பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் பழையபடி மாறும் மீனா? ப்ரோமோக்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் பழையபடி மாறும் மீனா? ப்ரோமோக்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் பழையபடி மாறும் மீனா? ப்ரோமோக்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் பழையபடி மாறும் மீனா? ப்ரோமோக்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

ரசிகர்களின் விருப்ப பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் ரோஜா சீரியல் வரை இன்றை நாளிற்கான ப்ரோமோ மற்றும் அதன் டாப் கமெண்ட்ஸ்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

டாப் கமெண்ட்ஸ்:

சின்னத்திரையில் எத்தனை சேனல்கள் இருந்தாலும் சீரியல் ஹிட் ஆகி ரசிகர்கள் மனதை கவர்வது என்னமோ.. விஜய் டிவி மற்றும் சன் டிவி தான். மற்ற சேனல்களின் சீரியல்கள் என்ன தான் தனக்கென ரசிகர்களை இழுத்தாலும் ஹிட் வரிசையின் பின்னால் தான் உள்ளது. தற்போதைய கால கட்டத்தில் அனைத்து வயதினரும் சீரியல் பார்க்க தொடங்கி விட்டனர். இதனால் ப்ரோமோக்கள் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பப்பட்டு வருகிறது. ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் அளித்து வரும் கமெண்டுகளுக்கு தற்போது அதிக வரவேற்ப்பு உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

தனத்தின் குழந்தையை அனைவரும் கொஞ்சுவதை பார்த்து மீனா ஆதங்கப்படுவது போல் ப்ரோமோ உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்போதான் டெலிவரி ஆச்சு அதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்டீங்க… அதுவும் ஃபுல் மேக்கப்போட இருக்கீங்களே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் குடும்பத்துல மீனாவுக்கு ஆதங்கம் வந்துடுச்சி இனிமே பூகம்பமா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கயல் பாப்பாவ யாருமே கண்டுக்கலையா என்று கேட்டுள்ளார். மேலும ஒரு ரசிகர் இதுல ஒரு பிரச்சனை வெடிச்சு மீனா திரும்பவும் அப்பா வீட்டுக்கு போக போறாங்க அதானே என்று கேட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா:

கண்ணம்மா வெண்பாவை சீரியசாக கலாய்ப்பது போல் ப்ரோமோ உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அடடா கண்ணம்மா செம்மைய வச்சி செய்றீங்களே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதெல்லாம் பத்தாது இன்னும் அதிகமா என்று கூறியுள்ளார்.

‘பிக் பாஸ்’ இமான் அண்ணாச்சி தனது மனைவி, மகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் – வைரலாக்கும் ரசிகர்கள்!

மேலும் ஒரு ரசிகர் கண்ணம்மா ஹேமாகிட்ட உண்மையை எப்போ சொல்லுவாங்க இது தான் அடுத்த கேள்வி என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் வெண்பாவை கண்ணம்மா கலாய்ப்பது சூப்பர் என்றே கூறியுள்ளனர்.

பாக்கியலட்சுமி:

செழியனும் பாக்கியாவும் செல்வி மற்றும் ஜெனியை பற்றி பேசுவது போல் இன்றைய ப்ரோமோ உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் செய்யுறது எல்லாம் செஞ்சிட்டு இப்போ நல்லவன் மாதிரி நடிக்கிறியா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் நீ தப்பு பண்ணிட்டு செல்வி மேல கோபப்படுறீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பாக்யா அம்மா சரியான கேள்வி கேட்டாங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் செழியனை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2:

சரவணனும், சந்தியாவும் ஏதோ முக்கியமான விஷயத்தை பற்றி பேசிக் கொள்வது போல் ப்ரோமோ உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் புதுப்பிரச்சனையை உண்டு பண்றீங்க வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படியே போய்க்கிட்டு இருந்தா எப்படி, பிரச்சனை பண்ணுங்கனு யாராவது கேட்டாங்களா ஏன் இப்படி பண்றீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சட்டு புட்டுனு முடிச்சிட்டு அடுத்த வேலைய பாருங்க எவ்வளவு நாள்தான் இழுத்துகிட்டு இருப்பீங்க என்று கேட்டுள்ளார்.

ரோஜா:

ரோஜா சாலையில் போய்க் கொண்டிருக்கும் போது அங்கே ஒரு பெண் பிரசவ வழியில் துடித்து கொண்டிருப்பதை போலவும், ரோஜா அவருக்கு உதவுவது போலவும் ப்ரோமோ உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மதர்ஸ் டே ஞாயிறு கிழமை வரை கொண்டு போக கதையை இழுக்க ஆரம்பிச்சிட்டாங்க டைரக்டர் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பழைய சம்பூர்ண இராமாயணம் கூட இத விட அதிக ஓடும் , ரோஜா வுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுகுறதுகுள்ள அவளுக்கு 45 வயசு ஆகிவிடும் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ரோஜா தேடி பிரச்சனைகள் வருகிறது போலியான அனுவிற்கு பிரச்சனைகள் இல்லை என்னங்கடா கொடுமை என கேட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!