சென்னை பல்கலைக்கழக பருவத்தேர்வு இன்று முதல் தொடக்கம் – வழிகாட்டு நெறிமுறைகள் இணையத்தில் வெளியீடு!!

0
சென்னை பல்கலைக்கழக பருவத்தேர்வு இன்று முதல் தொடக்கம் வழிகாட்டு நெறிமுறைகள்
சென்னை பல்கலைக்கழக பருவத்தேர்வு இன்று முதல் தொடக்கம் வழிகாட்டு நெறிமுறைகள்
சென்னை பல்கலைக்கழக பருவத்தேர்வு இன்று முதல் தொடக்கம் – வழிகாட்டு நெறிமுறைகள் இணையத்தில் வெளியீடு!!

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் இந்த வருட செமஸ்டர் தேர்வு இன்று (டிசம்பர் 21) முதல் தொடங்கி ஜனவரி 6 வரை இணைய வழியாக நடைபெறவுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பருவத்தேர்வு தொடக்கம்:

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் 21 முதல் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த ஆண்டு பருவத் தேர்வில் இறுதியாண்டு மாணவர்கள் தவிர அனைவர்க்கும் தேர்வுகள் ரத்து செய்வதாக தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது.

அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற்றதை கண்டித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் “யுஜிசி விதிகளுக்கு முரணாக அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என பல்கலைக்கழகங்கள் முடிவு வெளியிட கூடாது. பல்கலைக்கழகங்கள் ஆப்லைன் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும்” என உத்தரவிட்டது.

காரணமின்றி விடுப்பு எடுத்த அரசு கல்லூரி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை – கல்லூரி கல்வி இயக்குனர் அறிக்கை!!!

இந்த அறிவிப்பை தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இன்று (டிசம்பர் 21) முதல் இந்த ஆண்டிற்கான பருவத் தேர்வுகள் நடைபெற உள்ளது. அதனோடு அரியர் மாணவர்களுக்கும், கூடுதல் மதிப்பெண்ணுக்கான முன்னேற்றத் தேர்வும் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளம் www.unom.ac.in இல் வெளியிடப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலைவாய்ப்பு செய்திகள்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!