ஏப்ரல் 23 நடப்பு நிகழ்வுகள்

0

மாநிலசெய்திகள்

தமிழ்நாடு

புத்தக தினம்

  • புத்தக தினம் (ஏப்ரல் 23) அன்று கொண்டாடப்படுகிறது. உலக புத்தக தினத்தை சிறப்பிக்கும் வகையில் வாசிப்புப் பழக்கத்தை விசாலப்படுத்துவதற்காகவும் வாசகர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு பல்வேறு பதிப்பகங்கள் 20 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளன.

மத்திய பிரதேசம் 

பிரதமர்: தேசிய கிராம சுயாட்சி இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்

  • தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24 அன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்லாவில்  நடைபெறும் பொதுக் கூட்டத்தில், தேசிய கிராம சுயாட்சி இயக்கத்தை (ராஷ்ட்ரீய கிராமின் ஸ்வராஜ் அபியான்) தொடங்கி வைக்கிறார்.

தேசியசெய்திகள்              

நாது லா கணவாய் வழியே மானசரோவர் யாத்திரை

  • கைலாஷ் மானசரோவர் யாத்திரையை நாதுலா கணவாய் வழியே மீண்டும் தொடங்க இந்தியாவும் சீனாவும் முடிவு செய்துள்ளன.மானசரோவர் யாத்திரை ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை உத்தராகண்ட் மாநிலம் லிபுலெக் கணவாய் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் இருந்து நாது லா கணவாய் வழியாக இரு வழிகளில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படும்.
  • கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிக்கிமில் டோக்லாம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் எல்லையில் இந்தியா – சீனா படைகள் குவிக்கப்பட்டன. பதற்றம் காரணமாக இந்தியாவில் இருந்து பக்தர்கள் நாது லா கணவாய் வழியே யாத்திரை செல்வதற்கு சீனா அனுமதி மறுத்தது. பேச்சுவார்த்தைக்குப் பின் கடந்த ஜூன் 28-ம் தேதி இரு நாட்டு படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன.

1.75 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி

  • முதன்முறையாக75 லட்சம் இந்தியர்கள் இந்த ஆண்டு சவுதி அரேபியாவுக்கு ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி குறிப்பிட்டுள்ளார்.

டையூ: 100 சதவீதம் எரிசக்தியைப் பயன்படுத்தும் முதலாவது நகரம்

  • மற்ற நகரங்கள் தூய்மையாகவும்,பசுமையாகவும் மாறுவதற்கான புதிய அடையாளமாக டையூ, பகல் நேரத்தில் 100 சதவீதம் புதுப்பிக்கவல்ல எரிசக்தியைப் பயன்படுத்தும் முதலாவது பொலிவுறு நகரமாகிறது.
  • டையூ ஒவ்வோர் ஆண்டும் சுமார்13,000டன் கரியமில வாயு வெளியேற்றத்தைத் தவிர்க்கிறது. குறைந்த செலவிலான சூரிய எரிசக்தி காரணமாக, குடியிருப்புப் பிரிவுகளில் மின்கட்டணம் சென்ற ஆண்டு 10% அளவிற்கும், இந்த ஆண்டு 15%அளவிற்கும் குறைந்துள்ளது.

விருதுகள்

வீரதீர செயல்கள் மற்றும் மகத்தான சேவைகளுக்கான விருதுகள்

  • வீரதீர செயல்கள் மற்றும் மகத்தான சேவைகளுக்கான விருதுகள் மற்றும் பதக்கங்களை  குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் மாளிகையில் (ஏப்ரல் 23, 2018) நடைபெற்ற பாதுகாப்புத் துறை கவுரவ விருது விழாவில் வழங்கினார்.

 விருது பெறுவோரின் விவரத்தை ஆங்கிலத்தில் அறிய இங்கே கிளிக் செய்யவும் 

 சர்வதேசசெய்திகள்

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3

  • இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில்3 ஆக பதிவாகி உள்ளது.அபேபுரா நகருக்கு தெற்கே 109 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

வணிகசெய்திகள்

சர்வதேச எஸ்எம்ஈ மாநாடு-2018

  • புதுதில்லியில் 2018 ஏப்ரல் 22 தொடங்கி 24 வரை நடைபெறும் முதலாவது சர்வதேச சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (எஸ்எம்ஈ) மாநாட்டில் 37 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
  • இந்த மாநாடு அனைத்து துறைகளுக்கும் இடையே ஒரு பாலமாக விளங்கும் என்றும் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் மக்களின் பங்களிப்பைப் பயன்படுத்த இந்தியாவிற்கு உதவும் என்றும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு. கிரிராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

விளையாட்டுசெய்திகள்

இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் சிறந்த வீரருக்கான விருது: முகமது சாலா

  • இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருதை லிவர்பூல் முகமது சாலா பெற்றுள்ளார்.

தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப்பில்:இந்தியா முதலிடம்

  • தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நேபாளத்தின் காத்மண்டு நகரில் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா 10 தங்கப் பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்துள்ளது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 7 தங்கப்பதக்கங்களும், ஆண்கள் ஒற்றையர் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களும் வென்றுள்ளது. மொத்தத்தில் 10 தங்கம், 3 வெண்கலம் உட்பட 13 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

PDF DOWNLOAD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!