CSIR NISC நிறுவனத்தில் ரூ.35,000/- மாத ஊதியத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே!
CSIR NISC நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Project Associate – I / II பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு ஆவலுடன் உள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | CSIR NISC |
பணியின் பெயர் | Project Associate – I / II |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Walk-in Interview |
CSIR NISC பணியிடங்கள்:
Project Associate – I பணிக்கு என 02 பணியிடங்களும், Project Associate II பணிக்கு என 01 பணியிடமும் CSIR NISC நிறுவனத்தில் காலியாக உள்ளது.
Project Associate – I / II கல்வி விவரம்:
இந்த CSIR NISC நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் M.V.Sc, Master Degree, BE, B.Tech ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றைப் பெற்றவர்கள் விண்ணப்பிக்க இயலும்.
Project Associate – I / II வயது விவரம்:
Project Associate – I / II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
Project Associate – I / II சம்பள விவரம்:
இந்த CSIR NISC நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
CSIR NISC தேர்வு செய்யும் முறை:
Project Associate – I / II பணிக்கு தகுதியான நபர்கள் 19.12.2023 அன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
CSIR NISC விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த CSIR NISC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.