மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு – ஜூலை மாதம் வழங்கல்!!

1
மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு - ஜூலை மாதம் வழங்கல்!!
மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு - ஜூலை மாதம் வழங்கல்!!
மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு – ஜூலை மாதம் வழங்கல்!!

2020 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படாத காரணத்தினால் இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு வழங்கப்படும் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு:

2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நாடு தழுவிய முழு ஊரடங்கு மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் முடங்கின. உரிய வரிவசூல் இல்லாத காரணத்தால் மத்திய அரசிற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்யும் நோக்கில் செலவினங்களை குறைக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஜனவரி மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டது.

தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – காப்பீட்டு திட்டம்!

தொடர்ந்து ஊழியர்கள் அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளதால், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு இறுதியில் அடிப்படை அகவிலைப்படி 17 சதவிகிதமாக இருந்தது. தற்போது உயர்வு அடிப்படையில், 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 சதவிகித உயர்வும், ஜூன் மாதம் 3 சதவிகித உயர்வும், 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 சதவிகித உயர்வும் வழங்கப்பட்டு மொத்தமாக 11 சதவிகித அகவிலைப்படி ஜுலை மாதம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 18,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் அகவிலைப்படி 15% உயர்த்தப்பட்டால் மாதம் கூடுதலாக 2700 ரூபாய் கிடைக்கும். அதாவது, சம்பளம் உயரும். இந்த ஆண்டு இறுதியில் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வையும் சேர்த்து 32 சதவிகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு காரணமாக 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Your channel is giving false news regarding DA for central government servants. Why your channel is publisging unauthorized information. Why you are zelous against the govt employees?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!