ஜூன் 17 டெல்லி பயணம் – பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

0
ஜூன் 17 டெல்லி பயணம் - பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
ஜூன் 17 டெல்லி பயணம் - பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
ஜூன் 17 டெல்லி பயணம் – பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

வரும் ஜூன் 17ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அப்பயணம் தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஜூன் 17 காலை 10.30 மணி அளவில் பிரதமரை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சந்திக்க உள்ளார்.

முதல்வர் டெல்லி பயணம்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு தடுப்பு பணிகளை செய்து வருகிறார். மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்தார். அதனால் வேலை இழந்தோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.4000 இரண்டு தவணைகளாக வழங்கப்படுகிறது. மருத்துவ துறைகளுடன் கலந்தாலோசித்து ஊரடங்கை மேலும் நீட்டித்தார்.

ஆதார் – பான் இணைப்பிற்கு ஜூன் 30 கடைசி நாள் – மத்திய அரசு எச்சரிக்கை!

இதன் தொடர்ச்சியாக கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். உடனடியாக போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பதவியேற்ற நாள் முதல் நோய்த்தொற்றை ஒழிக்கவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் உரிய பணிகளை செய்து வருகிறார். தடுப்பூசி செலுத்துவதை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார். மேலும் தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்றுவதே முக்கிய குறிக்கோள் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

TN Job “FB  Group” Join Now

இதன் தொடர்ச்சியாக ஜூன் 17-ஆம் தேதி புது டெல்லி சென்று அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். இதற்காக அவர் ஜூன் 16-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்படுகிறார். ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்குதல், தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும், மத்திய அரசு சார்பில் வழங்க வேண்டிய பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிலுவைத் தொகைகள், தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து போன்ற அறிக்கைகளை பிரதமரிடம் அளித்து கோரிக்கை வைக்கயுள்ளார். முக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு செல்லும் முதல் டெல்லி பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!