CBSE மாணவர்கள் கவனத்திற்கு – 10 & 12வது பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!

0
CBSE மாணவர்கள் கவனத்திற்கு - 10வது &12வது பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!
CBSE மாணவர்கள் கவனத்திற்கு - 10வது &12வது பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!

CBSE மாணவர்கள் கவனத்திற்கு – 10 & 12வது பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது தற்போது 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு அட்டவணை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பதிவின் மூலம் CBSE ல் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் தங்களின் தேர்வு குறித்த முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

CBSE 10 &12 ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியீடு:

தற்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் இருந்து (CBSE) அதன் கீழ் செயல்படும் கல்வி நிலையங்களில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தற்போது 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை CBSE அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வானது 29 ஏப்ரல் முதல் 24 மே வரை பாடத்திற்கு ஏற்ப நடைபெறும் என்றும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வானது 26 ஏப்ரல் முதல் 15 ஜூன் வரை பாடம் மற்றும் பிரிவிற்கு ஏற்ப நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து மாணவ மாணவியர்கள் இப்பதிவின் கீழுள்ள இணைப்பின் மூலம் தங்களுக்கு தேவையான அட்டவணையை பதிவிறக்கம் செய்து, பிரிவு மற்றும் பாடத்திற்கு ஏற்றார்ப்போல் தேர்வு நடைபெற உள்ள தேதி மற்றும் பாடங்களை தெரிந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கு என தனித்தனியே இணைப்புகள் கொடுத்துள்ளோம். மேலும் இத்துடன் தேர்வுகள் குறித்த அறிவிப்பு இணைப்பும் கொடுத்துள்ளோம். பொதுத் தேர்வுகளுக்காக காத்திருக்கும் மாணவ மாணவிகள் உடனே தேவையான அட்டவணையை பெற்று பயனடையுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download CBSE  10 Exam Time Table 2022 PDF

Download CBSE  12 Exam Time Table 2022 PDF

Download CBSE  Exam Notification 2022 PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!