CCRH மத்திய கவுன்சிலில் Staff Nurse வேலை – மாதம் ரூ.1,42,400 சம்பளம்..!
ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் நிறுவனத்தில் (CCRH) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Staff Nurse பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Central Council for Research in Homoeopathy (CCRH) |
பணியின் பெயர் | Staff Nurse |
பணியிடங்கள் | 08 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
CCRH காலிப்பணியிடங்கள்:
ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் நிறுவனத்தில் தற்போது Staff Nurse பணிக்கு என்று மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
CCRH கல்வித் தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் General Nursing & Midwifery பாடப்பிரிவில் Diploma அல்லது Nursing பாடப்பிரிவில் B.Sc முடித்திருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் மாநில அல்லது இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருப்பது அவசியமானதாகும்.
Exams Daily Mobile App Download
CCRH முன் அனுபவம்:
- B.Sc முடித்தவர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Nursing துறையில் குறைந்தது 6 மாதம் பணி செய்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Diploma முடித்தவர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Nursing துறையில் குறைந்தது 2 ஆண்டு பணி செய்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
CCRH வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 01.07.2022 அன்றைய நாளின்படி, 30 வயது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு மத்திய அரசு விதிமுறைகளின் படி வயது தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
CCRH சம்பள விவரம்:
இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு Level-7 என்கிற அளவின் படி குறைந்தது ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை ஊதிய தொகை மாதம் அளிக்கப்பட உள்ளது.
CCRH விண்ணப்ப கட்டணம்:
- General / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.300/-
- Women / SC / ST / PH விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
CCRH தேர்வு முறை:
இப்பணிக்கு எழுத்து தேர்வு (Written Test) வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள்.
CCRH விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும். மேலும் தபால் வந்து சேர இறுதி நாளாக 29.07.2022 ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.