நடப்பு நிகழ்வுகள் – 10 மார்ச் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 10 மார்ச் 2023
நடப்பு நிகழ்வுகள் - 10 மார்ச் 2023

நடப்பு நிகழ்வுகள் – 10 மார்ச் 2023

தேசிய செய்திகள்

பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான தேசியக் கட்டமைப்பின் 3-வது அமர்வு

  • புதுதில்லி விக்யான் பவனில் மார்ச் 10, 2023 நடைபெற உள்ள பேரிடர் பாதிப்புக் குறைப்புக்கான தேசியக் கட்டமைப்பின் 3-வது அமர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
  • இந்த அமர்வின் கருப்பொருள்:“மாறும் காலநிலையில் உள்ளூர் பின்னடைவை உருவாக்குதல்(Building Local Resilience in a Changing Climate)”என்பதாகும்.

 

மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பஸ்இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது

  • போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பொது மக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான பயணிகள் குறை மற்றும் புகார் தீர்வு உதவி எண் (1800 599 1500) மற்றும் பொது இணையதளம் “(அரசு பஸ்)” திட்டங்களை தொடங்கிவைத்தார்.
  • இந்த இணையத்தளமானது பொதுமக்கள் தேவையான தகவல்களை தேடவும் உரிய வசதிகளுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது. www.arasubus.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பொதுமக்கள் பார்த்து பயன் பெறலாம்.

தமிழகத்தில் மிதக்கும் கப்பல் தளம்

  • தமிழகத்தில் மிதக்கும் கப்பல் தளம் நான்கிற்கு மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
  • இது தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் எனவும் உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைத்து, அப்பகுதிகளில் வர்த்தகம் அதிகரிக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

நியமனங்கள்

அமெரிக்க மாவட்ட நீதிபதியாக அருண் சுப்பிரமணியன் நியமனம்

  • அமெரிக்காவின் மேன்ஹெட்டன் மாவட்ட நீதிபதியாக,இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருண் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அமெரிக்காவில் நியூயார்க் தெற்கு மாவட்டத்திற்கு நீதிபதியாக இவரை நியமிக்க,அமெரிக்க சென்ட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை இடைக்கால செய்தித் தொடர்பாளராகவேதாந்த் படேல் செயல்படவுள்ளார்

  • அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளராக உள்ள நெட் பி ரெஸ் தற்போது பதவி விலகியிருக்கும் நிலையில் இடைக்கால செய்தித் தொடர்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேதாந்த படேல் செயல்பட இருக்கிறார்.
  • இவர் தற்போது அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணை செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்.

 

தொல்லியல் ஆய்வுகள்

தமிழகத்தில் முற்கால பாண்டியர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

  • சிவகங்கை மாவட்டம் சல்லலில் தவ்வை சிற்பத்துடன் கூடிய முற்கால பாண்டியர் கால சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
  • தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த சிலையானது இரண்டரை அடி அகலம் மூன்றரை அடி உயரம் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டது.இதில் 3 உருவங்கள் இடம் பெற்றுள்ளன.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

நாசா நிசார் செயற்கைக்கோளை இஸ்ரோவிடம் ஒப்படைத்துள்ளது

  • அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா-இஸ்ரோ சார்(நிசார்) செயற்கைக்கோளை இஸ்ரோ பெற்றுள்ளது.
  • நிசார் செயற்கைக்கோள் என்பது நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கிய குறைந்த புவி சுற்றுப்பாதை கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்.

 

பொருளாதார செய்திகள்

எகிப்தில் பணவீக்கம் அதிகரிப்பு

  • எகிப்தில் பணவீக்கம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
  • கடந்த ஜனவரியில் ஆண்டிற்கான பணவீக்கம்5 சதவிகிதம் என இருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் அது 32.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

 

விருதுகள்

சர்வதேச தங்க நகர நுழைவாயில் சுற்றுலா விருதுகள் 2023

  • பெர்லின் ஐடிபி-யில் சர்வதேச தங்க நகர நுழைவாயில் சுற்றுலா விருதுகள் 2023-ல் சர்வதேச தொலைக்காட்சி மற்றும் சினிமா வர்த்தகம் மற்றும் சர்வதேச நாடு பிரிவில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி நட்சத்திர விருதுகளை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வென்றுள்ளது.
  • பெர்லினில் 7-9ஆம் தேதி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சக செயலாளர் அரவிந்த் சிங் இவ்விருதைப் பெற்றுக்கொண்டார்.

 

முக்கிய தினம்

சர்வதேச பெண் நீதிபதிகள் தினம்

  • நீதித்துறையில் பெண்களின் முழுமையான பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10 அன்று சர்வதேச பெண் நீதிபதிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்த தினம் உலகின் இரண்டாவது வருடாந்திர அனுசரிப்பாகும்.

உலக சிறுநீரக தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 9 ஆம் தேதியை சிறுநீரக நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான கருப்பொருள் : “Kidney Health for All – Preparing for the unexpected, supporting the vulnerable.

Download PDF

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!