பிக்பாஸ் வீட்டில் நிரூப் பிரியங்கா நட்பை சேர்த்து வைத்த ப்ரியங்காவின் தம்பி – வெளியான கடைசி ப்ரோமோ!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் நிரூப் பிரியங்காவின் நட்பை பற்றி பிரியங்கா தம்பி கருத்து ஒன்று சொல்லி இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு மக்களின் ஆதரவுடன் 80 நாட்களை நெருங்கி உள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது டாப் 10 போட்டியாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் யார் இறுதி வாரம் வரை இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் ரசிகர்களுக்கு பிடித்தமான ப்ரீஸ் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்களின் நெருங்கிய சொந்தங்கள் நிகழ்ச்சிக்கு வருகின்றனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் நிஜ மனைவியுடன் வெளியிட்ட போட்டோ – ரசிகர்கள் வாழ்த்து!
இன்றைய எபிசோடில் பாவ்னி சொந்தங்கள் மற்றும் பிரியங்காவின் அம்மா தம்பி வருவது போல ப்ரோமோ வெளியாகி உள்ளது. அம்மாவை பார்த்த பிரியங்கா சந்தோஷத்தில் குழந்தை போல அழுது கொண்டே ஓடி வருகிறார். இந்நிலையில் பிரியங்கா அம்மா தம்பி உடன் பேசிக் கொண்டிருக்கும் போது நிரூப் எதோ கொண்டு வந்து கொடுக்கிறார். அப்போது நீங்க இருவரும் நல்ல நண்பர்கள் தான என பிரியங்காவின் தம்பி கேட்கிறார்.
விஜய் டிவி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பாவ்னி? ரசிகர்கள் ஷாக்!
ஆமாம் என நிரூப் சொல்ல, அப்போ பிரியங்காவிடம் இருந்து ஏன் விலகி போறீங்க என்று கேட்கிறார். இருவரும் தனி தனியாக கேம் விளையாடாமல் இருந்தால் எல்லாரும் நண்பர்கள் அதனால் தான் விட்டுக் கொடுப்பதாக சொல்கிறார்கள் என்று நிரூப் சொல்ல, அப்படி எதுவும் வெளியே வரவில்லை, நீங்க இருவரும் தனி தனியாக தான் விளையாட்டில் விளையாடுறீங்க என சொல்ல, அப்படியா என கேட்ட நிரூப் சரி இனிமேல் நண்பர்கள் என பிரியங்காவிற்கு கை கொடுக்கிறார்.