மாத சம்பளம் முதல் ATM கட்டணம் அதிகரிப்பு வரை – ஆகஸ்ட் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!

0
மாத சம்பளம் முதல் ATM கட்டணம் அதிகரிப்பு வரை - ஆகஸ்ட் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!
மாத சம்பளம் முதல் ATM கட்டணம் அதிகரிப்பு வரை - ஆகஸ்ட் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!
மாத சம்பளம் முதல் ATM கட்டணம் அதிகரிப்பு வரை – ஆகஸ்ட் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!

இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பல்வேறு மாற்றங்கள் அமலாக உள்ளது. அதில் ATM கட்டணங்கள் உயர்வு, மாத சம்பளம், EMI செலுத்துதல், IPPB வங்கி கட்டணங்கள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படவுள்ளது. இதற்கான முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.

சம்பளம், EMI செலுத்துதல் தொடர்பான மாற்றம்

என்ஏசிஎச் ஆகஸ்ட் 1, 2021 முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் அறிவித்தது. EMI செலுத்துதல், வட்டி, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்ற ஒன்று முதல் பல கடன் பரிமாற்றங்களுக்கு பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்.பி.சி.ஐ) உதவுகிறது. இது மின்சாரம், எரிவாயு, தொலைபேசி, நீர், கடன்களுக்கான குறிப்பிட்ட தவணைகள், பரஸ்பர நிதிகளில் முதலீடு மற்றும் காப்பீட்டு பிரீமியம் ஆகியவற்றுக்கான கட்டணங்களைச் செலுத்த உதவுகிறது. எனவே இனி வாரத்தின் அனைத்து நாட்களிலும் (ஞாயிற்றுக் கிழமை உட்பட) மாத சம்பளம், EMI செலுத்துதல் போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும்.

ATM கட்டண மாற்றம்

ஜூன் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் மற்றொரு உத்தரவின் படி, ஏடிஎம்களில் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டணம் ₹ 15 முதல் ₹ 17 ஆக உயர்த்தப்பட உள்ளது. ரிசர்வ் வங்கி அறிவித்தபடி ஆகஸ்ட் 1 முதல் இந்த உயர்வு அமலில் இருக்கும்.

TN Job “FB  Group” Join Now

கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பரிமாற்றக் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு, கட்டணம் ₹ 5 முதல் ₹ 6 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஐபிபிபி வங்கி கட்டணங்களில் திருத்தம்

இந்த மாத தொடக்கத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (ஐபிபிபி) தனது கட்டண கொள்கைகளை மாற்றி அமைத்து உள்ளது. ஆகஸ்ட் 1 முதல் வீடு தேடி வரும் வங்கி சேவைகளுக்கு கட்டணம் அமலாக உள்ளது. ஆனால் முன்னராக இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிஐசிஐ வங்கி கட்டண திருத்தம்

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கி ஐசிஐசிஐ தனது உள்நாட்டு சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கான பண பரிவர்த்தனைகள், ஏடிஎம் பரிமாற்றம் மற்றும் காசோலை புத்தக கட்டணங்களின் வரம்புகளை திருத்துவதாக தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. கட்டணங்கள் திருத்தம் அனைத்து பண பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும். வங்கியில் வழக்கமான சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நான்கு இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகின்றன. இலவச வரம்புகளுக்கு மேல் உள்ளவர்கள் ஒரு பரிவர்த்தனைக்கு ₹ 150 கட்டணம் வசூலிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!