விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ இல் களமிறங்கும் 10 போட்டியாளர்கள் முழு விபரம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'பிக்பாஸ் சீசன் 5' இல் களமிறங்கும் 10 போட்டியாளர்கள் முழு விபரம் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'பிக்பாஸ் சீசன் 5' இல் களமிறங்கும் 10 போட்டியாளர்கள் முழு விபரம் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ இல் களமிறங்கும் 10 போட்டியாளர்கள் முழு விபரம் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ள நிலையில், வீட்டிற்குள் செல்ல இருக்கும் டாப் 10 போட்டியாளர்கள் குறித்த உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர்கள்:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் இந்த ஆண்டு ஐந்தாவது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க காலத்திலிருந்து தொகுப்பாளராக ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை 5வது முறையாக தொகுத்து வழங்க உள்ளார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அகிலன் ரீஎன்ட்ரி? வெண்பாவுடன் ஜோடி போட்ட பாரதி – வெளியான புகைப்படம்!

மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டு கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. அதில் டாப் 10 போட்டியாளர்கள் குறித்த தகவல்களை காணலாம்.

மிளா:

நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் தான் திருநங்கை மிளா, இவர் ஒரு அழகு கலை நிபுணர் மட்டுமில்லாமல் ஆடை அலங்கார நிபுணர் கூட. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாமல் இந்த ஆண்டு திருநங்கை கலந்து கொள்ள இருப்பதால் மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சந்தோஷ் பிரதாப்:

இவர் தமிழ் சின்னத்திரை நடிகர், மேலும் தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

கோபிநாத் ரவி:

கோபிநாத் ரவி ஒரு மாடலாக புகழ் பெற்றவர், அவர் ஏற்கனவர் Mr.இந்தியா பட்டம் பெற்றவர்.

பிரியங்கா தேஷ்பாண்டே

பிரியங்கா தேஷ்பாண்டே விஜய் டிவி தொகுப்பாளினி ஆவார். சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

நமீதா மாரிமுத்து

நமீதா மாரிமுத்து ஒரு திருநங்கை அவர். அவரும் ஒரு மாடல் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலராக இருக்கிறார்.

பவானி ரெட்டி

மாடலாக தன் வாழ்க்கையை துவங்கிய பவானி ரெட்டி வெள்ளித்திரையில் ட்ரீம் என்ற தெலுங்கு படத்தில் தான் முதன் முதலில் திரையுலகில் தோன்றினார். அதன் பின் தமிழ் சீரியல்களில் நடித்துள்ளார்.

பிரியா ராமன்

பிரியா ராமன் சூரியவம்சம் படத்தில் ரோசா பூ பாடல் மூலமாக பிரபலமானவர். அவர் தற்போது சின்னத்திரை பிரபல தொலைக்காட்சியின் சீரியல்களில் நடித்து வருகிறார்.

இமான் அண்ணாச்சி

இமான் அண்ணாச்சி தமிழ் நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் குட்டி சுட்டிஸ் என்ற சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மக்கள் தொலைக்காட்சியில் “சொல்லுங்கண்ணே சொல்லுங்க” என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார்.

அபிஷேக் ராஜா

அபிஷேக் ராஜா, பிரபல சினிமா விமர்சகர். அவர் யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். யூடியூபில் தன்னை ஒரு அதி மேதாவி போல உணர்ந்து கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வரும் இவர் சினிமா பையன் என்று தனக்கே செல்லப் பெயர் வைத்துள்ளார்.

நிரூப் நந்தகுமார்

நிரூப் நந்தகுமார் இவர் ஒரு மாடல். அது மட்டுமல்லாமல் முந்தைய சீசனில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்தின் பாய் பிரண்ட் ஆவார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!