பிரியங்காவை வம்புக்கு இழுக்கும் அபிஷேக் – பிக்பாஸ் 3வது ப்ரோமோ ரீலிஸ்!!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் நான்காவது நாளான இன்று, நடைபெறும் நிகழ்வுகள் குறித்த மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்று கொண்டிருக்கிறது. முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் இருக்காது என போட்டியாளர்கள் தைரியமாக இருக்கின்றனர். மேலும் அனைவரும் ஒற்றுமையுடன் அனைவரிடமும் நட்பு பாராட்டி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் வழக்கமான சீசன்களில் பெண் போட்டியாளர்களுக்கு இடையே தான் சண்டை நடக்கும், ஆனால் இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களுக்கு இடையே முட்டிக் கொள்கிறது.
பாக்கியாவிற்கு பண உதவி செய்யும் கோபியின் அப்பா, அதிலும் சிக்கல் – வெளியான “பாக்கியலட்சுமி” ப்ரோமோ!!
அதற்கு மூல காரணமாக யூடுபர் அபிஷேக் தான் இருக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் அபிஷேக் பிரியங்காவுடன் முட்டிக் கொள்கிறார். ஆனால் வழக்கம் போல பிரியங்கா அபிஷேக்கை கலாய்த்து விடுகிறார். இந்நிலையில் இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நமீதா பிரியங்காவிடம் யாரும் சாப்பிட்டதை சின்க்கில் போடமாட்றாங்க, நான் சொன்னால் கேட்கமாட்டார்கள் என சொல்லி புகார் செய்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஸ்டார்ட் மியூசிக் ஷோவில் பிரபலங்கள்!
உடனே வெளியே வந்த பிரியங்கா பொதுவாக அனைவரிடமும், எல்லாரும் சாப்பிட்டால் பாத்திரங்களை சின்க்கில் போட வேண்டும் என சொல்ல, நமிதாவும் சேர்ந்து சொல்கிறார். உடனே எழுந்த அபிஷேக் இப்போ ஏன் நீ CM ஆக வேண்டும் என்று சொன்னேன் என புரிகிறதா என கேட்க, உடனே பிரியங்கா அப்போ அவன் தான் வைத்திருப்பான் என சொல்கிறார். உடனே அபிஷேக் பிக்பாஸிடம் குறும்படம் போட சொல்லி கேட்கிறார்.