நடப்பு நிகழ்வுகள் – 13 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 13 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 13 ஆகஸ்ட் 2023

நடப்பு நிகழ்வுகள் – 13 ஆகஸ்ட் 2023

தேசிய செய்திகள்

163 ஆண்டுகள் பழமையான இந்திய தண்டனைச் சட்டத்தை மாற்றியமைக்க திட்டம்.
  • மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, பழமையான மற்றும் 163 ஆண்டுகளை கடந்த 1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், 2023ஐ நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • இந்த பாரதிய சாக்ஷ்ய மசோதா, 2023 மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 இது முறையே 1872 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சாட்சியச் சட்டத்தையும் 1973 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டத்தையும் திருத்துவதாக அமைகிறது.

 சர்வதேச செய்திகள்

“இந்திய கலையின் பெருமை” பற்றிய கண்காட்சியானது டாக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • வங்கதேசத்தில் உள்ள இந்திய உயர் ஆணையகம் ஆகஸ்ட் 11 அன்று அதன் தலைநகரமான டாக்காவில் உள்ள இந்திரா காந்தி கலாச்சார மையத்தில் “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்” என்ற மாபெரும் நிகழ்வின் நினைவாக “இந்திய கலையின் பெருமை” என்று தலைப்பிடப்பட்ட கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
  • வங்கதேசத்தின் புகழ்பெற்ற கலைஞர்களின் 75 கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்தும் வகையில் இந்த கண்காட்சியை இந்திய உயர் ஆணையர் பிரனய் வர்மா திறந்து வைத்துள்ளார். மேலும் இது இரு நாடுகளின் கலாச்சார பரிமாற்றத்தையும் ஊக்குவிக்கிறது என்றும் இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான ஆழமான பிணைப்பை உலகிற்கு இந்த கண்காட்சியானது எடுத்துக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகும்.

 மாநில செய்திகள்

IFFCO நானோ யூரியா ஆலைக்கு மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
  • மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆகஸ்ட் 12 அன்று குஜராத்தின் கட்ச் காந்திதாமில் தேசிய IFFCO நானோ யூரியா ஆலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த நிகழ்வானது குஜராத்தில் இரண்டு நாள் பயணமாக அவர் மேற்கொள்ளும் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுகிறது.
  • புதிய பசுமைப் புரட்சியானது உணவு உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடைய உதவுதல் மற்றும் விவசாயிகளுக்கு செழிப்பைக் கொண்டு வருதல் ஆகிய முதன்மையான இலக்குகளை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆலையானது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 “நாளந்தா பௌத்தம்” குறித்த ஒரு நாள் தேசிய மாநாடானது தொடக்கம்.
  • லடாக்கின் துணைநிலை ஆளுநராக பி டி மிஸ்ரா, அதன் தலைநகரமான லேயில் உள்ள மத்திய புத்த ஆய்வக நிறுவனத்தில் “நாளந்தா பௌத்தம்” வகை குறித்த ஒரு நாள் தேசிய மாநாட்டை முறையாக ஆகஸ்ட் 2023 இல் தொடங்கி வைத்துள்ளார்.
  • அனைத்து லடாக் கோன்பா அமைப்பு மற்றும் லடாக் பௌத்த சங்கம் ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்புடன் நாளந்தா பௌத்த பாரம்பரியத்தின் இந்திய இமயமலை பிரிவானது இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. நாளந்தா பௌத்தத்தின் அடிச்சுவடுகளில் மூல ஆதாரத்தை மீட்டெடுப்பதையும் நாளந்தா பௌத்தத்திற்கான சவால்கள் குறித்து விவாதிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகும்.

 நாட்டின் முதல் வேளாண் தரவு மேலாண்மை கட்டமைப்பானது ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • தெலங்கானா மாநிலத்தின் தொழில்துறை அமைச்சரான கே ராமராவ், இந்தியாவின் முதல் வேளாண் தரவு மேலாண்மை கட்டமைப்பு(ADMF) மற்றும் வேளாண் தரவு பரிமாற்ற கட்டமைப்பானது(ADeX) அம்மாநில தலைநகரமான ஹைதராபாத்தில் ஆகஸ்ட் 2023 இல் தொடங்கி வைத்துள்ளார்.
  • ADeX மற்றும் ADMF ஆகியவை மத்திய விவசாயத் துறைக்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பாக(DPI) உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இவை மாநில அரசு-உலகப் பொருளாதார மன்றம்-இந்திய அறிவியல் கழகம் ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்பு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்ற விவசாயத் தரவு வழங்குநர்களிடையே பாதுகாப்பான மற்றும் தரநிலை அடிப்படையிலான தரவு பரிமாற்ற மேலாண்மையை எளிதாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

BAI அமைப்பானது குவஹாத்தியில் ஒரு தேசிய சிறப்பு மையத்தை தொடங்கியுள்ளது.
  • நாட்டின் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தின் பூப்பந்து விளையாட்டு வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கமாக, இந்திய பூப்பந்து(Badminton) அமைப்பானது(BAI) ஆகஸ்ட் 11 அன்று அசாமின் குவஹாத்தியில் ஒரு “அதிநவீன தேசிய சிறப்பு மையத்தை” திறந்து வைத்துள்ளது.
  • இந்த மையமானது சர்வதேச தரம் வாய்ந்த வசதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகும். கூடுதலாக, இந்த மையம் நவீன உடற்பயிற்சி உபகரணங்களுடனும் வீரர்களுக்கான 60 படுக்கைகள் மற்றும் 2,000 சதுர அடியில் பிரத்யேகமான பிசியோதெரபி மையம் உட்பட விளையாட்டு வீரர்கள் தங்கள் உச்சபட்ச செயல்திறனைத் தக்கவைக்க மிகுந்த கவனிப்பையும் ஆதரவையும் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் இந்த மையமானது வடிவமைக்கப்பட்டுள்ளது என BAI அமைப்பு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

நியமனங்கள்

அன்அகாடமி நிறுவன மையங்களுக்கான தேசிய கல்வி இயக்குநராக அனுராக் திவாரி நியமனம்.
  • அன்அகாடமி கல்வி நிறுவன மையங்களின் நாடு முழுவதுமான தேசிய கல்வி இயக்குநராக அனுராக் திவாரி நியமிக்கப்பட்டுள்ளதாக கற்றல் இயங்குதளமான அன்அகாடமி தனது சமீபத்திய ஆகஸ்ட் 11 அன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • இவர் இந்த நியமனத்திற்கு முன்பாக இந்தியாவின் மிகப்பெரிய கற்றல் இயங்குதளமான ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் நிறுவனத்தில் நாடு முழுவதுமான தேசிய கல்வி இயக்குநராக 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவர் இந்த நியமனத்தின் படி தனது சீரிய முயற்சிகளின் மூலம் இந்த கற்றல் இயங்குதளத்தை மேலும் மேம்படுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ISH அமைப்பின் நிர்வாக இயக்குநராக குணால் வாசுதேவா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சமையல் கலை மற்றும் விருந்தோம்பல் கல்வி நிறுவனமான இந்தியன் ஸ்கூல் ஆஃப் ஹாஸ்பிடாலிட்டி(ISH), அதன் நிர்வாக இயக்குநராக குணால் வாசுதேவாவை நியமித்துள்ளதாக தனது ஆகஸ்ட் மாத அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • இவர் மேலும் இணை நிறுவனர் பதவிக்கும் உயர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நியமனத்திற்கு முன்பாக இவர் அந்நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி பணியை வகித்துள்ளார் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திலீப் பூரி, தற்போது “நிறுவன செயல் தலைவராக” பதவி உயர்வு பெற்றுள்ளார்.

புத்தக வெளியீடு

செயற்கை நுண்ணறிவு நிபுணர் டா சச்சின் ஷர்மா, AI சம்பந்தப்பட்ட தனது புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

  • செயற்கை நுண்ணறிவு ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான டா சச்சின் ஷர்மா தனது AI சம்பத்தப்பட்ட “Prompt DOT AI: Mastering the Art of Creativity in the age of AI” என்று தலைப்பிடப்பட்ட புதிய புத்தகத்தை ஆகஸ்ட் 10 2023 அன்று வெளியிட்டுள்ளார்.
  • மனித படைப்பாற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் அற்புதமான தகவல்கள் மற்றும் அதில் உள்ள சிக்கல்கள் குறித்து இந்த புத்தகமானது ஆராய்கிறது. மேலும் புதுமையான தொழில்நுட்பம் மூலம் எவ்வாறு தனிநபர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆக்கப்பூர்வ வெளியீடுகளை செழுமைப்படுத்த AI தூண்டுதல்களுக்கான வழிமுறைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு இந்த புத்தகமானது வடிவமைக்கப்பட்டுள்ளதாகும்.

விருதுகள்

2023 ஆம் ஆண்டிற்கான தேசிய கோபால் ரத்னா விருதானது நாட்டின் தேசிய பால் தினத்தில் வழங்க திட்டம்.
  • பால்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சகமானது, 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய கோபால் ரத்னா விருதுகளை நாட்டின் தேசிய பால் தினத்தில் வழங்க திட்டமிட்டுள்ளதாக தனது ஆகஸ்ட் மாத அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • இந்த விருதுகளானது RGM திட்டத்தின் கீழ் பால் கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர்கள்(AITs) ஆகியோர்களை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. உள்நாட்டு மாடு இனங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் (RGM), இந்தியாவில் 2014 டிசம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2023 ஆம் ஆண்டிற்கான மைக்ரோசாப்ட் சூப்பர் ஸ்டார் விருதைப் CloudThat பெற்றுள்ளது.
  • பயிற்சி மற்றும் ஆலோசனை இணையதள தீர்வுகள் வழங்குனரான பெங்களூருவை சேர்ந்த CloudThat நிறுவனமானது, 2023 ஆம் ஆண்டிற்கான “மைக்ரோசாப்ட் சூப்பர் ஸ்டார் விருதைப்” பெற்றுள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • இது கடந்த நான்கு ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் தொடர்ச்சியாக ஐந்தாவது விருது என்பது குறிப்பிடத்தக்கதாகும். திறமை மற்றும் முன்மாதிரியான பல்வேறு மேம்பாட்டு பயிற்சித் திட்டங்களை வழங்குவதில் CloudThat’s நிறுவனத்தின் விதிவிலக்கான அர்ப்பணிப்புக்கு இந்த விருது மற்றொரு சான்றாகும்.

ஒலிம்பிக் நடுவர் வியாஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • முன்னாள் இந்திய நீச்சல் வீரரும் இந்திய நீச்சல் அணியின் தற்போதைய பயிற்சியாளரும் மற்றும் சர்வதேச நீச்சல் போட்டிகளில் நடுவருமான வியாஸ்(மயூர் வியாஸ்), ஆகஸ்ட் 2023 இல் ஜூஹூவில் நடைபெற்ற சர்வதேச குளோரி விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதை இவருக்கு பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் வழங்கி கௌரவித்தார். மேலும் இவரின் முக்கிய முன்னெடுப்பு முயற்சிகளின் மூலம் இந்திய நீச்சல் அணியின் திறமையை உலகறிய செய்ததற்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளதாகும்.

முக்கிய தினம்

உலக உறுப்பு தான தினம் 2023
  • மனித உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை உலக பொது மக்களுக்கு ஏற்படுத்தவும், உடல் உறுப்பு தானம் குறித்த தவறான புரிதல் கருத்துக்களை மக்களுக்கு உணர்த்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ஆம் நாளானது உலக உறுப்பு தான தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
  • Step up to volunteer; need more organ donors to fill the lacunae என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும். மேலும் இது உடலுறுப்பு தானத்திற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்த உலக மற்றும் உள்ளூர் பொதுமக்களுக்கான உலகளாவிய அழைப்பை மையமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச இடதுசாரி தினம் 2023

  • வலது கை பழக்கம் உள்ளவர்களால் ஆதிக்கம் செலுத்தும் இந்த உலகில் இடது கை பழக்கம் உள்ளவர்களை மதிக்கவும் அவர்களை வேறுபாடின்றி பழகவும், அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் உள்ள பொது மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ஆம் நாளானது “சர்வதேச இடதுசாரி தினம்” அல்லது ‘சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினமாக’ கடைப்பிடிக்கப்படுகிறது.
  • இந்த நாளானது முதன்முதலில் 1976 ஆம் ஆண்டு சர்வதேச சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் சங்கத்தின் சார்பாக அதன் நிறுவனர் டீன் ஆர். கேம்ப்பெல் என்பவரால் முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேர் இடது கை பழக்கம் உடையவர்கள் என்றும், அதில் ஆண்களே அதிகம் என்று ஐ.நா தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!