நடப்பு நிகழ்வுகள் – 13 டிசம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் – 13 டிசம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் – 13 டிசம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 13 டிசம்பர் 2022

தேசிய செய்திகள்

G20 நிதி டிராக் நிகழ்ச்சி நிரலின் 1வது கூட்டம் பெங்களூரில் G20 பிரசிடென்சியின் கீழ் நடைபெறும்

  • முதல் G20 நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் (FCBD) கூட்டம் 2022 டிசம்பர் 13 முதல் 15 வரை பெங்களூரில் நடைபெற உள்ளது.
  • இந்திய G20 பிரசிடென்சியின் கீழ் நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இணைந்து நடத்தவுள்ளது,
  • மேலும் இக்கூட்டத்தில்
    • 21 ஆம் நூற்றாண்டின் பகிரப்பட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள சர்வதேச நிதி நிறுவனங்களை மறுசீரமைத்தல்,
    • நாளைய நிதி நகரங்கள்,
    • உலகளாவிய கடன் பாதிப்புகளை நிர்வகித்தல்,
    • நிதி உள்ளடக்கத்தை முன்னேற்றுதல் மற்றும்
    • உற்பத்தித்திறன் ஆதாயங்கள்,
    • காலநிலை நடவடிக்கைக்கான நிதியுதவி
    • நிலையான வளர்ச்சி இலக்குகள் பற்றி ஆலோசிக்கபடவுள்ளது.

24×7 சுற்றுலாத் தகவல்உதவி எண் சேவை 

  • சுற்றுலா அமைச்சகம் சார்பில் 1800111363 என்ற இலவச எண்ணில் அல்லது 1363 என்ற சுருக்கக் குறியீட்டில் 24×7 பல மொழிகளில் சுற்றுலாத் தகவல்-உதவி சேவையை அமைத்துள்ளது, மேலும் இந்தச் சேவையானது இந்தியாவில் பயணம் செய்வது தொடர்பான தகவல்களின் அடிப்படையில் ஆதரவு சேவையை வழங்குவதற்கும் பொருத்தமான சேவையை வழங்குவதற்கும் மேலும் இந்தியாவில் பயணம் செய்யும் போது துன்பத்தில் இருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதளுக்காக இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக 10 சர்வதேச மொழிகள் (ஜெர்மன், பிரஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன், போர்த்துகீசியம், ரஷ்யன், சீனம், ஜப்பானியம், கொரியன், அரபு), இந்தி, மற்றும் ஆங்கிலம் உட்பட மொத்தம்  12 மொழிகளில் கட்டணமில்லா சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய தலைமைத்துவத்தின் கீழ் முதல் G20 மேம்பாட்டு பணிக்குழு மும்பையில் நடைபெறவுள்ளது

  • இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் முதல் மேம்பாட்டு பணிக்குழுக் கூட்டம் மும்பையில் டிசம்பர் 13 -16, 2022 வரை நடைபெறவுள்ளது, வளரும் நாடுகள், குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் தீவு நாடுகளில் உள்ள வளர்ச்சிப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதை மேம்பாட்டுப் பணிக்குழுக் கூட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • இந்தக் கூட்டங்களில், மேம்பாட்டிற்கான தரவு, 2030 நிகழ்ச்சி நிரலை முன்னேற்றுவதில் G-20 இன் பங்கு, பசுமை வளர்ச்சியில் புதிய வாழ்க்கையை உட்செலுத்துதல் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல் ஆகியவை பற்றி ஆலோசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழா டிசம்பர் 13 அன்று கொண்டாடப்படுகிறது

  • ஸ்ரீ அரவிந்தர், ஆகஸ்ட் 15, 1872 இல் பிறந்தார், ஒரு சிறந்த ரிஷி மற்றும் இந்தியா மற்றும் மனிதகுலத்தின் பரிணாம விதியைக் கண்ட இந்திய அன்னையின் மகனாக கருதப்படுபவர் .
  • ஸ்ரீ அரவிந்தரைக் கௌரவிக்கும் வகையில் பாண்டிச்சேரியில் உள்ள கம்பன் கலைச் சங்கத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையை பிரதமர் வெளியிடுகிறார்.

 

சர்வதேச செய்திகள்

39வது பதிப்பான IND-INDO CORPAT

  • இந்திய கடற்படைக்கும் இந்தோனேசிய கடற்படைக்கும் இடையிலான இந்தியா-இந்தோனேசியா ஒருங்கிணைந்த ரோந்துப் பனியின் (IND-INDO CORPAT) 39வது பதிப்பு 2022 டிசம்பர் 08 – 19 வரை இந்தோனேசியாவின் பெலவானில் நடத்தப்படுகிறது.
  • இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் (IOR) முக்கியப் பகுதியை வணிகக் கப்பல் போக்குவரத்து, சர்வதேச வர்த்தகம் மற்றும் சட்டப்பூர்வமான கடல்சார் நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்கும் நோக்கத்துடன், இந்தியாவும் இந்தோனேசியாவும் 2002 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு இருமுறை CORPAT களை மேற்கொண்டு வருகின்றன.
    • நிகழ்வில் இந்தியாவின், உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட கடற்படைக் கப்பல் INS கர்முக் மற்றும் தரைப் பயன்பாட்டுக் கப்பல் L-58 மற்றும் இந்தோனேசியாவின் கேஆர்ஐ கட் நியாக் டைன், கபிடன் படிமுரா கிளாஸ் கேர்வீட் இதன் பெறுகின்றன.

நேபாளத்தில் 19வது கைவினைப்பொருள் வர்த்தக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

  • நேபாள கைவினைப் பொருட்களின் வர்த்தகம் மற்றும் ஊக்குவிப்பு, நேபாளத்தின் கைவினைப் பொருட்களின் கூட்டமைப்பு, ஏற்றுமதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் காத்மாண்டுவில் 19வது கைவினைப்பொருள் வர்த்தகக் கண்காட்சி நடைபெறுகின்றது.
  • வர்த்தக கண்காட்சி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் டிசம்பர் 9 முதல் டிசம்பர் 13, 2022 நடத்தப்படவுள்ளது.

 

மாநில செய்திகள்

மகாராஷ்டிராவில் பல்வேறு நலத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

  • பிரதமர்.நரேந்திர மோடி 11 டிசம்பர் 2022 அன்று மகாராஷ்டிராவில் 75,000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • இதில் 1500 கோடி மதிப்பிலான தேசிய இரயில் திட்டங்கள், தேசிய ஒரு சுகாதார நிறுவனம் (NIO), நாக்பூர் மற்றும் நாக் நதி மாசு குறைப்பு திட்டம், ஆகியவை ஆகும்.
  • பிரதமர் ‘சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பெட்ரோகெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் & டெக்னாலஜி (CIPET), சந்திராபூர்’ ஐ நாட்டிற்கு அர்ப்பணித்தார் மற்றும் ‘ஹெமோகுளோபினோபதியின் ஆராய்ச்சி, மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையம், சந்திராபூரில்’ திறந்து வைத்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய வணிக ஜெட் முனையம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்பட்டது

  • கேரள முதல்வர் பினராயி விஜயன், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் நாட்டின் முதல் பட்டய நுழைவாயில் மற்றும் வணிக ஜெட் முனையத்தை திறந்து வைத்தார்.
  • வணிக ஜெட் முனையம் பழைய உள்நாட்டு முனையத்தை புதுப்பித்து 40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது மற்றும் இது 40,000 சதுர அடி பரப்பளவில் வசதியான ஓய்வறைகள், சுங்க மற்றும் குடிவரவு கவுண்டர்கள், வணிக மையம் மற்றும் பிற நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

5வது பதிப்பான கொச்சி முசிரிஸ் பைனாலே கலைக் கண்காட்சி

  • நாட்டின் மிகப்பெரிய சமகால கலைக் கண்காட்சியான கொச்சி முசிரிஸ் பைனாலேயின் ஐந்தாவது பதிப்பு டிசம்பர் 12, 2022 அன்று கொச்சியில் தொடங்குகிறது, கொச்சி கோட்டை அணிவகுப்பு மைதானத்தில் முதல்வர் பினராயி விஜயன் இந்த நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார்.
  • காஸ்மோபாலிட்டன் கலை மற்றும் கலாச்சாரம், பைனாலே உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90 கலைஞர்களின் 200 முக்கிய படைப்புத் திட்டங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

 

நியமனங்கள்

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தீபாங்கர் தத்தா நியமனம்

  • உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சந்திரசூட் முன்னிலையில் மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த தீபாங்கர் தத்தா டிசம்பர் 12, 2022 அன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றார்.
  • நீதிபதி தீபாங்கர் தத்தாவுக்கு தற்போது 57 வயது ஆகிற நிலையில் நீதிபதிகளின் பதவிக்காலம் 65 வயது என்பதால், அவர் வருகிற 2030-ம் ஆண்டு வரை நீதிபதி பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
    • தற்போது உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை (தலைமை நீதிபதியையும் சேர்த்து) 28 ஆக அதிகரித்துள்ளது.

சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகள் நியமனம்

  • முன்னதாக, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நரேந்திர குமார் வியாஸ் மற்றும் நரேஷ் குமார் சந்திரவன்ஷி ஆகியோரை இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசு நியமித்தது.
  • தற்போது அரசியலமைப்பின் கீழ் உள்ள விதிகளின்படி, சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள், நரேந்திர குமார் வியாஸ் மற்றும் நரேஷ் குமார் சந்திரவன்ஷி ஆகியோர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • நரேந்திர குமார் வியாஸ், B.Sc., L.L.B. மார்ச் 16, 1996 இல் வழக்கறிஞராகப் பதிவு செய்திருந்தார். அவருக்கு 23 ஆண்டுகளுக்கும் மேலான சட்டத்துறையில் அனுபவம் உள்ளவர்.
    • நரேஷ் குமார் சந்திரவன்ஷி, B.A., L.L.B., 11.07.1990 அன்று முதல் நீதித்துறையில் பணியாற்றி வருகிறார்.

 

விருதுகள்

(SIES) தேசிய சிறப்பு விருது 2022

  • 25வது ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசிய சிறப்பு விருது (SIES) விழா மும்பையில் நடைபெற்றது, அந்த விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பொதுத் தலைமைத்துவத் துறையில் விருதை வென்றுள்ளார்.
  • இவ் விருதுகள் பொதுத் தலைமை, சமூகத் தலைமை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் அந்தந்தத் துறைகளில் சிறந்த பங்களிப்பைச் செய்த சமூக சிந்தனையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.
  • பல்வேறு பிரிவுகளில் மற்ற விருது பெற்றவர்கள்
    • கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்,
    • பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா,
    • புகழ்பெற்ற இருதயநோய் நிபுணரும் பத்ம விபூஷண் விருது பெற்றவருமான டாக்டர் மார்த்தாண்ட வர்மா சங்கரன் வலியநாதன்,
    • இந்திய அரசின் அறிவியல் ஆலோசகர் அஜய் சூட் மற்றும்
    • பிரபல ஹரிகதா கலைஞர் விசாகா ஹரி.

தொலைத்தொடர்பு மூலம் மருத்துவ ஆலோசனை வழங்குவதில் தமிழகம் முதலிடம்

  • தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் நலவாழ்வு மையங்கள் மூலம் 2022 -ம் ஆண்டு அக்டோபர் 12-ந் தேதி முதல் டிசம்பர் 8-ந் தேதி வரையில் 22 லட்சத்து 58 ஆயிரத்து 739 பேருக்கு தொலைத்தொடர்பு மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
  • நாட்டில் அனைத்து மக்களுக்கும் தரமான மற்றும் இலவச மருத்துவ சேவையை உறுதி செய்யும் வகையில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டம் அமலில் தற்போது அமலில் உள்ளது.
    • இந்த திட்டத்தின் நோக்கம் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்குவது ஆகும்.

 

விளையாட்டு செய்திகள்

உலக இறுதிச்சுற்று பேட்மிண்டன்

  • டாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது.
  • இப்போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் டிசம்பர் 12,2022 நடந்த இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான ஜப்பானின் அகானே யமாகுச்சி  3 முறை சாம்பியனான தாய் ஜூ யிங்கை (சீனதைபே) வீழ்த்தி கோப்பையை வென்றார்.
    • இந்த பட்டத்தை வென்ற  யமாகுச்சிக்கு ரூ.98 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது,இந்த ஆண்டில் அவர் வென்ற 8-வது பட்டம் இதுவாகும்.

ஆசிய பள்ளிகள் செஸ் போட்டி-2022

  • 16-வது ஆசிய பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இலங்கையின் வாஸ்கதுவாவில் நடைபெற்றது. இப்போட்டியில் 7 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை சர்வாணிகா ரேபிட் கலந்து கொண்டார்
  • பிளிட்ஸ் பந்தயங்களில் தலா 7 சுற்றிகளிலும் வெற்றி பெற்றார். ஸ்டாண்டர்டு பிரிவில் விளையாடிய 9 ரவுண்டுகளிலும் அவரே வாகை சூடினார். 3 பிரிவிலும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய அவர் அணிகள் பிரிவையும் சேர்த்து மொத்தம் 6 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

ஃபிஃபா கால்பந்து தொடர் 2022

  • 22வது ஃபிஃபா கால்பந்து தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. காலிறுதி சுற்றில் மொத்தம் 8 அணிகள் மோதிய நிலையில் தற்போது அர்ஜெண்டினா, குரோஷியா, மொராக்கோ மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
  • இத்தொடரில் அர்ஜெண்டினா – குரோஷியா அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி டிசம்பர் 14, -ம் தேதியும் மொராக்கோ – ஃபிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டி டிசம்பர் 15 -ம் தேதியும் நடைபெறவுள்ளது.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!