நடப்பு நிகழ்வுகள் – 12 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் – 12 மே 2023
நடப்பு நிகழ்வுகள் – 12 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 12 மே 2023

தேசிய செய்திகள்

போஷன் பி, பதாய் பிஎன்ற குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான அங்கன்வாடி திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
  • அங்கன்வாடி மையங்களை சத்துணவு மையங்களாக மாற்றுவது மட்டுமின்றி, கல்வி அளிக்கும் மையங்களாகவும் உருவாக்கும் வகையில்போஷன் பி, பதாய் பிஎன்ற குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த திட்டத்தை செயல்படுத்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனமானது(NIPCCD) இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

“திவ்ய கலா மேளாவை மே 11 முதல் 17 வரை கௌஹாத்தியில் நடத்த மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை (திவ்யாங்ஜன்) ஏற்பாடு செய்துள்ளது.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளிப்புத் துறையானது (திவ்யாங்ஜன்) நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளில் தொழில்முனைவோர்/கைவினைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் கைவினைத்திறனைக் காண்பிக்கும் ஒரு தனித்துவமான நிகழ்வை அஸ்ஸாமில் ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்த நிகழ்வின் மூலம் மாற்றுதிறனாளிகளின் வாழ்க்கை தரம் மேம்படும் என எதிர்ப்பர்ர்க்கப்டுகிறது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டில் கவுகாத்தியில் தொடங்கி 12 நகரங்களில் இந்த நிகழ்வானது நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதுதில்லியில்புத்தம் சரணம் கச்சாமி(Buddam Saranam Kachami) என்ற கண்காட்சியை மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி தொடங்கி வைத்துள்ளார்.
  • மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி மே 11 அன்று புது தில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில்புத்தம் சரணம் கச்சாமிஎன்ற கண்காட்சியைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • கலையின் ஆன்மீகம் மற்றும் பௌத்தத்துடன் தொடர்புடைய கூறுகள் மற்றும் ஞானம், இரக்கம் மற்றும் அவற்றின் அமைதி ஆகியவற்றின் உலகளாவிய மதிப்புகளை வெளிப்படுத்தும் அதன் பயணத்தை ஆராய்வதை இந்த கண்காட்சி நோக்கமாக கொண்டுள்ளது.

இந்திய தபால் துறையானதுபாரத் மார்ட் போர்டல்“(Bharat E-Mart) என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு தளவாடங்களை வழங்க இந்தியா போஸ்ட்பாரத் மார்ட் போர்டல்“(Bharat E-Mart) என்ற இணைய அடிப்படையிலான அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த பாரத் இமார்ட் போர்ட்டலானது, வர்த்தகர்களின் வளாகத்திலிருந்து சரக்குகளை எடுத்துச் செல்லும் வசதியை வழங்கவும் மற்றும் நாடு முழுவதும் உள்ள சரக்குதாரர்களின் வீட்டு வாசலில் டெலிவரி செய்வதையும் உறுதி செய்யும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி CAIT உடன் தொடர்புடைய எட்டு கோடி வர்த்தகர்கள் இதன்மூல பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
ஹரித் சாகர்என்ற பசுமை துறைமுக வழிகாட்டுதல்கள் 2023 அறிமுகம்.
  • மத்திய துறைமுக அமைச்சர் சர்பானந்தா சோனோவால், புது தில்லியில்  மே 10 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘ஹரித் சாகர்என்ற பசுமை துறைமுக வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.”பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கைஅடைவதே இதன் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது
  • பசுமையான ஹைட்ரஜன், பச்சை அம்மோனியா, மற்றும் பசுமை மெத்தனால் அல்லது எத்தனால் போன்ற எரிபொருட்களை சேமிப்பதற்கும், அதனை கையாளுவதற்கும் மற்றும் துறைமுக திறன்களை மேம்படுத்துவதற்கும் இந்த வழிகாட்டுதல்கள் உதவும் என கூறப்பட்டுள்ளது.

யுனெஸ்கோவின் பாரம்பரிய தள பட்டியலில் சேர்க்கசாந்திநிகேதன்முன்மொழியப்பட்டதாக மத்திய அரசங்கம் தெரிவித்துள்ளது.
  • யுனெஸ்கோ(UNESCO) உலக பாரம்பரிய தள பட்டியலில் சேர்க்க சர்வதேச ஆலோசனை அமைப்பால்சாந்திநிகேதன்பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
  • சாந்திநிகேதன்என்பது நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும்.

மாநில செய்திகள்

‘நடக்கும் உரிமையை’ அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை பஞ்சாப் பெறுகிறது.
  • பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களின் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பஞ்சாப் மாநிலமானது நடக்கும் உரிமையை அமல்படுத்தியது .
  • இந்த சட்டத்தின் மூலம் NHAI உட்பட அனைத்து நிறுவனங்களும் நடைபாதை மற்றும் சைக்கிள் தடங்களை வழங்குவதை இந்த சட்டம் கட்டாயமாக்குகிறது. சாலை விபத்துக்களில் இறந்த பாதசாரிகளின் எண்ணிக்கையானது 2019 இல் 25,858 இல் இருந்து 2021 இல் 29,124 ஆக அதிகரித்துள்ளது என்பதால் இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

பேட்மிண்டன் ஆசியா போட்டியின் தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவின் தலைவராக BAIயின் இணைச் செயலர் உமர் ரஷித் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் இணைச் செயலாளர் உமர் ரஷித், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குபேட்மிண்டன் ஆசியபோட்டியின் தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவின் தலைவராக, ரஷீத், நாடு முழுவதும் பேட்மிண்டன் போட்டிகளில் நடுவர் தரத்தினை உயர்த்தி, விதிகளை மேம்படுத்துதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றை மேற்பார்வையிடுவார் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கி அல்லாத நிதி நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் புதிய தலைவராகபர்மிந்தர் சோப்ராநியமனம்.
  • இந்தியாவின் மிகப்பெரிய வங்கி அல்லாத நிதி நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் (பிஎஃப்சி) முதல் பெண் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக(CMD) “பர்மிந்தர் சோப்ராபொறுப்பேற்கிறார்.
  • பொது நிறுவனங்களின் தேர்வு வாரியமானது (பிஇஎஸ்பி) 08 மே அன்றுபர்மிந்தர் சோப்ராவின்பெயரை பிஎஃப்சியின் அடுத்த சிஎம்டியாக நிர்வகிக்க பரிந்துரைத்தது. சிஎம்டியாக தனது புதிய வேலையில், பர்மிந்தர் சோப்ரா பிஎஃப்சியில் புது மற்றும்ஊக்குவிக்கும் முயற்சிகளை இயக்குவதற்கும் அதன் வளர்ச்சிப் பாதையை வழிநடத்துவதற்கும் இவர் பொறுப்பாவார் என நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குஸ்ஸியின்  தூதராகஆலியா பட்நியமிக்கப்பட்டுள்ளார்
  • குஸ்ஸியின் முதல் இந்திய உலகளாவிய தூதராகஆலியா பட்நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் சியோலில் நடக்கும் குஸ்ஸி குரூஸ் 2024 என்ற நிகழ்ச்சியில் முதல்முறையாக இவர் தோன்றுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இன் ஹானர் ஆஃப் கார்ல்என்ற கருப்பொருளின்படி சமீபத்தில் ஆலியா பட் மேட் கேளா விழாவில் பங்கேற்றார் என்பது இதில் குறிப்பிடத்தக்கதாகும்.

தொல்லியல் ஆய்வுகள்

ஏலகிரி மலைப் பகுதியில் நடத்தப்பட்ட அகழாய்வில்விஜயநகர கால நடுகற்களானதுகண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • திருப்பத்தூர் தமிழ்த்துறை பேராசிரியர் .மோகன் காந்தி அவர்களின் தலைமையில், சமீபத்தில் ஏலகிரி மலையில் கள ஆய்வை மேற்கொள்ளும்போது இரு நடுகற்களை கண்டெடுத்துள்ளனர்.
  • இந்த இரு நாடுகற்களானது விஜய நகர காலத்தில் ஏற்பட்ட போரின் போது வீர மரணம் அடைந்த இரண்டு படைவீரர்களுக்காக எழுப்பப்பட்ட நடுகற்கள் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நாடுகற்களானது ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்களாகும்.

விருதுகள்

தமிழகத்தின் நகர தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு அமெரிக்க விருது வழங்கப்பட்டுள்ளது.
  • அகர்வால் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அஸ்வின் அகர்வால் அவர்களுக்குஅமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை” (ASRCRS) பிரிவின் கீழ்கோல்டன் ஆப்பிள்விருதை பெற்றுள்ளார்.
  • கூம்பு வெண்படலத்தால் ஏற்படும் பார்வை இழப்பைத் தடுப்பதற்காகபுதிய சிகிச்சை உத்திகளைக்கண்டுபிடித்ததற்காக அவருக்கு இந்த கோல்டன் ஆப்பிள் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய ஆவண படத்திற்கு  “பீபாடியின் ஆவணப்படப் பிரிவின்கீழ்  விருதை வென்றுள்ளது.
  • ரிந்து தாமஸ் மற்றும் சுஷ்மித் கோஷின் ஆகியோரின் உருவாக்கத்தில் வெளிவந்தரைட்டிங் வித் ஃபயர்“, ஆவணப்படப் பிரிவின் கீழ் பீபாடி விருதை வென்றுள்ளது.
  • இந்த ஆவணப்படமானது இந்தியாவில் பெண்கள் தலைமையிலான ஒரே செய்தித்தாள்கபர் லஹரியாவானது டிஜிட்டல் பத்திரிகையாக எப்படி மாறுகிறது என்பதை பற்றிய கதைக்களமாக அமைந்துள்ளது. இந்த பீபாடி விருந்தானது அமெரிக்காவின் மிகப் பழமையான பெரிய மின்னணு ஊடக விருது ஆகும்.

இரங்கல் செய்தி

மெக்சிகோ நாட்டின் கால்பந்து ஜாம்பவானான “அன்டோனியோ கார்பஜல்” தனது 93வது வயதில் காலமானார்.
  • லா டோட்டா‘(ஐந்து கோப்பைகள்) என்ற புனைப்பெயரை கொண்ட மற்றும் 1950 மற்றும் 1966 க்கு இடைப்பட்ட FIFA உலகக் கோப்பையின் நாயகனாக திகழ்ந்த கார்பஜல் 11மே அன்று உயிர் துறந்தார்.
  • அவரது பெவிலியன் வாழ்க்கையானது 1948 மற்றும் 1966 க்கு இடையில் 18 ஆண்டுகள் நீடித்தது மற்றும் அங்கு அவர் 16 ஆண்டுகளில் 364 ஆட்டங்களில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தினம்

சர்வதேச செவிலியர் தினம்

  • புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12 ஆம் தேதியில் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள செவிலியர்களின் பணி அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலை அங்கீகரித்து கொண்டாடும் ஒரு உலகளாவிய நிகழ்வாக சர்வதேச செவிலியர் தினம் பார்க்கப்படுகிறது.
  • எங்கள் செவிலியர்கள். நமது எதிர்காலம் என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும்.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!