மத்திய அரசு ஊழியர்களின் DA, DR உயர்வு – தொடரும் காத்திருப்பு!!

2
மத்திய அரசு ஊழியர்களின் DA, DR உயர்வு - தொடரும் காத்திருப்பு!!
மத்திய அரசு ஊழியர்களின் DA, DR உயர்வு - தொடரும் காத்திருப்பு!!
மத்திய அரசு ஊழியர்களின் DA, DR உயர்வு – தொடரும் காத்திருப்பு!!

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA, DR உயர்வு தொகை தற்போது மேலும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியப்படி கடந்த 2020 ஜனவரி 1ம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை மூன்று தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிஏ மற்றும் டிஆர் தொகை விரைவில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. அதன் பின்னர், நிதித்துறை செயலர் அனுராக் சிங் தாக்கூர், 2021 ஜூலை 1 முதல் மூன்று தவணை டிஏ மற்றும் டிஆர் தொகை வழங்கப்படும் என்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

தற்போது 17% ஆக உள்ள அகவிலைப்படியானது 28% வரை உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஏ.ஐ.சி.பி.ஐ தரவுகளின்படி, 2020 ஜனவரி முதல் ஜூன் வரை டி.ஏ.யில் 3% அதிகரிப்பு, 2020 ஜூலை-டிசம்பர் மாதங்களுக்கு 4% உயர்வு மற்றும் 2021 ஜனவரி-ஜூன் மாதங்களில் 4% அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் 11% உயர்த்தப்பட்டு 28% அகவிலைப்படி இருக்கும்.

தமிழகத்தில் இ-பாஸ் அப்ளை செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

ஜே.சி.எம் தேசிய கவுன்சிலுக்கும், செலவுத் துறை அதிகாரிகளும் இணைந்து 7 வது மத்திய ஊதியக்குழு மேட்ரிக்ஸ் இல் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக ஆலோசனைக் கூட்டம் மே 8 ம் தேதி நடக்க இருந்தது. தற்போது கொரோனா பரவல் காரணமாக ஆலோசனைக் கூட்டம் மே கடைசி வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜே.சி.எம் தேசிய கவுன்சில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) மற்றும் நிதி அமைச்சக (செலவுத் துறை) அதிகாரிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. A request. Please write when the due DA/DR will be sanctioned and paid actually by the Government instead of vague conjectures.Most of the central govt. employees and pensioners already know what is conveyed in this article.

  2. 2024 தேர்தலுக்கு முன்னாடி போட்டுருவான், ஓட்டு வாங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!