விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 அமீர் பற்றி பாவனியிடம் பேசும் குடும்பத்தார் – ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி 'பிக்பாஸ்' சீசன் 5 அமீர் பற்றி பாவனியிடம் பேசும் குடும்பத்தார் - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி 'பிக்பாஸ்' சீசன் 5 அமீர் பற்றி பாவனியிடம் பேசும் குடும்பத்தார் - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 அமீர் பற்றி பாவனியிடம் பேசும் குடும்பத்தார் – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்று வரும் பிரீஸ் டாஸ்கில் போட்டியாளர் பாவனியை பார்க்க வந்த குடும்பத்தார் அமீர் பற்றி பேசுவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பிக்பாஸ் ப்ரோமோ

தற்போது 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக பயணித்து கொண்டிருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. ஆரம்பத்தில் அடிதடியாக இருந்து வந்த போட்டியாளர்கள் பலரும் இந்த ‘பிக்பாஸ்’ சீசனின் கடைசி நாள் நெருங்க ஆர்வமாக டாஸ்குகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் போட்டியாளர்களுக்கான இந்த வார லக்சுரி பட்ஜெட் டாஸ்கில், பிரீஸ் டாஸ்க் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு ‘பிக்பாஸ்’ சீசனிலும் தவறாது இடம்பிடித்து வரும் இந்த பிரீஸ் டாஸ்க் மக்களின் பேவரைட் ஆக இருந்து வருகிறது.

பிரசவத்திற்கு பின் “பாரதி கண்ணம்மா” வெண்பா கணவருடன் வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

அந்த வகையில் இந்த வாரம் ‘பிக்பாஸ்’ போட்டியாளர்களை காண்பதற்காக அவர்களது குடும்பத்தார் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அதன் படி டாஸ்க் துவங்கி இதுவரை 3 நாட்கள் கடந்துள்ள நிலையில் போட்டியாளர்கள் அக்ஷரா, சிபி, நிரூப், ராஜு ஆகியோரின் குடும்பத்தில் இருந்து பலர் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்தனர். இந்த வரிசையில் அடுத்தபடியாக பாவனியை காண்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர் அவரது குடும்பத்தார்.

அமிர்தா அம்மா அப்பாவிடம் மனதில் உள்ளதை சொன்ன எழில், வருத்தத்தில் இருக்கும் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இது தொடர்பாக வெளியான இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில், வீட்டுக்கு வரும் குடும்பத்தாரை ஓடி சென்று வரவேற்கிறார் பாவனி. பிறகு உள்ளே சென்று அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பாவனியிடம், நன்றாக போட்டியை விளையாடுவதாக சொன்னவர்கள் அமீருடன் பாவனி பேசுவது வேறு விதமாக வெளியே தெரிவதாக சொல்ல அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்பது போல பாவனி பதில் சொல்கிறார். இந்த விதமாக வெளியான ப்ரோமோ தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!