SBI வங்கியின் ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – வீடியோ மூலம் சான்றிதழ் சமர்ப்பிப்பு!

0
SBI வங்கியின் ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - வீடியோ மூலம் சான்றிதழ் சமர்ப்பிப்பு!
SBI வங்கியின் ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - வீடியோ மூலம் சான்றிதழ் சமர்ப்பிப்பு!
SBI வங்கியின் ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – வீடியோ மூலம் சான்றிதழ் சமர்ப்பிப்பு!

SBI வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பித்து ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள எளிய வீடியோ அழைப்பு சேவைகளை வங்கி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

வீடியோ அழைப்பு

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி மில்லியன் கணக்கிலான ஓய்வூதியதாரர்களுக்கு தடையற்ற வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிப்பு அனுபவத்தை எளிய முறையில் வழங்கும் நோக்கத்துடன் வீடியோ லைப் சான்றிதழ் (VLC) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது அரசின் அறிவுறுத்தல்களின் கீழ், ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதிக்குள் தங்கள் வாழ்க்கை சான்றிதழ் அல்லது ஜீவன் பிரமானை தாக்கல் செய்ய வேண்டும்.

தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் Airtel, Jio வின் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரங்கள் இதோ!

அந்த வகையில் தற்போது, ஓய்வூதியம் பெறுபவர் நவம்பர் 30 ஆம் தேதி வரை எந்த நேரத்திலும் JPP ஐ சமர்ப்பிக்கலாம். இது வழங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாகும். இப்போது ஓய்வூதியம் பெறுவதற்கு வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க இனி SBI வங்கிகளுக்கு செல்லத் தேவையில்லை. அதற்கு பதிலாக ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் வசதிக்கேற்ப வீடியோ அழைப்பின் மூலம் SBI ஊழியர்களிடம் தங்களது வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிக்கும் செயல்முறையை முடிக்கலாம்.

  • இப்போது SBI வங்கிக் கிளைக்கு செல்லாமலேயே வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ்,
  • ஓய்வூதியம் பெறுவோர் www.pensionseva.sbi என்ற இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
  • வீடியோ LC கிளிக் செய்து SBI ஓய்வூதிய கணக்கு எண்ணை உள்ளிடவும்.
  • அவர்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களில் பெறப்பட்ட OTP எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.
  • பிறகு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்தவுடன் Start Journey என்பதைக் கிளிக் செய்யலாம்.
  • ஓய்வூதியம் பெறுவோர் தங்களுடைய அசல் பான் கார்டை உடன் வைத்திருக்க வேண்டும்.
  • தொடர்ந்து I am ready என்பதைக் கிளிக் செய்து, வீடியோ அழைப்பைத் தொடங்க அனுமதி வழங்க வேண்டும்.
  • இதற்கு பின்பு SBI வங்கியின் அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு சான்றிதழ் சமர்ப்பிக்கும் செயல்முறைகளை முடிப்பார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!