நடிகர் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

0
நடிகர் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் விஜய் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு வழங்கியிருந்த நிலையில் அந்த வழக்கை தள்ளுபடி செய்து வரி ஏய்ப்பு செய்ய முயன்றதால் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

வழக்கு தள்ளுபடி:

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆவார். இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார். இவர் கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்துள்ளார். இது மிகவும் விலை உயர்ந்த, முக்கிய புள்ளிகளுக்கு மட்டுமே வழங்கும் கார் ஆகும். இதன் விலை பல கோடியாகும்.

2 கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தினால் ஆபத்து – WHO எச்சரிக்கை!

இந்த சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தவில்லை என்பதால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய முடியவில்லை. இந்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துமாறு வணிக வரித்துறை உதவி ஆணையர் விஜய்க்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய், நுழைவு வரி செலுத்துவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று உய்ரநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மேலும், காரை பதிவு செய்யாத காரணத்தால் அதனை பயன்படுத்த முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.

TN Job “FB  Group” Join Now

இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி, மனுதாரரின் தொழில் குறித்து கேட்டார். அவர், புகழ்பெற்ற சினிமா நடிகர் என்பதை தெரிந்த பிறகு, வரி செலுத்துவது என்பது அனைத்து குடிமகனும் செய்ய வேண்டிய கடமை ஆகும். வரி பணத்தின் மூலமாக மட்டுமே நாட்டின் அனைத்து பணிகளும் செய்யப்படுகிறது. சமூக நீதிக்காக பாடுபடுவது போல் திரைப்படங்களில் கடும் நடிகர்கள், வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. வரி ஏய்ப்பு செய்வது தேசத்துரோகம் ஆகும். எனவே, இறக்குமதி செய்த காரின் வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என்றும், நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அதனை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!