விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு..! – முதல்வர் உரை

0
முதல்வர் உரை
முதல்வர் உரை

விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு..! – முதல்வர் உரை

தற்போதைய நிலையில் இந்தியாவில் 606 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 563 இந்தியர்கள், 43 வெளிநாட்டினர் அடங்கும். அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 128 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 23 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இது குறித்து மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று உரையாற்றினார்.

கொரோனா கோரம் – இந்தியாவின் நிலை என்ன ?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரையின் அம்சங்கள்,

  • கொரோனா வைரஸ் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு ரூ. 3,780 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
  • கொரோனா வைரஸை தடுக்க ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
  • தமிழகத்தில் 10,158 படுக்கைகள் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளது. மேலும் படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
  • அத்தியாவசிய பொருட்கள் தேவையான அளவு கிடைக்கும், மக்கள் அச்சமடைய வேண்டாம்.
  • உங்களையும், உங்கள் குடும்பத்தையும் காப்பாற்ற ஊரடங்கு உத்தரவை கடைபிடியுங்கள்.
  • மருத்துவ உதவி தேவை எனில் 104 அல்லது 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
  • மக்கள் அனைவரும் சோசியல் டிஸ்டன்சிங் (Social Distancing) முறையை கடைபிடிக்க வேண்டும்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!