கல்லூரி ஆசிரியர் பணி நியமனங்கள் நிறுத்தம் – அரசின் திடீர் முடிவு!

0
கல்லூரி ஆசிரியர் பணி நியமனங்கள் நிறுத்தம் - அரசின் திடீர் முடிவு!

அசாம் மாநிலத்தில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள கல்லூரிகளில் ஆசிரியர் பணி நியமனங்களை தவிர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.

பணி நியமனம்:

அசாம் கல்வித்துறை ஆனது துறைக்கு தேவையான மேம்பாட்டு பணிகளை கவனித்து வருகிறது. இந்நிலையில் அசாம் கல்வித்துறை அமைச்சர் மனோஜ் பெகு அவர்கள் கடந்த  சில நாட்களுக்கு முன்னதாக 79 கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் நிர்வாக குழு தலைவர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு மற்றும் உயர் கல்வி மேம்பாடு குறித்தான விவாதங்களை மேற்கொண்டனர்.

YIL வேலைவாய்ப்பு  2024 – சம்பளம்: ரூ.85,000/- || தேர்வு கிடையாது!

அதில் பள்ளிக் கல்வித்துறையில் அமல்படுத்தியதைப் போன்று மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள கல்லூரிகள் மற்றும் துறைகளுக்கான ஆசிரியர் பணி நியமனங்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும், குறைவாக மாணவர் உள்ள பள்ளிகளை ஒன்றிணைத்து அதன் செயல்பாடுகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சீரற்ற மாணவர் ஆசிரியர் விகிதங்கள் மற்றும் அதிக செயல்பாட்டு செலவுகளை கட்டுப்படுத்தும் காரணங்களுக்காக பள்ளிகளை ஒருங்கிணைக்கும் செயல்முறையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!