தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புகள் – அரசுக்கு வலியுறுத்தல்!

0
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புகள்
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புகள் – அரசுக்கு வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை முன்னிறுத்தி பாமக தலைவர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு:

ஜாதி வாரி கனாக்கெடுப்புகளை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் மேற்கொள்வதற்கான வலியுறுத்தல்கள் நடந்து வருகிறது. ஜாதி வாரி கணக்கெடுப்புகளின் மூலம் எத்தனை சதவீதம் மக்கள் உள்ளனர். அவர்களுக்கான தனிப்பட்ட இட ஒதுக்கீடு போன்றவற்றை அரசு துறைகளில் பணி வாய்ப்பு, கல்வி வாய்ப்பு போன்ற பலவற்றுக்கும் நிர்ணயம் செய்யவும் வழிகாட்டுதலாக இருக்கும். நாட்டில் தற்போது வரை பீகார், கர்நாடகம், ஒரிசா போன்ற மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்புகள் நடந்துள்ளது. உச்ச நீதிமன்றமும் இதற்கான அனுமதியை அளித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புகளை  நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் ஜாதி வாரி கணக்கெடுப்புகளின் மூலம் தமிழர்களின் உரிமையை நிலை நாட்ட முடியும் என்றும் தமிழ்நாடு வளர்ச்சி பெற ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். எனவே தமிழக அரசு உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் Junior Research Fellow வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!