பணம் டெபாசிட் செய்ய கட்டணம் முதல் LPG சிலிண்டர் பதிவு முறை வரை – நவ.1 முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள்!

0
பணம் டெபாசிட் செய்ய கட்டணம் முதல் LPG சிலிண்டர் பதிவு முறை வரை - நவ.1 முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள்!
பணம் டெபாசிட் செய்ய கட்டணம் முதல் LPG சிலிண்டர் பதிவு முறை வரை - நவ.1 முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள்!
பணம் டெபாசிட் செய்ய கட்டணம் முதல் LPG சிலிண்டர் பதிவு முறை வரை – நவ.1 முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள்!

நாடு முழுவதும் நவம்பர் மாதம் முதல் சிலிண்டர், ரெயில்வே மற்றும் வங்கி என அனைத்திலும் ஒரு சில மாற்றங்கள் ஏற்படும் என்று தகவல் வெளியானது. அந்த மாற்றங்கள் அனைத்தும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

நான்கு புதிய மாற்றங்கள்:

நாடு முழுவதும் நவம்பர் மாதம் முதல் சிலிண்டர், ரெயில்வே மற்றும் வங்கி என அனைத்திலும் ஒரு சில மாற்றங்கள் ஏற்படும் என்று தகவல் வெளியானது. அந்த மாற்றங்கள் அனைத்தும் கடந்த நவம்பர் 1 ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது சிலிண்டர் பொறுத்தவரை வழக்கம் போல் அல்லாமல் புக் செய்தவுடன் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். அதனை சிலிண்டர் டெலிவரி செய்ய வருபவரிடம் தெரிவித்தால் தான் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும். ஆனால் வணிக சிலிண்டர்களுக்கு இந்த விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Airtel vs Jio vs BSNL vs Vi வழங்கும் ரூ.300 க்குள் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்கள் – சூப்பர் சலுகை!

அதனை தொடர்ந்து வங்கிகளில் பணம் செலுத்துவது மற்றும் எடுப்பது போன்ற செயல்பாடுகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது நவம்பர் 1 முதல் நீங்கள் கடன் கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும். இந்தத் தொகை ரூ.150 ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 3 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தாலோ, எடுத்தாலோ கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது 4 வது முறை டெபாசிட் செய்யும் போது ரூ.40, அதேபோல் பணம் எடுப்பதற்கு ரூ.100 வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பேங்க் ஆப் பரோடா முதலில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

பிரதமர் மோடி அவர்களின் அறிவுறுத்தலின்படி தொடங்கப்பட்ட ஜன்தன் கணக்கைத் தொடங்கியிருந்தால் பணத்தை டெபாசிட் செய்வதற்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. அதனை தொடர்ந்து ரெயில்வே நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 13 ஆயிரம் பயணிகள் ரெயில்களும், 7 ஆயிரம் சரக்கு ரெயில்களும் இந்த நேர மாற்ற அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டரை டஜன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய ரெயில் நேரங்களின் தெளிவான அட்டவணையை IRCTC-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!