விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சி நவம்பரில் தொடக்கம் – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியில் நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இரண்டு சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசன் நவம்பர் மாதம் 3வது வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குக் வித் கோமாளி:
தமிழ் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சி பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறது. அனைத்து நிகழ்ச்சிகளும் மக்களை மகிழ்விப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. அதில் முக்கியமான ஒரு நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. பிரபலங்கள் சமையல் செய்ய அதை கோமாளிகள் உதவி செய்வதாக சொல்லி அவர்களை தொந்தரவு செய்வது மிகுந்த நகைச்சுவையாக இருக்கும். முதல் சீசனில் பிக்பாஸ் புகழ் வனிதா வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.
விஜய் டிவி சீரியல்களின் இந்த வார TRP ரேட்டிங் – ‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘ராஜபார்வை’ வரை!
அதன் பின் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. அதில் நடிகை விஜயலட்சுமியின் அக்கா கனி வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்த இரண்டு சீசன்களும் மக்களிடம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதில் கலந்து கொண்ட குக் முதல் கோமாளி வரை அனைவரும் மக்களிடம் பிரபலமடைந்துள்ளனர். அவர்களுக்கு தற்போது சினிமா வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மூன்றாவது சீசன் தொடங்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
அதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து நவம்பர் மாதம் 3வது வாரத்தில் குக் வித் கோமாளி 3ம் சீசன் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் கடந்த 2 சீசன் போல யார் யார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி தொடங்கும் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.