ஏப்ரல் 26 நடப்பு நிகழ்வுகள்

0

ஏப்ரல் 26: அறிவுசார் சொத்துரிமை தினம்

  • மனித வாழ்வில் அன்றாட நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக அறிவுசார் சொத்துரிமையின் பங்களிப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சர்வதேச ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும், அவர்கள் பற்றிய விளக்கங்களை மக்களுக்கு வழங்கவும் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.
  • சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (World Intellectual Property Organization, WIPO) 2000ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கமைய 2001ல் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மாநிலசெய்திகள்

வடகிழக்கு மாநிலங்கள்

  • நிலநடுக்கம் ஏற்பட்டால், அதைச் சமாளிப்பது குறித்த பரிசோதனை ஒத்திகை ஒன்றுபேரிடர் மேலாண்மை தேசிய ஆணையகம்  சார்பில் நடத்தப்பட்டது. திரிபுரா, நாகாலாந்து, மிஜோரம் ஆகிய மாநிலங்களில் இந்தப் பரிசோதனை 26.04.2018 அன்று நடத்தப்பட்டது.

தேசியசெய்திகள்

உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா பதவியேற்பு

  • மூத்த பெண் வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ராவிற்கு இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • இந்து மல்ஹோத்ரா வழக்கறிஞராக இருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்காமல் நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவர். மேலும், இவர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்கும் 7 வது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி திட்டங்களுக்கு உலக வங்கியில் இருந்து ரூ.825 கோடி

  • உள்நாட்டு கண்டுபிடிப்பு, உற்பத்தி உள்ளடக்கிய திட்டங்களுக்காக உலக வங்கியிடம் சுமார் ரூ.825 கோடி கடன் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திரவ குளோரினுக்கு முதல் முறையாக அகில இந்தியத் தரச் சான்று

  • இந்திய தர நிர்ணய அமைவனம் குஜராத் ஆல்கலிஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு திரவ குளோரின் உற்பத்திக்காக அகில இந்திய அளவில் உரிமம் அளித்துள்ளது. நாடு முழுவதும் உரிமம் அளிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பதவியேற்புகள்

ராணுவ மருத்துவப் படையின் மூத்த தளபதி

  • ராணுவ மருத்துவப் படையின் மூத்த தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பிபின் பூரி பதவி ஏற்றார்

சர்வதேசசெய்திகள்

 பத்திரிகைச் சுதந்திரம்: இந்தியாவுக்கு 138வது இடம்

  •  உலக அளவில் உள்ள 180 நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய ஆய்வறிக்கையை ஓர் தனியார் பத்திரிகையாளர்கள் அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 180 நாடுகளில் 138வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

 அறிவியல் செய்திகள்

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் புதிய கிரகம்

  • நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் புதிய கிரகம் ஒன்றை இங்கிலாந்து கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்த கிரகத்தை அமெரிக்காவின் ஹெப்ளர் தொலைநோக்கி மூலம் அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த கிரகம் பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டு தூரத்துக்கு அப்பால் உள்ளது. இதற்கு ‘வாஸ்ப்-104 பி’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

வணிகசெய்திகள்

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஹெச் 1 பி விசா அனுமதி 43% குறைந்தது

  • இந்திய ஐடி நிறுவனங்களுக்கான ஹெச் 1 பி விசா அனுமதி 43 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக 2015-17 ஆண்டுக்கு இடையில் முன்னணி 7 இந்திய ஐடி நிறுவனங்களின் விசா அனுமதி அளவு குறைந்திருப்பதாக அமெரிக்க அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

அரசுப் பணியாளர்களின் மாதாந்திர ஊதியப் பட்டியல் விவரம் வெளியீடு

  • ஊழியர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் (EPFO), ஊழியர் அரசுக் காப்பீட்டுக் கழகம் (ESIC), ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையகம் (PFRDA) ஆகியவை ஊழியர்களின் ஊதியப்பட்டியல் விவரத்தை வெளியிட்டுள்ளது. முதல் முறையாக இந்தியாவில் மாதாந்திர ஊதியப் பட்டியல் விவரம் வெளியிடப்படுகிறது.

விளையாட்டுசெய்திகள்

ஹம்ரோ சிக்கிம்புதிய கட்சி தொடங்கிய இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன்

  • திரினாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் விலகிய இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பைசூங் பூட்டியா ஹம்ரோ சிக்கிம் என்ற பெயரில் புதிய கட்சியை இன்று தொடங்கியுள்ளார்.

ஏணி மீது அமர்ந்தபடி மோட்டார் சைக்கிள் ஓட்டி பாதுகாப்பு படை வீரர்கள் உலக சாதனை

  • இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் ஏணி மீது அமர்ந்தபடி 10 மணி நேரத்திற்கு மேலாக மோட்டார் சைக்கிள் ஓட்டி புதிய உலக சாதனைப் படைத்துள்ளனர்.

கோலிக்குகேல் ரத்னாடிராவிட்டுக்குதுரோணாச்சார்யா விருது: பிசிசிஐ பரிந்துரை

  • விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் கேல் ரத்னா விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியையும், துரோணாச்சாரியார் விருதுக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பரிந்துரை செய்துள்ளது.

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்

  • ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்று வருகிறது. சாய்னா, சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!