‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வனிதா, ஜூலி & அனிதா? ரசிகர்கள் உற்சாகம்!

0
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வனிதா, ஜூலி & அனிதா? ரசிகர்கள் உற்சாகம்!
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வனிதா, ஜூலி & அனிதா? ரசிகர்கள் உற்சாகம்!
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வனிதா, ஜூலி & அனிதா? ரசிகர்கள் உற்சாகம்!

பிக் பாஸ் நிகழ்ச்சி டிவியை தவிர OTT தளத்திலும் வெளியாக இருப்பது குறித்த விஷயம் உண்மை என்று உறுதியாகியுள்ள நிலையில், தற்போது அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் OTT:

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக உள்ளது. தற்போது நாட்டின் 18 மொழிகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே அவர்கள் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத பிரபலமாக மாறி விடுகின்றனர். இதனால் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை நிரூப்பிக்கும் வகையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது அதிக பிரபலமடைந்து, சினிமாவில் ஏகப்பட்ட வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் புதிய ட்விஸ்ட் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

முதன்முதலில் தொடங்கப்பட்ட ஹிந்தி பிக்பாஸ் தற்போது 15வது சீசனில் உள்ளது. இதில், டிவியில் மட்டுமே ஒளிபரப்பாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியை OTT தளத்திலும் கடந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்தனர். டிவியில் தொகுத்து வழங்கும் சல்மான் தான் OTT தளத்திலும் தொகுத்து வழங்குகிறார். இதனை தொடர்ந்து தமிழில் OTT தளத்தில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது. அதில், இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்களின் பட்டியலில் இருந்தும் பாதி பேரும், புதிதாக பாதி பேரும் போட்டியாளராக களம் இறக்க உள்ளனர்.

இந்த தமிழ் OTT பிக் பாஸ் நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார். அதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன்படி தற்போது வனிதா, ஜுலி, அனிதா சம்பத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மூவருமே சரியான போட்டியாளர்கள் என்பதால் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!