Bank of India (BOI) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Faculty பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | Bank of India (BOI) |
பணியின் பெயர் | Faculty |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.02.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Bank of India காலிப்பணியிடங்கள்:
BOI வங்கியில் காலியாக உள்ள Faculty பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Faculty கல்வி தகுதி:
Faculty பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree அல்லது Diploma தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
Faculty அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 02 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இலவச ஆதார் அப்டேட் – மார்ச் 14 கடைசி நாள் || மிஸ் பண்ணிடாதீங்க!
Faculty வயது வரம்பு:
இந்த BOI வங்கி சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 25 வயது முதல் 65 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
BOI ஊதியம்:
Faculty பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதந்தோறும் ரூ.20,000/- ஊதியமாக பெறுவார்கள்
BOI தேர்வு முறை:
Written Test
Personal Interview
Demonstration / Presentation
BOI விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (26.02.2024) தபால் செய்ய வேண்டும்.