சென்னையில் அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

0
சென்னையில் அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
சென்னையில் அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
சென்னையில் அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சரிவை கண்டுள்ளது. இத்தகைய சரிவு நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை தென் மாநிலங்களில் வசிக்கும் பெண்கள் பெரும்பாலும் நகை விரும்பிகளாக இருந்து வருகின்றனர். இவ்வாறு பெண்களுக்கு தங்க ஆபரணங்களின் மீது உள்ள மோகம் அதிகரிப்பதனால் அதன் தேவையும் அதிகரிக்கிறது. அவ்வாறு ஆபரணத்தின் தேவை அதிகரிப்பதால் அதன் விலையும் அதிகரித்து வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு 15 முதல் 20 சதவீதம் சம்பள உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!

ஆனால் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. அதாவது கடந்த நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்டது. அதனால் தீபாவளி பண்டிகை முன்னிட்டு விலை குறைந்ததால் பெரும்பாலானோர் தங்க ஆபரணங்கள் வாங்குவதில் தங்களது ஆர்வத்தை செலுத்தி வந்தனர். அதன் பின்னர் மீண்டும் ஆபரண தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. அதேபோல் தற்போது டிசம்பர் மாத தொடக்கத்திலும் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை கண்டது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து – WHO அறிவுறுத்தல்! ஓமைக்ரான் பரவல் எதிரொலி!

அதன் பின்னர் மீண்டும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று டிச.21ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து 1 சவரன் ரூ.36,384க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமிற்கு ரூ.26 குறைந்து 1 கிராம் ரூ.4,548க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.65.80க்கு விற்பனையாகிறது. இத்தகைய நகை விலை குறைவு நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!