விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 3வது சீசன் – விரைவில் தொடக்கம்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் 3வது சீசன் - விரைவில் தொடக்கம்! ரசிகர்கள் கொண்டாட்டம்!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் 3வது சீசன் - விரைவில் தொடக்கம்! ரசிகர்கள் கொண்டாட்டம்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 3வது சீசன் – விரைவில் தொடக்கம்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் டிவியில் மக்கள் மனம் கவர்ந்த சமையல் நகைச்சுவை நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.

குக் வித் கோமாளி:

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி ஆகும். மக்களால் அதிகம் வரவேற்பை இந்த ஷோ பெற்றதால் அடுத்தடுத்து இரண்டு சீசன்கள் தொடங்கப்பட்டன. இரண்டாவது சீசன் தற்போது தற்போது முடிவடைந்த நிலையில், மூன்றாவது சீசனுக்கு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி போல இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் சமையல் செய்யும் பிரபலங்களை கோமாளிகள் நகைச்சுவையுடன் தொந்தரவு செய்வதே நிகழ்ச்சியின் முக்கிய கான்செப்ட் ஆகும்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய ட்விஸ்ட் – என்ட்ரி கொடுக்கும் ரியோ? வெளியான புகைப்படம்!

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும், கோமாளிகளும் மக்களிடம் மிகவும் பிரபலமாகி தற்போது சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பல படங்களில் நடித்து மக்களை ரசிக்க வைக்கின்றனர். கடந்த சீசனில் புகழ், ஷிவாங்கி, அஸ்வின், சுனிதா ஆகியோர் செய்த லூட்டிக்கு அளவே இல்லாமல் இருந்தது. மேலும் ‘குக்’களில் வனிதா, சகிலா ஆகியோர் மக்கள் மனதில் இடம் பிடித்தனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸில்’ வருமானத்தை விட செலவு தான் அதிகம் – நாடியா சாங் குடும்பத்தினர் வருத்தம்!

இந்நிலையில் மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருக்க தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நவம்பர் மாதம் மூன்றாவது சீசன் தொடங்க இருப்பதாக தெரிகிறது. ஆனால் கடந்த சீசனில் மக்கள் மனம் கவர்ந்த புகழ் தற்போது படங்களில் பிசியாக இருப்பதால் மூன்றாவது சீசனில் வருவாரா என கேள்விக்குறியாக இருக்கிறது. இருந்தாலும் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என ஆவலுடன் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!