CBSE 2ம் பருவ பொதுத்தேர்வுகள் ரத்து? உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை!

0
CBSE 2ம் பருவ பொதுத்தேர்வுகள் ரத்து? உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை!
CBSE 2ம் பருவ பொதுத்தேர்வுகள் ரத்து? உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை!
CBSE 2ம் பருவ பொதுத்தேர்வுகள் ரத்து? உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை!

மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் 2ம் பருவ பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அதன்பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

CBSE பொதுத்தேர்வு:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2021 – 2022ம் கல்வி ஆண்டிற்கு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை இரண்டு பருவங்களாக நடத்த முன்னதாக திட்டமிட்டது. கொரோனா தொற்று பாதிப்புகள் நிலைமையை கருத்தில் கொண்டு கல்வி வாரியம் இந்த முடிவை எடுத்தது. இதன்படி, முதல் பருவ பொதுத்தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. மேலும், 2ம் பருவ பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 26ம் தேதி நேரடியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அடிப்படை ஊதியம் ரூ.15,000க்கு மேல் பெறுபவர்களுக்கு புதிய ஓய்வூதியம் – EPFO திட்டம்!

ஆனால், நாடு முழுவதும் உள்ள பல மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் CBSE 2ம் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 15க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் 10, 12ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான மாற்று மதிப்பீட்டு முறையைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சிபிஎஸ்இ மட்டுமல்ல, இடைநிலைக் கல்விக்கான இந்தியச் சான்றிதழ் (ஐசிஎஸ்இ), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் (NIOS) மற்றும் பிற மாநில கல்வி வாரியங்கள் போன்ற பிற போர்டுகளுக்கும் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு நிறைவு – விரைவில் மதிப்பெண் வெளியீடு!

2022 பொதுத்தேர்வை எதிர்க்கும் மனுவுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் இதற்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சமூக ஊடக தளமான ட்விட்டர் ல் இது தொடர்பாக, #internalassessmentforall மற்றும் #cancelboardexams2022 என்ற பல்வேறு ஹேஷ்டேக்குகளை காண முடிக்குறது. மாணவர்கள் தாங்கள் தொடர்ந்து ஆன்லைன் முறையில் மட்டுமே பாடங்களை கவனிக்க முடிந்ததாகவும், இதனால் நேரடி முறையில் தேர்வுகளை சந்திக்க தயாராக இல்லையென்றும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!