2019ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி புது டெல்லியில் ஜவுளித்துறை பிரிவு எம்.எஸ்.எம்.இ.க்களுக்கான தொழில்நுட்ப திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. பிரதம மந்திரி அறிவித்துள்ள 100 நாட்கள் வேலைத்திட்டத்திற்கான ஆதரவு மற்றும் நலன்களைப் பெற பங்குதாரர்களுடன் தொடர்பு கொள்ள இந்த அவுட்ரீச் திட்டம் உதவும்.

தேசிய ஒருங்கிணைந்த லாஜிஸ்டிக்ஸ் திட்ட ஒர்க்ஷாப்

  • இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் துறைகளின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை தளவாட பங்குதாரர்களுடன் விவாதிக்க புதுடில்லி வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் லாஜிஸ்டிக்ஸ் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது. வர்த்தகம், கைத்தொழில் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு முக்கிய குறிப்புகளை வழங்கினார்.

KUSUM திட்டம்

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ‘கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மஹாபியான் (KUSUM)’ திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டம் இப்போது ஒப்புதல் கோரும் செயல்முறை கீழ் உள்ளது. 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சினிமாட்டோகிராஃப் (சட்டதிருத்த) மசோதா, 2019 ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

  • சினிமாட்டோகிராஃப் (சட்டதிருத்த) மசோதா 2019 ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சட்டப்பூர்வமற்ற கேம்கார்டிங் மற்றும் படங்களின் நகல் ஆகியவற்றிற்கு தண்டனையை வழங்குவதன் மூலம் திருட்டுத்தனமாக சினிமா வெளியிடுவதை தவிர்க்க 1952 ஆம் ஆண்டின் சினிமாட்டோகிராஃப் சட்டதிருத்த மசோதா அமையும்.

பாதுகாப்பு செய்திகள்

ஏரோ இந்தியா

  • பிப்ரவரி 20 மற்றும் 24க்கு இடையே ஏரோ இந்தியாவின் 12வது பதிப்பு திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரில் இந்த மாதம் நடைபெறவிருக்கும் பிரதான விமான நிகழ்ச்சியான ஏரோ இந்தியா 2019ல் பிரஞ்சு பாதுகாப்புத் துறை ஒரு முக்கிய பங்கு வகிக்க உள்ளது.

விளையாட்டு செய்திகள்

குவஹாத்தி நகரில் சீனியர் தேசிய பேட்மிண்டன் தொடர்கள் தொடக்கம்

  • குவாஹாத்தி நகரில் சீனியர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடங்கியது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு குவாஹாத்தி நகரில் நடைபெற்று வரும் தொடரில் சாய்னா நேவால், பி.வி. சிந்து, சமீர் வர்மா மற்றும் பி காஷ்யப் போன்ற சில சிறந்த வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!