சென்னை: 37 ஆயிரம் ரூபாயை கடந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!

0
சென்னை: 37 ஆயிரம் ரூபாயை கடந்த ஆபரணத் தங்கத்தின் விலை - இன்றைய நிலவரம்!
சென்னை: 37 ஆயிரம் ரூபாயை கடந்த ஆபரணத் தங்கத்தின் விலை - இன்றைய நிலவரம்!
சென்னை: 37 ஆயிரம் ரூபாயை கடந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்றைய மாலை நேர நிலவரப்படி தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.264 அதிகரித்துள்ளது

தங்கத்தின் விலை:

இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கிலிருந்து தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நகைகள் வாங்குவதில் தயக்கம் காட்டி வந்தனர். ஓரிரு மாதங்களுக்கு பிறகு விலை குறையும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் ஊரங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய போது எதிர்பார்த்த அளவு தங்கத்தின் விலை குறையவில்லை. தினந்தோறும் ஏற்ற, இறக்கத்தை கண்டு வருகிறது.

தமிழக அரசு வேலை – ரூ.70 லட்சம் மோசடி! முன்னாள் அதிமுக அமைச்சர் தலைமறைவு!

பொதுவாக பண்டிகை, திருவிழா, சுபமுகூர்த்த தினங்களில் மக்கள் நகை வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். இந்த நேரத்தில் தங்க நகை விலை வழக்கத்தை விட அதிகரிக்கிறது. கடந்த 4ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்க நகை விலை சவரனுக்கு ரூ.400 வரை அதிகரித்தது. அதனை தொடர்ந்து பண்டிகை முடிந்தும் தற்போதும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 9ம் தேதி பவுனுக்கு ரூ.152 அதிகரித்து ஒரு பவுன் ரூ.36,264க்கும், நவம்பர் 10ம் தேதி பவுனுக்கு ரூ.168 அதிகரித்து ஒரு பவுன் ரூ.36,432க்கும் விற்கப்பட்டது. மேலும் அடுத்த நாள் (நவ.11ம் தேதி) ஒரு சவரனுக்கு ரூ.92 அதிகரித்து ரூ.37,168க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது.

தமிழக கூட்டுறவு வங்கிளில் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி – முக்கிய உத்தரவு!

அதனை தொடர்ந்து இன்று மாலை நேர நிலவரப்படி தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.264 அதிகரித்து ரூ.37,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.33 உயர்ந்து ரூ.4,655க்கு விற்பனையாகிறது. தங்க விலை உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தங்க நகைகள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் வரும் நாட்களில் இன்னும் விலை அதிகரிக்க தான் வாய்ப்பு உள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!