அபிநய் முகத்திற்கு நேராக போட்டுக் கொடுத்த பாவணி – சூடுபிடிக்கும் போட்டி! வெளியான ப்ரோமோ!
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது மெல்ல சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், பாவணி அபிநய் முகத்திற்கு நேராக அவரை மற்ற போட்டியாளர்கள் முன்னிலையில் போட்டுக் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் ப்ரோமோ 3:
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் முடிந்து விட்டது. ஆரம்பத்தில் மிகவும் அமைதியாக போய்க்கொண்டிருந்த நிகழ்ச்சியை பார்த்து ரசிகர்கள் புலம்ப தொடங்கினர். சுவாரசியம் இல்லாமல், சண்டைகள் இல்லாமல் நிகழ்ச்சி செல்வதாக கருத்துக்கள் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே ஒரு சிலர் மட்டுமே நிகழ்ச்சியில் பேசி வருகின்றனர் என்றும் மற்றவர்கள் அனைவரும் அமைதியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
நாகசைதன்யாவுடன் விவாகரத்திற்கு பிறகு சமந்தா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் ஷாக்!
ஆனால் ரசிகர்களின் இந்த கருத்தை மாற்றும் விதமாக கடந்த வாரம் முதல் காரசாரமான வாக்குவாதங்கள் தொடங்கியிருக்கிறது. அனைத்து பிரச்சைகளிலும் அபிஷேக் பண்ணும் ட்ராமாக்கள் தான் ஹைலைட். யாரையும் பேச விடாமல் அவர் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார் என்ற கருத்து உலவி வருகிறது. இன்றைய நாளில் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சி குறித்த மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபியின் நடிப்பு – வைரலாகும் வீடியோ! விமர்சிக்கும் ரசிகர்கள்!
அதில், பாவணி அபிநயிடம் வந்து வருண் தன்னை பற்றி தவறாக பேசியதாக சொல்லியதை ஒப்புக்கொள்ளுமாறு கேட்கிறார். அதற்கு அபிநய் ஏதோ சொல்ல முயலும் போது, பாவணி, “வருண் நீ என்னை பற்றி தவறாக பேசியதாக அபிநய் என்னிடம் கூறினார்” என்று சொல்கிறார். இதனால் அபிநய் பாவணியை சமாதானம் செய்ய முயலுகிறார். இதனால் ஏதோ பெரிய பிரச்சனை இன்று காத்திருக்கிறது என்பது தெரிகிறது.