விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் சுசித்ரா யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் சுசித்ரா யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் சுசித்ரா யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் சுசித்ரா யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

பாக்கியலட்சுமி தொடரில் படிக்காத அப்பாவி பெண்ணாகவும், குடும்பத்தை தாங்கும் பெண்ணாகவும் பாக்யா வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் குறித்தான பல தகவல்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி தொடரில் குடும்ப பெண்ணாக வலம் வரும் பாக்யா தனது நடிப்பால் தமிழ் மக்கள் அனைவரின் மனதிலும் பதித்தார். பாக்கியலட்சுமி தொடரில் பாக்யா கதாபாத்திரத்தில் படிப்பவரின் உண்மையான பெயர் சுசித்ரா. இவர் பெங்களூரில் உள்ள நேஷனல் பள்ளியில் (National Public School) தனது பள்ளி படிப்பை முடித்தார். அதே பெங்களூர் நேஷனல் கல்லூரியில் டிகிரி முடித்தார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இனி முல்லையாக புது நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!’

இவர் தனது 14 வயதில் குழந்தை நட்சத்திரமாக எ(A) என்கிற கன்னட திரைப்படத்தில் உபேந்திரா அவர்களின் தங்கையாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படமே இவருக்கு பேரையும் புகழையும் பெற்று கொடுத்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து ஒன்மேன் ஆர்மி, மஞ்சுநாதா, காட் பாதர், சிவா, பீமா, கிரெசி ஸ்டார் மற்றும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை 20 க்கும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மீனா ஹேமா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

மனே தன என்கிற கன்னட சீரியலின் மூலமாக சின்னத்திரையில் நுழைந்த இவர் காவியாஅஞ்சலி, ராதா ரமணா, மாங்கல்ய, ஈஸ்வரி மற்றும் பல தொடர்களில் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் அபரஜ்ஜித, நாகாம்மா, பந்தம், மௌன ராகம், அபிலாஷா போன்ற தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாணல் தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் நுழைந்த இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரரத்தில் நடித்து வருகிறார். படிக்காத குடும்ப பெண் படும் கஷ்டங்களை பாக்கியலட்சுமி தொடர் அப்படியே தத்ரூபமாக காட்டி வருவதால் மக்கள் பலரும் இந்த தொடரை விரும்பி பார்த்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!