கருணாஸ் மகனுடன் ஆல்பம் சாங்கில் இணையும் “சித்தி 2” சீரியல் நடிகை – வெளியான தகவல்!!

0
கருணாஸ் மகனுடன் ஆல்பம் சாங்கில் இணையும்
கருணாஸ் மகனுடன் ஆல்பம் சாங்கில் இணையும் "சித்தி 2" சீரியல் நடிகை - வெளியான தகவல்!!
கருணாஸ் மகனுடன் ஆல்பம் சாங்கில் இணையும் “சித்தி 2” சீரியல் நடிகை – வெளியான தகவல்!!

சன் டிவி சித்தி 2 சீரியல் மூலமாக பிரபலமடைந்த நடிகை ப்ரீத்தி ஷர்மா தற்போது நடிகர் கருணாஸ் மகனுடன் ஜோடி சேர்ந்து ஒரு ஆல்பம் சாங்கில் நடனம் ஆடி உள்ளார். அந்த பாடலை கென் கருணாஸ் பாடி நடித்துள்ளார்.

நடிகை ப்ரீத்தி ஷர்மா:

தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் பலர் பெரிய திரையில் பல படங்களில் நடித்து வருகின்றனர். ந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியல் வெண்பா கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகை ப்ரீத்தி ஷர்மா. அவர் இன்ஸ்டாகிராமில் பல்வேறு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அவர் பிறந்தது லக்னோவில், ஆனால் அவர் சிறு வயதில் குடும்பத்துடன் கோவையில் செட்டிலாகிவிட்டார். அவரது பள்ளி படிப்பை கோவையில் முடித்துள்ளார். இவர் 12 படிக்கும்போது ‘கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

பாதுகாப்பு பெட்டகத்திற்கு புதிய விதிமுறைகள் – ரிசர்வ் வங்கி அதிரடி!

அதன்பிறகு கல்லூரி படித்தபோது, பாடகராக வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டாராம். இந்த நேரத்தில் தான் டிக்டாக்கில் தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாரித்து இருக்கிறார். தவிர, போட்டோஷூட்டிலும் ஆர்வம் கொண்ட இவர், தான் விதவிதமாக எடுக்கும் போட்டோகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதன் பின்னர் சன் டிவி சித்தி 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ராதிகா திடீரென விலகி கொண்டார்.

TN Job “FB  Group” Join Now

அதன்பின் நடிகை ப்ரீத்தி ஷர்மா மற்றும் நந்தன் லோகநாதன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகை ப்ரீத்தி ஷர்மா கென் கருணாஸ் பாடி நடித்துள்ள ஒரு ஆல்பம் சாங்கில் அவருக்கு ஜோடியாக நடனமாடியுள்ளார். கென் கருணாஸ் பிரபல நடிகர் கருணாஸின் மகன் ஆவார். இவர் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படத்தில் நடிகர் தனுஷின் மகனாக நடித்திருந்தார்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!