CA நவம்பர் மாத தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி நாள் – ICAI வாரியம் அறிவிப்பு!!

0
CA நவம்பர் மாத தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி நாள் - ICAI வாரியம் அறிவிப்பு!!
CA நவம்பர் மாத தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி நாள் - ICAI வாரியம் அறிவிப்பு!!
CA நவம்பர் மாத தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி நாள் – ICAI வாரியம் அறிவிப்பு!!

இந்திய பட்டயக் கணக்காளர் வாரியம் (ICAI) நடத்தும் பட்டயக் கணக்கறிஞர்களுக்கான (CA) நவம்பர் மாத தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (31.3.2021) இறுதி நாளாகும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்திய பட்டய கணக்காளர் வாரியம்:

இந்திய பட்டய கணக்காளர்கள் வாரியம் பட்டயக் கணக்கறிஞர்கள் தொழிலை வழிநடத்த உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான நிறுவனம் ஆகும். பட்டயக் கணக்காளராக விரும்பும் நபர்கள் ICAI வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து சான்றிதழ் வழங்கப்படும். இவர்கள் மத்திய அரசால் பதிவு செய்யப்பட்ட பட்டயக் கணக்காளராக அறிவிக்கப்படுவார்கள்.

ஏப்ரல் 4ம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை – மாநில அரசு உத்தரவு!!!

CA தேர்வு:

பட்டயக் கணக்கறிஞர்கள் (CA) பணிக்கான தேர்வுகளை தேர்வு வாரியம் ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் மே என இரண்டு முறை நடத்தும். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக இம்முறை ஜனவரி மாதத்தில் ஒரு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டு தேர்வு ஜனவரி 31ம் தேதி தேர்வு நடந்தது. 2021 நவம்பர் மாதம் நடக்க இருக்கும் இடைநிலைத் தேர்வுக்கு ஜனவரி மாத முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

நவம்பர் மாத தேர்வு:

ICAI வாரியம் 2021 நவம்பர் மாத CA தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, எட்டு மாத கால பயிற்சி அவசியம் என்ற விதிமுறையை தளர்த்தியுள்ளது. இந்த விதிமுறை 2020 நவம்பர் மாத தேர்வை தவற விட்ட மற்றும் 2021 ஜனவரி மாத முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், நவம்பர் மாத இடைநிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (31.3.2021) கடைசி நாள் என்றும் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!