‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறிய சிபியை சுற்றி வளைத்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

0
'பிக் பாஸ்' வீட்டை விட்டு வெளியேறிய சிபியை சுற்றி வளைத்த ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ!
'பிக் பாஸ்' வீட்டை விட்டு வெளியேறிய சிபியை சுற்றி வளைத்த ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ!
‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறிய சிபியை சுற்றி வளைத்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து தற்போது வெளியே சென்றுள்ள போட்டியாளர் சிபி, முதன் முறையாக பொது வெளியில் தோன்ற ரசிகர்கள் பலரும் அவரை சுற்றி வளைத்துக்கொண்டு புகைப்படங்களை எடுத்துள்ள வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சிபி

மக்களின் எக்கச்சக்கமான ஆதரவுடன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் சில சுவாரஸ்யமாக திருப்பங்கள் நடந்தேறி இருக்கிறது. கடந்த 95 நாட்களுக்கு முன்னர் பிரமாண்டமாக துவங்கப்பட்ட ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் பல தெரிந்த முகங்களுடன் சில தெரியாத நபர்களும் இடம் பெற்றிருந்தனர். அந்த வகையில் நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட நடிகர் சிபி புவன சந்திரன் இந்த ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்காக ரவுடிகளிடம் அடிவாங்கி ரத்தம் சிந்திய கண்ணன் – ரசிகர்கள் ஷாக்!

ஆரம்பம் முதலே சிபியின் நடவடிக்கை மற்றும் போட்டி போடும் திறன் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்த நிலையில், இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. இருந்தாலும் ‘பிக் பாஸ்’ வீட்டில் அவ்வப்போது ஏற்படும் சில பிரச்சனைகளில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை உபயோகப்படுத்தி வந்த சிபி தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் தவறாமல் நாமினேட் செய்யப்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் விளையாட்டை புரிந்து கொண்டு ஆட ஆரம்பித்த சிபி ‘பிக் பாஸ்’ போட்டியின் இறுதி வாரம் வரை வந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வாரம் ‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறுவதற்காக கொடுக்கப்பட்ட பணத்தை எடுத்துக்கொண்டு சிபி வெளியேறி இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான வண்ணம் இருந்தது. என்றாலும் தாமரை, அமீர் ஆகியோரின் பெயரும் இந்த பட்டியலில் அவ்வப்போது அடிபட்டு வந்தது. ஆனால் தற்போது ‘பிக் பாஸ்’ வீட்டில் கொடுக்கப்பட்ட சுமார் ரூ.12 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு சிபி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

சன் டிவி ‘கயல்’ சீரியலில் நடிக்கும் நடிகை சைத்ரா யார் தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்!

இந்த தகவலை உறுதிபடுத்தும் விதமாக ‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறியவுடன் ரசிகர்களை சந்தித்திருக்கும் சிபி, அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த ‘பிக் பாஸ்’ சீசனின் வலிமை மிக்க போட்டியாளராக கருதப்பட்ட நடிகர் சிபி சந்திரனின் எதிர்கால வெற்றிக்காக அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!