தமிழக பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை – கலந்தாய்வு குறித்த தகவல் இதோ!

0
தமிழக பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை - கலந்தாய்வு குறித்த தகவல் இதோ!
தமிழக பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை - கலந்தாய்வு குறித்த தகவல் இதோ!
தமிழக பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை – கலந்தாய்வு குறித்த தகவல் இதோ!

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து ஜூன் 20ம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து பொறியியல் இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில் கலந்தாய்வு குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து கல்லூரிகளில் 2022 – 2023 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. மற்ற படிப்புகளை தொடர்ந்து பொறியியல் படிப்புக்கான விண்ணப்பபதிவுகளும் நடைபெற்றது. கடந்த ஜூன் 20ம் தேதி முதல் பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள https://www.tneaonline.org/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தனர். விண்ணப்பபதிவு தொடங்கப்பட்ட முதல் நாளே சுமார் 18,000 பேர் பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

அதனை தொடர்ந்து பொறியியல் படிப்பில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரவும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. டிப்ளமோ, பி.எஸ்சி பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பில் சேர தகுதியுடையோர்கள் ஆவார்கள். தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 65,000 இடங்களுக்கு சுமார் 24,062 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 20,574 பேர் தகுதியுடையோர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இணையதளம் வாயிலாக கவுன்சிலிங்க நடத்த திட்டமிடப்பட்டு விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் படி சிறப்பு கலந்தாய்வு 29 மற்றும் 30ம் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வு செப்டம்பர் 11 மற்றும் 12ம் தேதியும் நடைபெற உள்ளது. கலந்தாய்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு 993661901, 9843153330 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொறியியல் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று நடைபெறவிருந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாக காரணத்தால் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here